Showing posts with label தாம்பத்தியம். Show all posts
Showing posts with label தாம்பத்தியம். Show all posts

Wednesday, August 17, 2011

பெண்ணுக்கு உடலுறவு வேட்கைக் காலம்



இன்னமும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு பெண், ஒரு மாத காலத்தில், இயல்பாகவே உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்மைக அதிகம் உள்ள குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சில நாட்கள் உள்ளன.
இத்தகைய உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை அதிகமாக உள்ள கால கட்டத்தை. அவள் கருப்பபையில் ஊறும் பெண்மைச் சுரப்பி நீர் ஏற்படுத்தித் தருகின்றது.

அந்தக் கால கட்டம் எது?
பெண்ணின் கருப் பையிலிருந்து, மாதம் ஒரு நாள் கரு முட்டை ஒன்று வெளியாகின்றதல்லவா? அந்தக் கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்தக் கால கட்டத்தில், எந்தப் பெண்ணுமே உடலுறவு கொள்ள விழைவாள். பெண் கருமுட்டை வெளியாகும் காலத்தில், அவள் ஓர் ஆணோடு உடலுறவு கொண்டால், அந்த உடலுறவு நேரத்தில், ஆணிடமிருந்து வெளியாகின்ற ஆண் விந்தில் உள்ள கரு முட்டையும் இணைந்து குழந்தை உருவாகி விடும்.

ஆம் உயிரின உற்பத்திக்காக உடலுறவை ஏற்படுத்திய ஆண்டவன், ஒரு பெண்ணிடம் இத்தகைய நிலையை உருவாக்கி, இன உற்பத்தியில் அவளைச் சிக்க வைக்கச் செய்த சதிதானோ இது*
Download As PDF

உடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்



உடலுறவு வேட்கை- 

உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங்கள் ஆகக் கருதப்படுகின்றன.
ஒருவருக்கு, விந்து விதைகளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது போன்ற நிலைகளில் எடுத்து விட்டால், அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை குறைந்தோ, அல்லது, அறவே இல்லாமலோ போய்விடுகின்றது.

ஆண் குறி விறைத்தல்- 

ஆண் குறி விறைப்பதற்கு, அதன் இயற்கை அமைப்புப் பெரிதும் துணை நிற்கின்றது.
ஆண் குறியின் ஊடே செல்லும் மூத்திரக் குழய் என்றும் யூரீத்ராவை சுற்றி கடல்பாசி போன்ற மென் பெருள் உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, இந்த மென் பொருளைச் சுற்றி, குகை போன்ற அறைகள் உள்ள அமைப்புக்கள் கொண்ட, இரத்த நாளங்கள் தாராளமாக வளைந்து நௌpந்து செல்லும் கவர்னோசம் என்னும் இன்னொரு பொருள் போர்வை போல ஆண்குறியைச் சுற்றிக் கிடக்கின்றது.

ஆன் குறியில் உடலுறவு சமயத்தில், விறைப்பு ஏற்பட, இந்தப் போர்வைப் பொருள் மிகவும் பயன்படுகின்றது.

ஆண் குறியில் உடலுறவு சமயத்தில், விறைப்பு ஏற்பட, இந்தப் போர்வைப் பொருள் மிகவும் பயன்படுகின்றது.

உடலுறவு நேரத்தில், இந்தப் போர்வை போன்ற பொருளின் உள்ள குகை போன்ற சின்னஞ்சிறு அறைகளில், இரத்த ஓட்டம் வெள்ளம் போலப் பிரவாகமாக பெருக்ககெடுத்துச் சூடேற்றி ஆண் குறியை விறைக்க வைக்கின்றது.

இவ்வாறு இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், இரத்த ஓட்டம், பன்மடங்காக, ஆண்குறியில் பெருகுவதற்கு, அதில் உள்ள உணர்ச்சிகளைக் கிளறும் நம்புகள் காரணமாக உள்ளன.

இந்த நரம்புகள், ஆண்குறி, உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் கிளர்ச்சி நிலையாலும், மூளை மூளைசார்ந்த மத்திய நரம்புப் பகுதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மன நிலை காரணமாகவும் செயல்படலாம்.

ஆகவேதான், வாலிபப் பருவத்தில் உள்ள ஓர் இளைஞன், எழில் பூத்துக் குலுங்கும் ஒரு பருவ மங்கையைப் பார்க்கின்ற மாத்திரத்திலேயே, அவன் ஆண் குறி விறைப்பு அடைகின்றது.

ஒழுக்க சீலன் ஆக வாழும் இளைஞனுக்கும் இந்த நிலை ஏற்படலாம்.

இஃது இயற்கை அன்னை, மனிதனின் உடலில் இயல்பாகச் செய்து காட்டும் சித்து விளையாட்டு ஆகும்.
Download As PDF

Tuesday, August 16, 2011

தாம்பத்தியம் தழைக்க தங்கமான யோசனைகள்




#    தாம்பத்தியத்தின் வெற்றிக்கும் தொடர் வெற்றிக்கும் கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த - புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ / அசைவ உணவுக் கூறுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும்.

#    எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது.

#    உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உடலுறவு செய்வது கூடாது. இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும்.

#    உறவுக்கு முன் இனிமையான உரையாடலும், உணர்வுப்பறிமாறலும், முன்விளையாடலும் உறவு முழுமைபெற உதவும். தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் தாம்பத்தியம் அரைகுறையாக அலங்கோலமாக ஆகிவிடும்.

#    அன்றாட வாழ்வில் அலையலையாய் வரும் குடும்ப பிரச்சனைகளில் கணவன் மனைவியரிடையில் கருத்துவேறுபாடுகள், மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படும். அது நீடிக்கக்கூடாது. பரஸ்பரம் புரிதலோடு பேசித் தீர்க்க வேண்டும். மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இயங்கி தேகவேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி.

#    தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடிவரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம்.

#    வயது அதிகமாகும் போது. ... தாம்பத்திய உறவு இயலாமல் போய்விடுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல.

#    கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர். புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பேசினால் அநாகரீகம் அப்படிச் செய்தால் அநாகரீகம் என்று எண்ணத் தேவையில்லை. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்க்கை நெறிப்படி சரியானதுதான்.

#    கணவனுக்கும் மனைவிக்கும் தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் இருப்பதில்லை.ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும். பெண்ணுக்கு விருப்பமில்லாதபோது தொல்லை தரக்கூடாது என்றெண்ணி அடக்கிக்கொள்கிறான். இது தொடர்கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே பெண்கள் ஆண்களின் மனநிலையறிந்து இயன்றளவு தங்களை சரிசெய்துகொள்ளுவது இல்லறத்தை இனிக்கச் செய்யும். அடிக்கடி உடலுறவு கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு.ஆண்கள் அவர்களது விருப்பம் அறிந்து உதாசீனப்படுத்தாமல் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும். பரஸ்பர மனவிருப்பம், தேவை அறிந்து உடல் எழுச்சியை வரவழைத்து தாம்பத்தியம் மேற்கொள்வது தம்பதியரிடம் என்றென்றும் இறுக்கமான பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படுத்தும்.
நன்றி:http://www.keetru.com
Download As PDF