Thursday, September 1, 2011

காமசூத்திரம் 03: காதல் எப்படி மலர்கிறது…?



“காதல் எப்போது மலரும்? எப்படி மலரும்? யாருடன் மலரும்? ஏன்
மலரும்?, எந்த வயதில் மலரும்? என்று யாருக்குமே தெரியாது. ஏனென்றால் இடம், பொருள் மற்றும் காலம் இவை மூன்றுக்குள் காதல் அடங்கிவிடாது. ஆனால் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் காதல் மலரும்.”
நீங்கள் விரும்புகிற பெண்ணை உங்களுக்கு மணம் செய்து கொடுக்க அந்தப்
பெண்ணின் பெற்றோர் மறுக்கலாம். அந்நிலையில் அவளிடம் மன்றாடி காந்தர்வமணதுக்கு அவளுடைய ஒப்புதலை பெறலாம்.
அவள் வயதில் மிகவும் இளையவளாய் இருந்தால் மலர்களையும்.
விளையாட்டுக் கருவிகளையும் பரிசாய் வழங்கலாம். நாட்டுப்புறத்தில் பிரசித்தமான விளையாட்டுக்களை அவளுடன் விளையாடலாம்.
(சில்லு விளையாட்டு. கண்ணமூச்சி. ஓட்டம் இப்படி)
அவள் எதையெல்லாம் கண்டு வியக்கிறாளோ. வியந்து பாராட்டுகிறாளோ அதையெல்லாம் அவளுக்கு வாங்கி கொடுங்கள். மரம்.கொம்பு. தந்தம் இவற்றில் செய்த பொம்மைகளை அவளுக்கு தந்து மகிழ்ச்சியுட்டலாம்.
கிளிகள் . மைனாக்கள் அடைத்த கூண்டுகளையும். சங்கு. சோழி வகைகளையும் கொடுக்கலாம். நறுமணப் பொருள்கள் அடங்கிய குப்பிகள். வெள்ளி கிண்ணங்கள் கொண்ட வண்ணப் பேழையைக் கொடுக்கலாம்.
அவள் கேட்டதை எல்லாம் வாங்கி தருவீர்கள் என்ற எண்ணத்தை
அவளுக்குள் ஏற்ப்படுத்துங்கள். ஆமாம். ஏன் அவள் கேட்டால் உன் பெற்றோரிடம் உள்ள பயத்தால்தான் என்றோ உன் தோழிகள் பொறாமைப் படுவார்கள் என்றே சொல்லுங்கள்.

சந்திப்போமா…?
உன்னிடம் முக்கியமான விசயம் பேச வேண்டி இருக்கிறது என்று கூறி அவளை இரகசிய சந்திப்புக்குத் தயார் செய்யுங்கள். தங்கள் கணவரை தாங்களாகவே வரித்துக் கொண்ட சகுந்தலை. தமயந்தி போன்றவர்களின் கதையை பேசுங்கள்.
அவளுடைய பணிப்பெண் அல்லது செவிலித்தாயின் மகளைப் புகழ்ந்தும்.
பரிசளித்தும் வசப்படுத்துங்கள். அந்தப் பெண் உங்களுக்கு உதவிகரமாயிருப்பாள். பெண்ணுக்கு ஏதாவது ஒரு கலையில் ஈடுபாடு இருக்கும். உதரணமாக. இசையை விரும்பும் பெண்ணின் மனதில் இடம்பிடிக்க இனிமையாய் பாடுங்கள்.

உங்கள் இருவருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்ப்பட்டு விடாதபடி கவனமாய் நடந்து கொள்ளுங்கள். மற்ற இளைஞர்களைவிட இவர் கலைகளில் தேர்ச்சி பெற்றவர். நல்லவிதமாய் பழகக் கூடியவர். நற்பண்புகள் நிரம்பியவர் என்று அவளுடைய தோழி மூலம் அவளாகச் சொல்கிற மாதிரி காதல் பெண்ணின் காதுக்கு எட்டச் செய்யுங்கள்.
ஒரு நல்ல காதலனாக மட்டுமன்றி நல்ல கணவனாகவும் நடந்து கொள்வீர்கள் என்பதை அவளுக்கு பரிய வையுங்கள். இருவரும் கண்டு மகிழ்கிற மாதிரி சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். அவளைச் சந்திக்கச் செல்லுமுன் தூய உடைகளை அணியுங்கள்.உங்கள் முன்னிலையில் அவள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்தே உங்களுடைய ஆடை அணிகள் அவளைக் கவர்ந்திருக்கின்றனவா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்…!
Download As PDF

No comments:

Post a Comment