Showing posts with label பாலியல் சந்தேகங்கள். Show all posts
Showing posts with label பாலியல் சந்தேகங்கள். Show all posts

Tuesday, January 29, 2013

ஆண் பெண் நட்பு


மற்றவருடன் பழகுவது என்பது நட்பாகவும் இருக்கலாம், இல்லைகாதலாகவும் இருக்கலாம். இது சூழ் நிலையை பொறுத்து அமையும். சில சமயங்களில் அப்படி பழகு வதற்கும் நம் சுய நம்பிக்கை மிகவும் தடையாக இரு க்கும். இத்தனை நாளும் நாம் மற்றவ ருடன் பேசுவது, பழகுவது பற்றி கூச்சம் கொண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்து, நம்பிக்கை யுடன் அடுத் தவரிடம் எப்படி பேசலாம், எப்படி பழக லாம் என்பதை மனதில் கொண்டு,அனைவரிடமு ம் நம் மால் பழக முடியும் என்பதற்கு இதோ
Download As PDF

Wednesday, September 12, 2012

பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் தெரியுமா?


கூந்தல், கழுத்துப்பகுதி, அக்குள்பகுதி, வயிறு (தொப்புள்), பாதங்கள் ஆகிய இடங்களை தொட்டா லோ அல்ல‍து வருடினாலோ பெண்களு க்கு  ஒருவித தனிச்சுகம் கிடைப்ப தாக ஆய்வில் தெரிய வந்துள்ள‍து. 
கூந்தலை வருடுவது
பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களி ன் மனஅழுத்தமும், பாரமும் நீங்கு வதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலை
Download As PDF

ம‌ணம் வீசும் மணவாழ்க்கைக்கு . . .



திருமணத்திற்கு முன்பு அடிக்கடி கூறும் ஐ லவ் யூ” என்ற வார்த்தைதிருமணத்திற்குப்பின் காணாமல் போய் விடக்கூடாது. வார்த்தை யால் கூறுவதைவிட உ ண்மையா ன அன்பை செயல்கள்மூலம் புரிய வைக்கவேண்டும். உங்களின் அன்பை முழுமையாக உணர வை க்கவும் முயற்சிக்கவேண்டும். திருமணத்திற்குப் பின்னரும் தம்ப தியரிடையே காதல் இருந்தால் மட்டுமே மண வாழ்க்கை மகிழ்ச்சிக ரமனதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ம‌ணம் வீசும் மண வாழ்க்கைக்கு அவர்கள் கூறும்
Download As PDF

Wednesday, October 5, 2011

ஆண்களுக்கு ஏன் மார்பகம் வளர்கிறது?



ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக்கான ஹார்மோன். டேஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்மைக்கான ஹார்மோன். ஆனால் ஆண், பெண் இரு பாலருக்குமே, இந்த இரண்டு ஹார்மோன்களும் சுரக்கும். ஆனால் ஆண்களுக்கு டேச்டோஸ்டிரோன் அதிகமாகவும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகவும் சுரக்கும்.
டீன் ஏஜ் பருவத்தில், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அபரிமிதமாக சுரக்கும், இது மிகவும் இயல்பான விசயமே. இதனால் தான் டீன் ஏஜ் பருவத்தில், ஆண்களுக்கு மார்புகள் சற்றே பெரிதாகும், முலைகள் வீங்கி காணப்படும். இது ஆறு மாதத்தில் இருந்து இரண்டு வருடங்கள் வரை இருக்கும், பின்பு சரியாகி விடும்.அதனால் டீன் ஏஜ் பருவத்தில் உங்கள் மார்பகம் பெரிதானால் கவலைப்பட ஒன்றுமில்லை.

Gynecomastia_Male_Breasts_Treatment_1
Download As PDF

ஆணுறுப்பின் தோல் உரியவில்லை! மருத்துவ ஆலோசனைகள்!



