Showing posts with label விந்து முந்துதல். Show all posts
Showing posts with label விந்து முந்துதல். Show all posts

Thursday, August 18, 2011

காமம் பெருக்கும் மருந்து சால்மலி சூர்ணம்


எந்தவித உதிரபோக்கையும் குணப்படுத்தும் -காமம் பெருக்கும் மருந்து 
சால்மலி சூர்ணம்
(ref-பாவப்ரகாச நிகண்டு)


தேவையான மருந்துகள்:

  இலவம்பிசின் – சால்மலி நிர்யாஸ (போதிய அளவு)


செய்முறை:    

சுத்தமான இலவம் பிசினை நன்கு பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.


அளவு:          

1 முதல் 3 கிராம் வரை நோய்க்கு ஏற்றவாறு 2-3 வேளைகள் கொடுக்கவும்.


அனுபானம்:    

தேன், வெண்ணெய், நெய், பால்.


தீரும் நோய்கள்: 


 பெரும்பாடு (அஸ்ரிக்தர), இரத்த சீதபேதி (ரக்தாதிசார), இரத்த மூலம் (ரக்தார்ஷ), மூச்சு மண்டலம், உணவு மண்டலம் போன்ற உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தப்போக்கு (ரக்தபித்த), ரத்தம் பீறிடும் மற்ற நிலைகள் (ரக்தஸ்ராவ) மற்றும் ரத்த இருமல், ரத்தம்துப்புதல் போன்ற நிலைகள் மேற் கூறிய நிலைகளில் லாக்ஷா சூர்ணத்துடன் இதனை சேர்த்து வழங்குவது வழக்கமாகும்.


எல்லாவிதமான இரத்தபோக்கையும் குணப்படுத்த ,அடோதொடை சேர்ந்த மருந்துகள் அல்லது இம்பூரல் சேர்ந்த மருந்துகளோடு நான் கொடுப்பதுண்டு -வாரபோக்கில் ,பல நாட்களாகியும்   நிற்காத மாத உதிரபோக்கை இந்த நல்ல மருந்து ஆங்கில மருந்தை விட வேகமாக நிறுத்தும் என்பது உண்மை ..

ஆண்களின் சீக்கிரம் விந்து வெளிபடுதலில் இந்த சால்மலி சூரணத்தை ,ஜாதிக்காய் சூர்ணம் ,ஓரிதழ் தாமரை சூரணத்துடன் ,மற்றும் பல துவர்ப்பு சுவை உடைய மருந்துகள் உடன் ,மேலும் பயிற்சிகள் (மூல பந்தம் போன்ற -யோக பயிற்சிகள் )-சரி செய்ய முடிகிறது ..

சால்மலி என்ற இந்த இலவம் பிசின் -குளிர்ச்சி தன்மை உடையது ,மேலும் இனிப்பு ,துவர்ப்பு சுவை உடையது ..
 

Read more: http://ayurvedamaruthuvam.blogspot.com
Download As PDF

ஆண்மை சக்தியை அதிகரிக்குமா ? அஸ்வகந்தாதி லேஹ்யம்


ஆண்மை சக்தியை அதிகரிக்குமா ? அஸ்வகந்தாதி லேஹ்யம்
 (ref-Ayurvedic Formulary of  India Part -1)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

சர்க்கரை (ஸர்க்கர) 600 கிராம் ½ அளவுக்கு எடுத்து நீரில் கரைத்து வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பாகு வந்தவுடன் பசுவின் நெய் (க்ருத) 150 கிராம் சேர்த்து 

அத்துடன்  

                                             
1.            அமுக்கிராக் கிழங்கு – அஸ்வகந்தா           60 கிராம்
2.            பால்முதுக்கன் கிழங்கு – விடாரீ               60           “
3.            நன்னாரி – ஸாரிவா                           60           “
4.            சீரகம் – ஜீரக                                  60           “
5.            பரங்கிப்பட்டை – மதுஸ்னுஹீ                  60           “
6.            சுக்கு – சுந்தீ                                   10           “
7.            மிளகு – மரீச்ச                                10           “
8.            திப்பிலி – பிப்பலீ                              10           “
9.            ஏலக்காய் – ஏலா                              10           “
10.          விதை நீக்கி அரைத்த திராக்ஷை – த்ராக்ஷா       50           “ 

                இவைகளைப் பொடித்துச் சலித்த சூரணத்தைச் சேர்த்து நன்கு கிளறி ஆறியபின்னர், பெரிய கண்ணூள்ள சல்லடையின் வழியே தேய்த்துச் சலித்து மிகச் சிறிய ரவைகளாக்கித் தேன் (மது) 300 கிராம் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும்.

