Showing posts with label செக்ஸ் கேள்வி-பதில். Show all posts
Showing posts with label செக்ஸ் கேள்வி-பதில். Show all posts

Saturday, June 1, 2013

சாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்?


ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் கொள்ளையோ… கொள்ளைதான்
Download As PDF

Wednesday, October 5, 2011

ஆண்களுக்கு ஏன் மார்பகம் வளர்கிறது?



ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக்கான ஹார்மோன். டேஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்மைக்கான ஹார்மோன். ஆனால் ஆண், பெண் இரு பாலருக்குமே, இந்த இரண்டு ஹார்மோன்களும் சுரக்கும். ஆனால் ஆண்களுக்கு டேச்டோஸ்டிரோன் அதிகமாகவும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகவும் சுரக்கும்.
டீன் ஏஜ் பருவத்தில், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அபரிமிதமாக சுரக்கும், இது மிகவும் இயல்பான விசயமே. இதனால் தான் டீன் ஏஜ் பருவத்தில், ஆண்களுக்கு மார்புகள் சற்றே பெரிதாகும், முலைகள் வீங்கி காணப்படும். இது ஆறு மாதத்தில் இருந்து இரண்டு வருடங்கள் வரை இருக்கும், பின்பு சரியாகி விடும்.அதனால் டீன் ஏஜ் பருவத்தில் உங்கள் மார்பகம் பெரிதானால் கவலைப்பட ஒன்றுமில்லை.

Gynecomastia_Male_Breasts_Treatment_1
Download As PDF

ஆணுறுப்பின் தோல் உரியவில்லை! மருத்துவ ஆலோசனைகள்!



ஹலோ டாக்டர்,
என் ஆண் உறுப்பு செக்ஸ்இல் இருக்கும்போது கூட தோல் உரியாமல் அப்படியே இருக்கிறது அதேபோல நான் என் உறுப்பு மொட்டையும் (penis glans) கூட பார்த்ததில்லை, மேல் தோல் ரொம்ப டைட் ஆக இருக்கிறது, இதற்கு என்ன தீர்வு?
-மனோஜ், சின்னதுரை, சாரதி, மற்றும் பலர்

விடை:

உங்களுக்கு இருக்கும் பிரச்சனைக்கு ஆங்கிலத்தில் பைமாசிஸ் ( Phimosis) என்று சொல்லுவார்கள். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு, ஆண்குறியின் மொட்டை தோல் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ
Download As PDF

Saturday, August 20, 2011

பாலியல் உறவு என்றால் என்ன?


பாலியல் உறவு என்றால் ஆணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்வது. எப்படியெனில் ஆணின் பாலியல் உறுப்பை பெண்ணின் யோனிக்குள் புகுத்துவது.

உன்னத நிலை என்ன வென்றால் இருபாலாரும் பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது. ஆண் உறுப்பு புடைத்தெழவும் பெண்ணின் யோனிப் பகுதி ஈரமாயிருக்கவும் ஆன நிலை. பெண்ணின் யோனிப் பகுதி ஈரமாயிருப்பதற்குக் காரணம், பல்வேறு பகுதிகளிலிருந்து சுரக்கும் ஈரப் பதார்த்தங்களே. யோனிப்பாகம் ஈரமாயிருந்தால் ஆணின் பாலியல் உறுப்பு எளிதாக உட்புகும்.

Download As PDF

Friday, August 19, 2011

செக்ஸ்: ஒரு “புள்ளி” விவரம்!


செக்ஸ் என்றாலே, “அது ஒரு மர்மம்” என்பதுபோலத்தான் பாவிக்கப்படுகிறது உலகத்தின் வளர்ந்த, இடைப்பட்ட மற்றும் பின்தங்கிய என எல்லா நாடுகளிலும். விளைவு, செக்ஸ் பற்றிய விவரங்களை அறிய ஒரு அதீத ஆர்வம், ஒரு இனம்புரியாத தயக்கம், ஒரு புத்துணர்ச்சி என பல வகையான உணர்வுகள் நம்மை ஆட்கொண்டு விடுகின்றன! சரி, செக்ஸ் பத்தின ஒரு செய்திக்கே இவ்வளவு பில்டப்புன்னா, உலகத்துல இருக்கிற எல்லா மக்களோட செக்ஸ் பத்தின ஒரு புள்ளி விவரம்னா கண்டிப்பா ஒரு “கிக்” இருக்கத்தானே செய்யும்?!
புள்ளி விவரம்ன உடனே இந்தியாவுல மொத்தம் 40 கோடியே 68 லட்சம் விடலை பசங்க/பொண்ணுங்க இருக்காங்க, அவங்கள்ல 20 கோடி பேர் கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு முறையாவது செக்ஸ் வச்சிக்கிறாங்க….அப்படின்னு நம்ம “புள்ளி விவரம் கேப்டன்” விஜயகாந்த் மாதிரி பட்டியல் (ப்ளேடு!) போடப் போறேன்னு  நெனச்சிடாதீங்க மக்களே! இது ரொம்ப சின்ன பட்டியல்தான். ஆனா, கொஞ்சம் சுவாரசியமான, அதே சமயத்துல ஆச்சரியமான புள்ளி விவரங்கள பத்திதான் நாம இப்போ பார்க்க போறோம்!