ஹலோ டாக்டர்,
என் ஆண் உறுப்பு செக்ஸ்இல் இருக்கும்போது கூட தோல் உரியாமல் அப்படியே இருக்கிறது அதேபோல நான் என் உறுப்பு மொட்டையும் (penis glans) கூட பார்த்ததில்லை, மேல் தோல் ரொம்ப டைட் ஆக இருக்கிறது, இதற்கு என்ன தீர்வு?
-மனோஜ், சின்னதுரை, சாரதி, மற்றும் பலர்

விடை:

உங்களுக்கு இருக்கும் பிரச்சனைக்கு ஆங்கிலத்தில் பைமாசிஸ் ( Phimosis) என்று சொல்லுவார்கள். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு, ஆண்குறியின் மொட்டை தோல் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ
Download As PDF

Tuesday, August 23, 2011

செக்ஸ் கல்வி A TO Z

செக்ஸ் குறித்த முழுமையான மருத்துவ தகவல்கள் அடங்கிய
 மூன்று புத்தகம்






  இதை கொரியரில் பெற
 STATE BANK OF INDIA (SBI) NAGERCOIL. NAME: A.KUMARESAN SB A/C 10843391057
 பணம் செலுத்தி உங்கள் முகவரியை SMS செய்க.





பாலியல்(செக்ஸ்) குறைபாடுகளுக்கும்,ஆண்மைக் குறைவுக்கும்,பெண்மைக்குறைவுக்கும் (பெண்களுக்கு பெண் மருத்துவர்,பெண் ஆலோசகர் மூலம்) சிகிச்சை,ஆலோசனை பெற தொடர்பு கொள்க.

சோலார் மாற்று மருத்துவம்,
கிருஷ்ணன்கோவில்,
நாகர்கோவில் 629001.கன்னியாகுமரி மாவட்டம்.
கைபேசி +91 94436 07174
Download As PDF

Friday, August 19, 2011

“அந்த” ஹார்மோனின் லீலைகள்!


உங்க எல்லாருக்குமே தெரியும் வயசுக்கு வந்த ஒவ்வொருத்தரையும், இந்த ஹார்மோன்கள் என்ன பாடுபடுத்தும்னு! அதாங்க, “மைனர் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா” அப்படின்னு சொல்லுவோமில்ல?!
பொதுவா, வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு புத்துணர்ச்சி, கிளர்ச்சி எல்லாம் உண்டாகுறதுக்கு காரணம், அவங்க உடம்புக்குள்ள இருக்கிற சில ஹார்மோன்கள் பண்ற சேட்டைதான்!
சரி,  நாம முக்கியமான விஷயத்துக்கு வருவோம். நீங்க எல்லாருமே எதாவதொரு வயசுல காதல்வயப்பட்டிருப்பீங்க, அதனால உங்களுக்கு காதல்னா என்னன்னு தெரியும். ஆனா, உங்களுக்கு “காதல் ஹார்மோன்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு (அது எதுன்னு) தெரியுமா?
படம்:கூகுள்
“ஆக்ஸிடோசின்” அப்படிங்கிற ஹார்மோனைத்தான் காதல் ஹார்மோன்னு சொல்றாங்க மருத்துவர்கள்.  ஆமா, ஏன் அப்படிச் சொல்றாங்க?
இந்த ஹார்மோன் பொதுவா, மகப்பேறு காலங்கள்லயும், உடலுறவு சமயங்கள்லயும் அதிகமா சுரக்குமாம்! அதுமட்டுமில்லாம “உடலுறவுக்கு” அடிப்படையே இந்த ஆக்ஸிடோசின்தானாம்!
காதல்ன உடனே அது ஒரு இனம்புரியாத உணர்வு, தெய்வீக உணர்வு அப்படின்னெல்லாம் சொல்லுவாங்க இல்லியா?
ஆனா, அடிப்படையில “காதல்” அப்படின்னா என்னன்னு (மருத்துவ ரீதியா) பார்த்தோமுன்னா,  மனுஷனோட பொதுவான உணர்வுகளான, “அன்பு, நம்பிக்கை, பரிவு, தியாக உணர்வு”, இப்படி பல வகையான உணர்வுகளோட ஒரு அழகான கலவைதான் காதல் அப்படின்னு சொல்லலாம்!
மேல சொன்ன அத்தனை உணர்வுகளையும் கட்டுபடுத்தக் கூடிய ஹார்மோன்தான்  இந்த ஆக்ஸிடோசின் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! அதனால தான் இந்த ஹார்மோனை காதல் ஹார்மோன்னு சொல்றாங்களோ?!
ஆனா இப்போ, மேட்டரு அது இல்ல! மேல குறிப்பிட்ட எல்லா நல்ல உணர்வுகளுக்கும் காரணமான அதே  ஆக்ஸிடோசின்தான் தீய உணர்வுகளான “பொறாமை, வக்கிரம்” போன்றவற்றுக்கும் அடிப்படைன்னு சமீபத்துல கண்டுபுடிச்சி இருக்காங்க ஹைஃபா பல்கலைகழகத்தச் சேர்ந்த ஆய்வாளர்கள்!
என்னாங்கடா இது…..அப்படின்னு தானே யோசிக்கிறீங்க?! இப்படித்தான் அந்த ஆய்வாளர்களும் ஆச்சரியம்/அதிர்ச்சியடைஞ்சாங்களாம்!  எப்படி யோசிச்சாலும் உண்மை அதுதானாம்?! ஒன்னும் சொல்றதுக்கில்ல!!
இதுவரைக்கும், அன்பு மாதிரியான நல்ல உணர்வுகளுக்கு மட்டுமே  அடிப்படைன்னு நெனச்ச ஆக்ஸிடோசின், வக்கிரம் மாதிரியான தீய உணர்வுகளுக்கும் காரணமா இருக்கிறது ஒரு பக்கம் அதிர்ச்சியா இருந்தாலும், “ஆட்டிசம்” போன்ற நோய்களுக்கான சிகிச்சையில இத பயன்படுத்தலாம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!
சரி, “ஆக்ஸிடோசின்” பத்தி படிச்சது படிச்சோம், இன்னும் கொஞ்சம் வெவரமா தெரிஞ்சிக்கலாமில்ல….. வாங்க இந்த காணொளியப் பார்ப்போம்!
சரிங்க, ஆக்ஸிடோசின் பத்தி சுவாரசியமான விஷயம் எதாவது உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்….
Download As PDF