              திராக்ஷையைக் கொத்டை முதலிய கசடு நீக்கி நன்கு விழுதாக அரைத்துச் சரக்குகளின் சலித்த சூர்ணத்துடன் முன்னதாகவே நன்கு கலந்துவிட வேண்டும்.

 அளவு:        

5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் இரு வேளைகள் கொடுக்கவும்.


 தீரும் நோய்கள்:    
    

சுக்கிலக் குறைவு எனப்படும் விந்து நட்டம் (அல்ப சுக்ர (அ) நஷ்டசுக்ர), பலவீனம் (பலக்ஷய (அ) அசக்த), இளைப்பு (கார்ஸ்ய), இரத்தக் குறைவு (ரக்தால்பத), குருதிச்சீர் கேடுகள் (ரக்த தோஷ), இரத்தக் கொதிப்பு, பரங்கிப்புண் (பிரங்கரோக), குருதியொழுகுமூலம் (ரக்தார்ஷ). இதற்கு உடல் வழுவைத் தரும் செய்கையும் (பால்ய), இளமையைத் தரும் செய்கையும் (ரஸாயன (அ) கல்ப), தாது புஷ்டியையும் காமத்தையும் அதிகரிக்கச் செய்யும் தன்மையும் (வாஜீ கரண), இரத்தத்தை சுத்தி செய்யும் தன்மையுமுண்டு.

அஸ்வகந்த லேஹியம் வெவ்வேறு பார்முலாக்கள்

1.மேலே சொன்ன பொதுவாக ஆயுர்வேதிக் பார்முலறி ஆப் இந்தியா என்ற நூலின் அடிப்படையில் தயாரிக்கப்டுகிற  பார்முலா 
  

2.யோக கிரந்தங்களின் அடிப்படையில் -கோட்டக்கல் போன்ற நிறுவனங்கள் ஆட்டின் மாம்சம் சேர்ந்த தனி பார்முலாவில் தயாரிக்கப்பட்ட அஸ்வகந்தா லேஹியமும் கிடைக்கிறது ..

இந்த பார்முலாவை அப்புறம் சொல்கிறேன் 

ஆட்டின் மாம்சம் சேர்ந்த வகைகளை சைவம் உண்பவர்களுக்கு கொடுப்பது நல்லதல்ல ,தேவை கருதி உள்ளே உள்ள பொருளை சொல்லி அவர்கள் சாப்பிடுவார்கள் என்றால் தரலாம் ...

3.அஜ அஸ்வகந்த லேஹியம் என்று சரக சம்ஹிதையில் ,இருமல் (காச ) சிகிச்சையில் கூறப்பட்டுள்ள ராச்னாதி கிருதம் என்ற பார்முலாவை -லேஹியமாக்கி -அஸ்வகந்த லேஹியமாக கிடைக்கிறது 

4.சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்படுகிற பார்முலா இது -இது சிகிச்சா ரத்தின தீபம் என்ற நூலின் அடிப்படையில் தயாரிக்கபடுகிறது -அதன் விவரம் கீழே ..


சித்த மருத்துவ முறைப்படி தயாரிக்கப்டும் -அசுவகந்தி லேஹியம் 
அஸ்வகந்தி லேகியம்

ref-சிகிச்சா ரத்தின தீபம்

சேரும் பொருட்களும், அளவும்:

அஸ்வகந்தி               10.78 % 
நெய்                             21.55 %
பசும்பால்                   43.10 %  
சர்க்கரை                  21.55 %
திராட்சை                  0.16 %  
பேரீச்சங்காய்       0.16 %
சந்தனம்                    0.16 %  
ஜாதிக்காய்                 0.16 %
கோரைக்கிழங்கு    0.16 %  
கடுக்காய்ப்பூ            0.16 %
கூகைநீர்                      0.16 % 
சுக்கு                           0.16 %
மிளகு                           0.16 %  
திப்பிலி                       0.16 %
விலாமிச்சம்வேர்     0.16 %  
கிராம்பு                        0.16 %
கண்டந்திப்பிலி       0.16 % 
செவ்வியம்                 0.16 %
சித்திரமூலம்              0.16 %  
இலவங்கப்பட்டை    0.16 %
ஏலம்                              0.16 %  
சீரகம்                            0.16 %
பச்சிலை                      0.16 %

அளவும், துணை மருந்தும் :


5 கிராம் முதல் 10 கிராம் வரை பாலுடன் தினம் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :


க்ஷயகாசம், சோகை, பாண்டு, காமாலை முதலிய நோய்கள் பரிகரிக்கப்பட்டு தேக புஷ்டி உண்டாகும். க்ஷயரோகத்தில் தேகம் இளைத்தவர்களுக்கு நாளுக்கு நாள் புஷ்டியை கொடுக்கும். மேலும் அவர்களுக்கு சுறுசுறுப்பை உண்டாக்கும். நல்ல பலத்தைக் கொடுக்கும்.










