Thursday, September 8, 2011

நீண்ட நேர இன்பத்துக்கு காமசூத்திரம் கூறும் வழிமுறை


தாம்பத்ய உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. 

குரல் நன்றாக இருப்பதற்கு சில விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது. அதாவது,. ஜாதிக்காய், ஏலக்காய், திப்பிலி, வெட்டிவேர், பழைய பழச்செடியின் இலை இவற்றை நசுக்கி ஆணும், பெண்ணும் சாப்பிட்டு வந்தால், இனிமையான குரல் வளம் உண்டாகும். நல்ல குரல் வளம் இருந்தால், ஒருவரை ஒருவர், பேச்சிலேயே கவர்ந்திழுத்து அடிக்கடி கலவியில் ஈடுபட ஏதுவாகும் என்பது இதன் உள் நோக்கமாகும். 

உடல் வனப்பு என்பதும், ஒருவரை ஒருவர் கவர மிக முக்கிய அம்சம். ஒரு பெண் எத்தனை தான், வயதில் சிறியவளாக இருந்தாலும், அவளது உடலில் வனப்பு, ஒரு மினுமினுப்பு இல்லையென்றால், ஆணை கவர்ந்திழுப்பது கடினம். எனவே, ஆண், பெண் தங்கள் உடல் அழகைப் பேணிக்காக்க வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். அப்போது தான், இருவருக்குள்ளும் நல்ல சுமுகமான உறவு நிலைத்திருக்கும். இதற்கும் ஒரு உபாயம் சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன...? 

எள், பழம், மஞ்சள், கோரக்கிழங்கு இவற்றை நன்றாக நசுக்கி நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், ஆண்., பெண்ணின் உடல் தங்கம் போல தளதளக்க ஆரம்பிக்குமாம். இன்னும் சில ஆண்களுக்கு ஆண்குறியில் விரைப்புத்தன்மை குறைவாக இருக்கும். இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கையில் புயல் வீசி குடும்பமே ஆட்டம் கண்டு விடும். அப்படிப்பட்ட ஆண்களின் குறையை நிவர்த்தி செய்யவும் ஒரு பக்குவம் சொல்லப்பட்டிருக்கிறது. 

அதாவது, எள். வெள்ளரிக்காய், இவற்றை ஒன்றாக அரைத்து ஆட்டுப்பால், தேன் இவற்றுடன் கலந்து தொடர்ந்து 7 நாட்களுக்குச் சாப்பிட்டு வர வேண்டும். அப்படிச் சாப்பிட்டு வந்தால், ஆண்குறியில் நல்ல விரைப்பு உண்டாகும். சுகமான தாம்பத்யம் அமையும். இன்னும் சில ஆண்களுக்கு ஆண்குறி விரைப்பில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் உடலுறவு கொள்ள ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களில் விந்து வெளியேறி விடும். இதனால் பெண்ணும் உச்சக்கட்ட இன்பத்தை அடைய முடியாமல், அவர்களது உறவில் விரிசல் ஏற்படும். 

இப்படி விந்து உடனேயே வெளியேறாமல் இருக்கவும், காமசூத்திரம் ஒரு வழி கூறுகிறது. அது என்ன? 

ஜாதிக்காய், விஷ்ணுகாந்தம், கன்னியாகுமரி வேர் இவற்றை நன்றாக அரைத்து மாத்திரையாகச் செய்து வாயில் அடக்கிக்கொண்டு பெண்ணோடு உடலுறவு கொள்ளும் ஆணுக்கு அவ்வளவு எளிதில் விந்து வெளிவராது,. நீண்ட நேரம் இருவரும் இன்பம் அனுபவிக்க முடியும் என்கிறது காமசூத்திரம்.
Download As PDF

No comments:

Post a Comment