Tuesday, August 16, 2011

பாலியல் சந்தேகங்கள்




என் ஆண் குறி சிறியதாய் உள்ளது. அதை பெரிதாக்க ஏதேனும் வழியுள்ளதா?

உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சையால் மட்டுமே அது முடியும். நிரந்தரமாக உங்கள் குறியை பெரிதாக்குவதாக சொல்லும் மாத்திரைகள், களிம்புகள், ஆயுர்வேதம், சிறப்பு உடற்பயிற்சி, பெரிதாக்கும் கருவிகள் மற்றுமுள்ள தொழில் நுட்பங்கள் எதுவும் பயன் அளிக்கக் கூடியவை அல்ல. உங்கள் குறியை பெரிதாக்குவதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகலாம். மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, இதற்கான அறுவை சிகிச்சையும் அபாயகரமானது மற்றும் சிக்கலானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உங்கள் குறி மிக மிகச் சிறியதாக இருந்தால் மட்டுமே அநேக மருத்துவர்கள் உங்களை சிகிச்சைக்கு அனுமதிப்பார்கள்.

நிரந்தர வடு, உணர்ச்சியற்றுப் போதல், செயலிழத்தல் அல்லது அளவில் மாற்றம் ஏற்படாமல் மனதில் ஏற்படும் ஏமாற்றம் இவற்றில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதே இந்த அறுவை சிகிச்சையின் சிக்கல். பெரும்பாலான ஆண்கள் தங்கள் குறியின் அளவு குறித்து வருந்துகிறார்கள். மேலும் குறியின் அளவு இன்னும் நீளமாகவோ, தடிமனாகவோ இருந்தால் தங்கள் இணையை மேலும் திருப்திப்படுத்தலாம் என்றும் நினைக்கிறார்கள். இதில் உண்மை இருப்பது போல் தோன்றினும், எப்போதும் குறியின் அளவுக்கும் இன்பத்தின் அளவிற்கும் தொடர்பு இல்லை என்பதே உண்மை.