தெரிந்து கொள்ளவேண்டியவை 

  1. அஸ்வகந்தா லேஹியம் என்றால் ஆண்மை பெருக்கும் என்ற மாயை உள்ளது -அது தவறு .நன்னாரி ,பரங்கி பட்டை போன்ற மருந்துகள் சேர்வதாலும் -ஆண்மை அதிகரிக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை .
  2. அஸ்வகந்த லேஹியம் மூளை சார்ந்த நோய்களை போக்க ,வலிகளை குறைக்க ,தூக்கம் வர வைக்க பயன்படுத்தலாம் என்பது தான் எனது எண்ணம் ..நரம்பு தெம்புக்கும் தரலாம் 
  3. பொதுவாக சீமை அமுக்கரா கிழங்கை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று ஆயுர்வேத நூல்கள் சொல்கிறது ஆனால் அதிக விலையின் காரணமாக விலை குறைந்த நாட்டு அமுக்கரா கிழங்கையே பெரும்பான்மையான மருந்து கம்பெனிகள் சேக்கிறது என்பது மறுக்க முடியாத வேதனையான விஷயம் 
  4. ஆண்மை அதிகரிக்க ,இது போன்ற சாமாசாரங்களுக்கு வேறு ப்ரயத்யேகமான பல லேஹியங்கள் உள்ளது ..இது போன்ற விஷயங்களுக்கு எனது சாய்ஸ் இந்த அஸ்வகந்தா லேஹியம் அல்ல ..
  5. பல போலி வைத்தியர்கள் -இந்த அவகந்த லேஹியத்தின் லேபிளை கிழித்து மாற்றி அரை கிலோ லேஹியத்தை ஐயாயிரம்  ரூபாய்க்கும் மேல் விற்கிறார்கள் எனபதும் வேதனையான விஷயம் 
  6. எந்த ஆயுர்வேத மருந்தை தெரிகிறதோ இல்லையோ இந்த லேஹியத்தை தெரியாதவர்களே பொதுவாக கிடையாது 
  7. சித்த மருத்துவத்தில் செய்யகூடிய அஸ்வகந்த லேஹியம் பார்முலாவே வேறு என்று மேலே படித்தால் புரியும் 
  8. அஸ்வகந்தா லேஹியத்தில் ஆட்டு மாமிசம் சேர்கின்ற பார்முலாக்களும் உள்ளது என்பதை தெரிந்து வைத்தால் நல்லது .
  9. வலிகளை போக்க ,மன அமைதி பெற ,உடல் வலு பெற இந்த லேஹியத்தை பொதுவாக பயன்படுத்தலாம் 


Read more: http://ayurvedamaruthuvam.blogspot.com
Download As PDF

விந்து முந்துதலை குனப்படுத்தும் மூலிகை


விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
(ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            பசுவின் பால் – கோக்ஷீர                     800 கிராம்
2.            நெல்லிக்காய்ச்சாறு – ஆமலகீ ரஸ           800         “  

3.            பால் முதுக்கன் கிழங்குச்சாறு – விடாரீ ரஸ  800         “ 
4.            கரும்பின் ச்சாறு – இக்க்ஷூ ரஸ             800         “ 
5.            ஆட்டுமாம்ஸரஸம் – அஜமாம்ஸரஸ         800         “ 
6.            பசுவின் நெய் – க்ருத                        800         “ 
7.            தண்ணீர் – ஜல                            3.200     “