ஆமாம், நாம ஏன் உடலுறவு வச்சிக்கிறோம்?

எத்தன பேரு இப்படி கெளம்பி இருக்கீங்க?! அப்படின்னு கேட்காதீங்க! உண்மையாலுமே நாம் எதுக்கு செக்ஸ் வச்சிக்கிறோம்னு பார்த்தா, பாலுணர்வு தூண்டப்படுவதால் (அதாங்க….”மூடு” வர்ரதுனால!) அப்படின்னு ஒரு நேரடியான காரணமிருந்தாலும்,  நம் சந்ததியை உருவாக்க அப்படின்னு ஒரு  அறிவியல்பூர்வமான காரணம் ஒன்னு இருக்குங்கோவ்! சரி நாம் இப்போ ஒரு முக்கியமான புள்ளி விவரத்துக்கு வருவோம்.
உலகத்துலேயே மிக அதிகமான குழந்தைங்கள பெற்ற பெண்மணி யாரு தெரியுமா உஙகளுக்கு? அவங்க 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ரஷ்யப் பெண். உலகத்துலேயே அதிகமான குழந்தைங்கள பெற்ற பெண் அப்படிங்கிற உலக சாதனை படைச்சவங்க! அவங்களுக்கு மொத்தம் எத்தனை குழந்தைங்க தெரியுமா? 69 குழந்தைங்க! இந்த குழந்தைங்கள மொத்தம் 27  பிரசவத்துல, 16 இரட்டைக்குழந்தைகள், 7 மூன்று குழந்தைகள் மற்றும் 4 முறை நான்கு குழந்தைகள் வீதம் பெற்றெடுத்துருக்காங்க. அடேங்கப்பா!
இருங்க இருங்க, அதுக்குள்ள இப்படி ஆச்சரியப்பட்டா எப்படி? ஆம்பிளைங்க மட்டும் சளைச்சவங்களா என்ன? அப்படின்னு  நம்மாளு ஒருத்தரு உலகத்துலயே அதிகமான குழந்தங்களுக்கு அப்பா அப்படிங்கிற கின்னஸ் சாதனையை படைச்சு கலக்கிட்டார்ல?! அவரு 17- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மொராக்கோ நாட்டு மன்னர். நம்மாளு மொத்தம் 342 மகள்கள், 525 மகன்கள், ஆக  867 குழந்தைங்களுக்கு அப்பா. அடேங்கப்பா! நாங்க சிங்கம்ல!?  சரி அடுத்த மேட்டருக்கு வருவோம்…

ஆமா “அதோட” அளவுக்கும், திருப்தியான  செக்ஸுக்கும் உண்மையிலேயே ஏதாவது சம்பந்தம் இருக்குதா?

சேச்சே….அதெல்லாம் சும்மா டுபாக்கூரு! ஊரை ஏமாத்தறதுக்காக எவனோ போட்ட பிட்டு! சினிமாவுல காட்டறதெல்லாம் சும்மா. அறிவியல் ஆய்வுப்படி, உணர்ச்சிவசப்பட்ட  “அதோட” சராசரி அளவு 5-7 இன்ச்சுதானாமுங்க! அவ்வ்வ்…!

நாம உடலுறவு வச்சுக்க, உதவி எதாவது தேவையா?

40 வயதான சுமார் 5 விழுக்காடு ஆண்களும், 15-25 விழுக்காடு 65 வயதான ஆண்களும் “எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன்” அப்படிங்கிற ஒரு பிரச்சினையை அனுபவிக்கிறாங்களாம்! அப்படின்னா கண்டிப்பா “….க்ரா” தேவையோ?!

சராசரியா மக்கள் தங்கள் கற்பை எந்த வயசில இழக்கிறாங்க?

அமெரிக்க ஆண்கள் 16.9 வயசிலயும், பெண்கள் 17.4 வயசிலயும் தங்கள் கற்ப்பை இழக்கிறாங்களாம். இதுக்கு மரபனுவியல் சம்பந்தமான காரணங்கள் கூட அடிப்படையா இருக்க்லாமுன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க!

கல்யாண ஆன எத்தன பேரு நிம்மதியா தூங்கறாங்க?