முதலில் ஆண்குறிகளின் அளவு குறித்து சில உண்மைகளை நாம் பார்ப்போம். விறைத்த ஆண் குறிகளில் 90% 12-17 செ.மீ (5-7இன்ச்) நீளமும், 2.5-5 செ.மீ (1-2 இன்ச்) தடிமனும் உடையதாய் இருக்கிறது. நீளமான அல்லது தடிமனான குறியினால் மட்டும் உங்கள் இணையை திருப்திப்படுத்திவிட முடியாது என்பதே உணமை. உங்கள் இணையின் தேவை அறிந்து, உங்கள் இணையின் உடல் அறிந்து செய்யும் சேவைகளே முழு திருப்தி தருவதாக பெரும்பாலான பெண்கள் ஒரு கணக்கெடுப்பில் சொல்லியிருக்கிறார்கள்.

Download As PDF

பாலியல் சந்தேகங்கள்




முதன்முறையாக உறவில் ஈடுபடும்போது, வலி ஏற்படுமா?

பெரும்பாலான பெண்கள் முதன்முறை உறவில் ஈடுபடும்போது வலியை உணர்கிறார்கள். வலி உண்டாவதற்கு முதன்மை காரணமாக இருப்பது, பெண் உறுப்பை மூடி இருக்கும், சருமத்தின் உட்புற அடுக்கான 'கன்னி சவ்வு' முதன் முறை உறவு கொள்ளும் போது கிழிய நேரிடுவதே ஆகும். ஆனால் இது எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு 'கன்னி சவ்வு ' இருக்குமானால், முதல் உறவின் போது, வலியோ, அல்லது சிறிய அளவிலான இரத்தப்போக்கோ ஏற்படலாம் அல்லது ஏற்படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சில பெண்கள் வலியை உணர்வதே இல்லை, அது போல் எல்லா பெண்களுக்கும் 'கன்னி சவ்வு' கிழியும் போது இரத்தப் போக்கு நிகழ்வதில்லை. சில பெண்களுக்கு 'கன்னி சவ்வு' இல்லாமலே இருக்கும்.

மேலும் சில பெண்களுக்கு, கன்னி சவ்வானது, முதன் உறவுக்கு முன்னரே கிழிந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. இது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலேயோ, அல்லது விபத்திலோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதாலோ நிகழலாம். உறவில் ஈடுபட பால் ரீதியாக ஒரு பெண் தயாராகும்போது, அவளுக்கு தானகவே சுரக்கும் திரவமானது , உறவின் போது உராய்வை குறைக்கும். ஆனால் இது எல்லோர்க்கும் நிகழ்வதில்லை, அதே போல் இந்த திரவ சுரப்பு மட்டுமே, உறவினால் ஏற்படும் வலியை குறைக்க போதுமானதல்ல. முதன்முறை உறவுகொள்வோர் தாங்கள் பால் ரீதியாக உடல் உறவுக்கு தயாரானவரா என்பதை உறுதி செய்துக்கொண்டு , பின்பு தயக்கம் ஏதும் இன்றி உறவில் ஈடுபடலாம். உறவின் போது உராய்வை குறைக்க, கிளிசரின் அற்ற முறையான திரவங்களை மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம்.

உறவுக்கு முன்பான, உங்கள் பொழுதை மகிழ்ச்சி தரும் சிற்றின்ப விளையாட்டுகளில் கழிப்பது, உங்கள் உறுப்பை உடலுறவின் போது ஊடுருவலுக்கு தயாரானதாய் மாற்றும். உறவின் போது வலியானது , உறுப்பின் ஆழத்திலும், அதிகமாகவும் இருக்குமானால், அது மேற்குறிப்பிட்டது போல் சாதாரணமாக எல்லோர்க்கும் நிகழ்பவை அல்ல. உறவினாலான வலி கிருமிகளின் தொற்றுதலுக்கோ அல்லது வேறு ஏதாவது மருத்துவ நிகழ்வின் அறிகுறியாகவோ இருக்கவும் வாய்ப்பு உண்டு. பெரும்பாலும் இது, உங்கள் உறுப்பு பால் ரீதியாக உறவுக்கு இன்னும் தயாராகவில்லை என்பதன் அடையாளமாக கூட இருக்கலாம். எப்போதுமே நீங்கள் உறவு கொள்ளும்போது வலி இருந்தால், உடனடியாக நீங்கள் மருத்துவரை சந்திப்பதே நல்லது.