இவைகளை சேர்த்து அதில்

1.            கீரைப்பாலை – ஜீவந்தி                 12.500 கிராம்
2.            காகோலீ – காகோலீ                     12.500       “
3.            க்ஷீரகாகோலீ – க்ஷீரகாகோலீ           12.500       “
4.            மேதா – மேதா                              12.500       “
5.            மஹாமேதா – மஹாமேதா                  12.500       “
6.            காட்டுளுந்து வேர் – மாஷ பர்ணீ             12.500       “
7.            காட்டுப்பயிறு வேர் – முட்க பர்ணீ            12.500       “
8.            ருஷபகம் – ருஷபக                         12.500       “
9.            ஜீவகம் – ஜீவக                             12.500       “
10.          அதிமதுரம் – யஷ்டீ                         12.500       “
11.          சுக்கு – சுந்தீ                                12.500       “
12.          தண்ணீர்விட்டான் கிழங்கு – ஸதாவரீ        12.500       “
13.          கோவைக்கிழங்கு – பிம்பிமூல               12.500       “
14.          மூக்கரட்டை வேர் – புனர்னவ                12.500       “
15.          சித்தாமுட்டிவேர் – பலாமூல                 12.500       “
16.          கண்டுபாரங்கி – பார்ங்கீ                     12.500       “
17.          பூனைக்காலி வேர் – ஆத்மகுப்தாமூல        12.500       “
18.          கிச்சிலிக்கிழங்கு – ஸட்டீ                    12.500       “
19.          கீழாநெல்லிவேர் – பூ ஆமலகீ               12.500       “
20.          திப்பிலி – பிப்பலீ                           12.500       “
21.          ஸிங்காடா – ஸ்ருங்காடக                   12.500       “
22.          கீரைப்பாலை – ஜீவந்தி                      12.500       “
23.          கண்டங்கத்திரி – கண்டகாரீ                  12.500       “
24.          முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ                 12.500       “
25.          ஓரிலை – ப்ரிஸ்னிபார்னீ                    12.500       “
26.          மூவிலை – சாலீபர்ணீ                       12.500       “
27.          நெருஞ்சில் – கோக்ஷூர                     12.500       “
28.          திராக்ஷை – த்ராக்ஷா                        12.500       “
29.          அக்ரோட்டு – அக்ஸோட                     12.500       “
30.          கொப்பரை – நாரிகேள                       12.500       “
31.          பாதாம்பருப்பு – பாதாம்                    12.500       “
32.          பேரீச்சை – சர்ஜூரபல                     12.500       “

 சிலர் பூனைக்காஞ்சொறிவேரை (துராலபா) பயன்படுத்துகின்றனர்.

                மற்றும் இனிப்பும், புஷ்டியும் தருவதுமான பழவகைகள் வகைக்கு 12.500 கிராம் வீதம் எடுத்துறைந்து (விழுது) கல்கமாக்கிக் கலந்து காய்ச்சி மத்யமபாகத்தில் வடிகட்டவும்.

                சர்க்கரை (ஸர்க்கர) 2.500 கிலோகிராம் தனியே பொடித்துச் சலித்து அத்துடன்

1.            மிளகு – மரீச்ச                   25 கிராம்
2.            இலவங்கப்பட்டை – லவங்கத்வக்  25           “
3.            ஏலக்காய் – ஏலா                 25           “
4.            இலவங்கப்பத்திரி – லவங்கபத்ர   25           “
5.            சிறுநாகப்பூ – நாககேஸர          25           “


                இவைகளை பொடித்துச் சலித்த சூர்ணம் மற்றும் தேன் (மது) 400 கிராம் ஆகியவைகளைக் கலந்து பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:    நெல்லிக்காய், பால்முதுக்கன்கிழங்கு இவைகள் பச்சையாகக் கிடைக்காவிட்டால் காய்ந்த்தைக் கொண்டு முறைப்படி கஷாயமாக்கிச் சேர்க்கவும்.
                 
அளவும் அனுபானமும்:    
5 முதல் 10 கிராம் வரை சூடான பசும்பாலுடன் ஒரு நாளைக்கு இரு வேளைகள்.

                 
தீரும் நோய்கள்:  






அதிகமான தாகம் (த்ருஷ்ண), எரிச்சல் (தாஹ), காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ), விக்கல் (ஹிக்க), உடலுள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தப்போக்கு (ரத்தபித்த), காயம்பட்டதாலேற்படும் தசைகளின் தேய்மானம் (க்ஷதக்ஷீண), நோய்வாய்ப்படுவதால் விந்து வற்றிப்போதல் (வ்யாதி கர்ஷித நஷ்டசுக்ர எனப்படும் தாதுநஷ்ட) அதிகமான புணர்ச்சியினாலும், நோயினாலும் ஏற்படும் இளைப்பும், பலவீனமும், இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), சிறுநீர் நோய்கள் (மூத்ர ரோக) மற்றும் பெண் பிறப்புறுப்பு நோய்கள் (யோனி ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை .
  1. இந்த நெய் மருந்து -விந்து நட்டத்தில் ,தாதுக்கள் குறைவதால் ஏற்படும் விந்து நட்டத்தில் நல்ல பலன் அளிக்கும் 
  2. ஆட்டு மாம்சம் சேர்வதால் -உடலை தேற்ற பயன்படுத்தலாம் 
  3. விந்து முந்துதலில் தக்க துணை மருந்துகளுடன் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் என்பது திண்ணம் 
  4. பெண்ணின் தளர்வான யோனியை இருக்க தக்க துணை மருந்துகளுடன் தர நல்ல பலன் கிடைக்கும் 
Download As PDF