அமெரிக்காவுல, கல்யாணமான ஆண்/பெண்கள்ல பத்துல ஒருத்தர் (12 விழுக்காடு) தாங்கள் இரவில் தனியாக தூங்கறதா சொல்லியிருக்காங்க! என்ன கொடுமை சரவணன் இது?!

ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும் உச்சகட்டதை (ஆர்கஸம்) அடைவீங்களா?

இந்த கேள்விக்கு, 75 விழுக்காடு ஆண்கள் ஆம் என்றும், வெறும் 29 விழுக்காடு பெண்கள் ஆம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்!

“அந்த” மாதிரி சுகம் மட்டும் கொடுக்கிற நண்பர்கள் இருக்காங்களா?

மூன்றில் இரண்டு பங்குஅமெரிக்க கல்லூரி மாணவர்கள் ” அந்த மாதிரி” நண்பர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டதாகவும், அந்த மாதிரி நட்புக்கு கமிட்மென்ட் இல்லாத ஒருவர் அவசியம் அப்படின்னும்  சொல்லியிருக்காங்க!  அதுமட்டுமில்லாம, நண்பர்களுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட 50 விழுக்காட்டினர் எல்லா விதமான காம விளையாட்டுகளிலும் ஈடுபட்டதாகவும், 22.7 விழுக்காட்டினர் புணர்ச்சி மட்டும் வைத்துக்கொண்டதாகவும்,  8 விழுக்காட்டினர் புணராமல், இன்ன பிற கேளிக்கைகளில் மட்டும் ஈடுபட்டதாகவும் சொல்லியிருக்காங்க!

இதுவரைக்கும் எத்தனை செக்ஸ் பார்ட்னர் இருக்காங்க உங்களுக்கு?

இந்தக் கேள்விக்கு, 20-50 வயதுக்குட்பட்ட பெண்கள் செக்ஸ் பார்ட்னர் என்றும், ஆண்கள்7 என்றும் சொல்லிருக்காங்க! இதத்தான் கலிகாலம்னு சொல்றாங்க போலிருக்கு?!
இப்போ நாம ஒரு அதிமுக்கியமான மேட்டருக்கு வருவோம், அதாங்க “புள்ளி ராஜா மேட்டரு”!

செக்ஸ் விளையாட்டில் ஈடுபடுவோருக்கு செக்ஸ்  சம்பந்தமான தொற்று நோய்கள் வருமா?

தொடர்ந்து செக்ஸில் ஈடுபடுவோரில், குறைந்தது 50 விழுக்காட்டினருக்கு “HPV Infection” (Human Pappilloma Virus) அப்படிங்கிற ஒருவித வைரஸ் கிருமியால வர்ர நோய் வாழ்க்கையில ஒரு முறையாவது வருமாம்!  இந்நோயை இரு வகையாக பிரிக்கலாம்.  இரண்டு வருடங்களில் குணமாகக்கூடிய  ஆபத்தில்லாத நோயாகவும், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நோயாகவும் வரும் வாய்ப்பு இருக்கிறதாம்!  கவலைப்படாதீங்க, 90 விழுக்காடு வரை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின்மூலம் இந்நோயை விரட்டி அடித்துவிடலாமாம்! வயித்துல பால வாத்துட்டாங்கப்பா?!
Download As PDF

Wednesday, August 17, 2011

பாலியல் - பளிச் பதில்கள்



இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்கின்றனவா? இதோ சில பொதுவான சந்தேகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்....

ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?

பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ் வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது.

தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?

உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில பெண்களுக்கு உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம் தெரியப்படுத்தி, அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத் திரவங்களை உபயோகிக்கலாம்.

குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா?

பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும். ஆனால் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?

நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள் ஏற்பட்டு, மாத விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலுமோ தள்ளிப் போகலாம்.

கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?

கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள தண்ணீரின் சேமிப்பு காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும், மென்மையான உணர்வும் ஏற்படலாம். ஆனால் மார்பக அளவு கூட வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள் உண்டு. அதனாலும் மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்.

பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?

ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின் தாக்குதலால் இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கிற்கு முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில் ஏற்படுகிற வேதி மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால் பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்?

ஒரு வருடம் வரைக் காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும் பின்பற்றாமல் தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர் ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது.

பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?

பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது தானாக வந்து தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற் கான பிற காரணங்கள். தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு ஏற்படலாம்.

* பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா?

சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும் மருத்துவரிடம் ஒருமுறை நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம்.

ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?

சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம் இது பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த போதும் கர்ப்பமடைகிறார்கள்.
Download As PDF