Download As PDF

பாலியல் சந்தேகங்கள்




வாழ்க்கையை வளைக்கும் லிங்க வளைவு

ஆணின் பாலுறுப்பான லிங்கத்தில் ஏற்படும் வளைவை 1743ல் பிரெஞ்ச் நாட்டின் பிரான்சுவா தெலா பைரோலி என்பவர் கண்டுபிடித்துக் கூறிய காரணத்தினால் இந்த வியாதியின் பெயரும் அவருடைய பெயரும் அவருடைய பெயரோடு ஒட்டி பைரோனி வியாதி என்று அழைக்கப்படுகிறது.

வியாதியின் மூலக்காரணங்கள்

வயது வரம்பு: பொதுவாக இந்த லிங்கவளைவு என்னும் சிரமான வியாதி முப்பத்தைந்திற்குப் பிறகும் எழுபது வயதிற்கு கீழேயும் உள்ள ஆண்களின் பாலியல் உறுப்பான லிங்கத்தை வளைத்து சிக்கலாக்குகின்ற முறை உலக அளவில் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். பொதுவாக ஓர் ஆண் மகனின் ஐம்பது வயதிற்குப் பிறகும் வயதாகிய முதுமை நிலைக்கு முன்பாகவும் உள்ள வயதின் நடுநிலைப்பகுதியின் பின்பகுதியின் பின்பகுதியில் உள்ள ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது.

பரம்பரையும் வியாதியும்: பொதுவாக இது பரம்பரை வழியாக வருகின்ற வியாதியாக இல்லாவிட்டாலும் சில நேரங்களில் அடுத்தடுத்து சகோதர்களைத் தாக்குகின்ற நிலைமை ஏற்பட்டதை மருத்துவ உலகம் கண்டுபிடித்துள்ளது.

காயம் இணைந்த வளைவுத்தன்மை: லிங்கத்தின் விரைப்புத்தன்மைக்குக் காரணமான இருபக்கமும் அமைந்துள்ள சதைப்பகுதி காயம் அடைவதாலும் விரல் விடுவதாலும் இப்படிப்பட்ட ஒருநிலை உண்டாவதைத் தடுக்கமுடியாது. ஆனால், சில நேரங்களில் தூக்கத்திலோ அல்லது உடலுறவுகொள்கின்ற நேரங்களிலோ இப்படி ஏற்படுகின்ற சதை வீரல் அல்லது காயம் நாளடைவில் இந்த வியாதிக்கு அடிப்படையாக அமைவதுண்டு. சில நேரங்களில் இந்த அவல நிலை ஏற்படாமல் சீரடைவதும் உண்டு.

சிறுநீர்த் தாரை அழற்சி, பாலியல் வியாதிகள் மற்றும் லிங்க் வளைவு: செஸ்னியம், பர்காடும் தங்களுடைய ஆய்வில் வாழ்க்கையின் ஒழுக்க முறையில் தவறுகின்ற ஆண்களை ஆய்வுசெய்து பாலியல் நோய்கள் மற்றும் கிருமிகளின் அழற்சிகள் இப்படிப்பட்ட நிலையை உருவாக்குவதை கணித்துள்ளார்கள்.

லிங்க இரத்த குழாய் அடைப்பும் அதன் வளைவும்: ஆணின் பாலுறுப்பான லிங்கத்தை இரத்தக்குழல்களான தமனியும் சிறையும் மிக அளவு கடந்து இருப்பதோடு சில நேரங்களில் இரத்த உறைவு ஏற்பட்டு அந்த உறை சிறைகளில் அடைப்பை ஏற்படுத்துவதுண்டு. இந்த அடைப்பால் ஏற்படும் தடையும் தடிப்பும் நாலடைவில் ஒரு சுருக்கத்தையும் வளைவையும் லிங்கத்தில் ஏற்படுத்துவதுண்டு. இதுவே இணைந்துள்ள விரைப்பில் சதைப் பகுதியைத் தாக்கி அதற்குரிய செயலை சீர்கெடவைத்து இப்படிப்பட்ட லிங்க வளைவை ஏற்படுத்துவதுண்டு.

