விபத்து ஒன்றிலிருந்து ஒரு பெண்ணை அவரது முலைகளே காப்பாற்றிய ஆச்சரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது லிசா என்ற பெண் காரில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்து இன்னொரு வாகனத்துடன் கடுமையாக மோதியுள்ளது.
நுரையீரல் சிதைந்த நிலையிலும், விலா எலும்பில் நான்கு வெடிப்புக்களுடனும், மூக்கு உடைந்த நிலையிலும் தீ அணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவரது தாயாரிடம் முக்கியமான விடயம் ஒன்றைக் கூறினார்கள்.
அதாவது அவளது முலையில் ஏற்கனவே அறுவைச்சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்ட சிலிக்கன் ஜெல் மட்டும் இல்லாவிட்டால் அவள் விபத்து நடந்த இடத்திலேயே இறந்திருப்பாள். அவை தான் தக்க சமயத்தில் airbag ஆக தொழிற்பட்டு அவளது இருதயத்தைப் பாதுகாத்தது.
குறித்த துயரமான சம்பவம் தொடர்பாக லிசா கருத்துத் தெரிவிக்கையில்,
நான் பழுதடைந்த நுரையீரலாலும் நொறுங்கிய விலா எலும்புகளாலும் கடுமையாகப் பாதிக்கப்படுள்ளேன்.
ஆனால் எனது chicken fillets க்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். ஏனெனில் அவை தான் எனது உயிரைப் பாதுகாத்தன. வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அன்று கார் ஓடி வரும் போது சீட் பெல்டையும் அணியவில்லை.
ஆனால் அதிஷ்டவசமாக விபத்து நடந்த அன்று இரவு இரண்டு implants பொருத்தப்பட்ட பிராவை அணிந்திருந்ததால் தப்பினேன்.
30E அளவில் 4000 ஸ்டேர்லிங் பவுண்கள் செலுத்தப்பட்டு பெரிதாக்கப்பட்ட முலைகள் தான் எனது உயிரைப் பாதுகாத்தது என்பதை பேரதிசயமாகப் பார்க்கிறேன் என்கிறார் அவர்.
No comments:
Post a Comment