மற்ற காரணங்களும், லிங்க வளைவும்: நீண்ட ஆராய்ச்சியில் இதைப்போன்ற சதை மாற்றங்கள் எப்படி லிங்க வளைவை ஏற்படுத்துகின்றதோ அதைப்போன்று உடம்பில் வேறு பகுதிகளில் இப்படிப்பட்ட மாற்றங்கள் உண்டாக்குவதைக் கண்டுபிடித்துள்ளார்கள். கைகளில், நம்முடைய ஐந்து விரல்கள் இணைந்துள்ள உள்ளங்கையோடு தொடர்கின்ற மணிக்கட்டுப் பகுதியில் இப்படிப்பட்ட சதைச் சிதைவும் சதைச் சுருக்கமும் சதை நெருக்கமும் ஏற்பட்டு கைகளில் மணிக்கட்டிற்குரிய நீட்டி மடக்கும் தன்மை பாதிக்கப்பட்டு ஒருவித ஊன நிலை ஏற்படுவதுண்டு. இதனால் மணிக்கட்டு கீழ்ப்புறமாக வளைந்து மேல்நோக்கி நீட்ட முடியாத ஒரு நிலையில் பாதிக்கப்பட்டவர் சிரமப்படுவது உண்டு. இந்த நிலையில் துன்பப்படும் சிலருக்கு லிங்கத்தில் ஏற்படும் வளைவை பைரோனி வியாதி என்று கூறுவது போன்று இந்த மணிக்கட்டில் ஏற்படும் வளைவை டெட்பூட்ரியன் என்பவரின் பெயரோடு இணைந்து டெப்பூட்டிரியன் வளைவு என்று கூறிகிறோம். இதே போன்ற மாற்றங்கள் சிறுநீரகத்திலிருந்து கீழ்நோக்கி வருகின்ற சிறுநீர்க் குழாய்களை சுற்றியுள்ள சதைகளில் ஏற்பட்டு அங்கே சிறுநீர்த்தேக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அதேபோன்று சிலருடைய தோலில் ஏற்படுகின்ற சிறிய காயங்கள் பெரிய வடுக்களாக மாறி அழகைக் கெடுப்பதும் உண்டு. இப்படிப்பட்ட வியாதிகள் பலநேரங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல சகோதர சகோதிரிகளைப் பாதிப்பதும் உண்டு.

நோயின் தன்மை: பொதுவாக ஆணினுடைய பால் உறுப்பான லிங்கத்தின் அதுவும் மேல்பகுதியில் உள்ளே கட்டி போன்றும் மேலே அதை இணைக்கின்ற தோல்உருமாறியும் வடுபோன்றும் காட்சியளிக்கும். அதைத் தொட்டுப்பார்க்கின்ற பொழுது அந்த இடத்தில் உள்ள சதையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை மிக நன்றாக உணரலாம். முன்பு கூறியதைப் போன்றே விரைப்புத்தன்மைக்கு உரிய இரண்டு பகுதிகளாக உள்ள நீண்ட சதை நார்கள் அதற்குரிய தன்மை இழந்து நார் போன்ற செல்களின் கூட்டத்தினால் இந்தப் பாதிப்பை ஏற்படுத்தி மஞ்சை போன்று சதைகள் உருமாறி, வறண்டு சுருங்கி அந்த சதைக்குரிய இயற்கையான தன்மையை அழித்து இவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் லிங்கம் வளைகின்ற ஒரு நிலையை உண்டாக்கிவிடுவதே கண்கூடாகும். இதற்கு உரிய காரணம்தான் என்ன? ஆய்வு செய்த மருத்துவ உலக நிபுணர்கள் அவர்களுக்கு உரிய நிலையில் சில காரணங்களை காட்டினார்கள் என்றாலும் இன்னும் ஒரு முடிவான காரணத்தை கூற இயலவில்லை. ஒரு சில மருத்துவர்கள் ஆய்வு செய்து கூறுகின்றபோழுது சிறுநீர்த் தாரையில் ஏற்படும் நுண்கிருமிகளின் தாக்கத்தால் அழற்சியுறும் சிறுநீர்த்தாரையில் மற்றும் அதனுடைய சுற்றுப்புறமுமே இதற்குக் காரணம் என்று கூறுகின்றார்கள். மேலும், இந்த நுண்கிருமிகள் கூட பாலியல் வியாதியில் சம்பந்தப்பட்ட நுண்கிருமிகளின் தாக்கமே அதிக அளவில் இப்படிப்பட்ட மாற்றத்தை உண்டாக்குகிறது என்பது இவர்களுடைய வாதம். ஆனால், இந்தக் கருத்துக்கு எதிர்மறையானவர்களும் உண்டு. அவர்கள் கூறுவது என்னவென்றால் சிறுநீர்த்தாரையில் ஏற்படும் நுண்கிருமிகளின் தாக்கம் அதைச் சுற்றியுள்ள சதையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் சில தடையான சதைகளைத் தாண்டியிருக்கின்ற உணர்ச்சியூட்டும் சதையை எப்படிப் பாதிக்கும்?

இது ஒரு நல்ல வாதமே, எப்படியிருந்தாலும், இந்த மாற்றத்தினால் அந்த சதையில் உள்ள இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு வேறு நார் போன்ற சதைகளால் நல்ல சதைகள் மாற்றப்பட்டு நாளடைவில் ஒரு எலும்பிற்குரிய குணத்தை உண்டாக்கக்கூடிய சதை மாற்றம் உண்டாவது கண்கூடு. இதேபோன்ற நிலைதான் கையின் மணிக்கட்டுப் பகுதியில் ஏற்படும் வளைவு நிலைக்கும் காரணமாகும். ஒரு முக்கியமான ஆய்வு என்னவென்றால் இந்த சதை மாற்றம் ஆண் லிங்கத்தின் மற்ற பகுதிகளைவிட மேல்புறப்பகுதியையே அதிகம் பாதிக்கிறது.

நோய் வெளிப்பாடு:

1. லிங்கத்தில் ஏற்படும் ஊனம் மற்றும் வளைவு.
2. கட்டி போன்ற உணர்வு.
3. வலி, குறிப்பாக விரைப்பு ஏற்படும் பொழுதும், உடல்உறவு கொள்ள நினைக்கும் பொழுதும்.
4. பேடித்தன்மை.

இந்தக் கடைசி நிலை ஏற்படுவதற்குக் காரணம் லிங்கத்தில் ஏற்படும் வலியும் அந்த வளைவும் நாளடைவில் பெண் பாலியல் உறுப்போடு இணைய முடியாத அவல நிலை ஏற்படுவதால் தான். லிங்கம் கல்போன்றும் எலும்பு போன்றும் மாறி லிங்கம் வளைந்துவிடுவதால் இந்த நிலை ஏற்பட்டு ஒரு ஆண் பேடிமைக்கு ஆளாகின்றான்.

சிகிச்சையில்லா நிலையில் ஏற்படும் இயற்கையான மாற்றங்கள்: உலகின் சில மருத்துவ நிபுணர்கள் இந்த வியாதி எந்த வித சிகிச்சைமுறையும் இல்லாமலேயே நாளடைவில் மறைந்துவிடுவதாகக் கூறியுள்ளார்கள். ஆனால், எங்கோ ஒரு சில விதிவிலக்கான நிகழ்ச்சியல்ல. இவர்களுடைய கூற்றுப்படி முதலில் வலி மறைந்துவிடுகிறது. அடுத்து கட்டிபோன்றும் உள்ள வடு மறைகின்றது. அதற்கடுத்து லிங்கத்திற்கு உரிய நீளும் தன்மை திரும்பி வரப்பெற்று வளைவு மறைகின்றது. இறுதியில் லிங்கம் தன்னுடைய முழுமையான இயற்கை உருவை திரும்பப் பெறுகின்றது என்று கூறுகின்றார்கள். ஆனால் இது மிக மிக அதிசயமான ஒன்றாகும். அப்படியானால் இதற்குரிய வைத்திய முறைகள் என்ன? ஆய்வு என்ன? அடுத்து சிந்திப்போம்.

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

Download As PDF