ஆண்மை சக்தியை அதிகரிக்குமா ? அஸ்வகந்தாதி லேஹ்யம்
(ref-Ayurvedic Formulary of India Part -1)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
சர்க்கரை (ஸர்க்கர) 600 கிராம் ½ அளவுக்கு எடுத்து நீரில் கரைத்து வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பாகு வந்தவுடன் பசுவின் நெய் (க்ருத) 150 கிராம் சேர்த்து
அத்துடன்
1. அமுக்கிராக் கிழங்கு – அஸ்வகந்தா 60 கிராம்
2. பால்முதுக்கன் கிழங்கு – விடாரீ 60 “
3. நன்னாரி – ஸாரிவா 60 “
4. சீரகம் – ஜீரக 60 “
5. பரங்கிப்பட்டை – மதுஸ்னுஹீ 60 “
6. சுக்கு – சுந்தீ 10 “
7. மிளகு – மரீச்ச 10 “
8. திப்பிலி – பிப்பலீ 10 “
9. ஏலக்காய் – ஏலா 10 “
10. விதை நீக்கி அரைத்த திராக்ஷை – த்ராக்ஷா 50 “
இவைகளைப் பொடித்துச் சலித்த சூரணத்தைச் சேர்த்து நன்கு கிளறி ஆறியபின்னர், பெரிய கண்ணூள்ள சல்லடையின் வழியே தேய்த்துச் சலித்து மிகச் சிறிய ரவைகளாக்கித் தேன் (மது) 300 கிராம் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும்.
திராக்ஷையைக் கொத்டை முதலிய கசடு நீக்கி நன்கு விழுதாக அரைத்துச் சரக்குகளின் சலித்த சூர்ணத்துடன் முன்னதாகவே நன்கு கலந்துவிட வேண்டும்.
அளவு:
5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் இரு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
சுக்கிலக் குறைவு எனப்படும் விந்து நட்டம் (அல்ப சுக்ர (அ) நஷ்டசுக்ர), பலவீனம் (பலக்ஷய (அ) அசக்த), இளைப்பு (கார்ஸ்ய), இரத்தக் குறைவு (ரக்தால்பத), குருதிச்சீர் கேடுகள் (ரக்த தோஷ), இரத்தக் கொதிப்பு, பரங்கிப்புண் (பிரங்கரோக), குருதியொழுகுமூலம் (ரக்தார்ஷ). இதற்கு உடல் வழுவைத் தரும் செய்கையும் (பால்ய), இளமையைத் தரும் செய்கையும் (ரஸாயன (அ) கல்ப), தாது புஷ்டியையும் காமத்தையும் அதிகரிக்கச் செய்யும் தன்மையும் (வாஜீ கரண), இரத்தத்தை சுத்தி செய்யும் தன்மையுமுண்டு.
அஸ்வகந்த லேஹியம் வெவ்வேறு பார்முலாக்கள்
1.மேலே சொன்ன பொதுவாக ஆயுர்வேதிக் பார்முலறி ஆப் இந்தியா என்ற நூலின் அடிப்படையில் தயாரிக்கப்டுகிற பார்முலா
2.யோக கிரந்தங்களின் அடிப்படையில் -கோட்டக்கல் போன்ற நிறுவனங்கள் ஆட்டின் மாம்சம் சேர்ந்த தனி பார்முலாவில் தயாரிக்கப்பட்ட அஸ்வகந்தா லேஹியமும் கிடைக்கிறது ..
இந்த பார்முலாவை அப்புறம் சொல்கிறேன்
ஆட்டின் மாம்சம் சேர்ந்த வகைகளை சைவம் உண்பவர்களுக்கு கொடுப்பது நல்லதல்ல ,தேவை கருதி உள்ளே உள்ள பொருளை சொல்லி அவர்கள் சாப்பிடுவார்கள் என்றால் தரலாம் ...
3.அஜ அஸ்வகந்த லேஹியம் என்று சரக சம்ஹிதையில் ,இருமல் (காச ) சிகிச்சையில் கூறப்பட்டுள்ள ராச்னாதி கிருதம் என்ற பார்முலாவை -லேஹியமாக்கி -அஸ்வகந்த லேஹியமாக கிடைக்கிறது
4.சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்படுகிற பார்முலா இது -இது சிகிச்சா ரத்தின தீபம் என்ற நூலின் அடிப்படையில் தயாரிக்கபடுகிறது -அதன் விவரம் கீழே ..
அஸ்வகந்தி லேகியம்
ref-சிகிச்சா ரத்தின தீபம்
சேரும் பொருட்களும், அளவும்:
அஸ்வகந்தி 10.78 %
நெய் 21.55 %
பசும்பால் 43.10 %
சர்க்கரை 21.55 %
திராட்சை 0.16 %
பேரீச்சங்காய் 0.16 %
சந்தனம் 0.16 %
ஜாதிக்காய் 0.16 %
கோரைக்கிழங்கு 0.16 %
கடுக்காய்ப்பூ 0.16 %
கூகைநீர் 0.16 %
சுக்கு 0.16 %
மிளகு 0.16 %
திப்பிலி 0.16 %
விலாமிச்சம்வேர் 0.16 %
கிராம்பு 0.16 %
கண்டந்திப்பிலி 0.16 %
செவ்வியம் 0.16 %
சித்திரமூலம் 0.16 %
இலவங்கப்பட்டை 0.16 %
ஏலம் 0.16 %
சீரகம் 0.16 %
பச்சிலை 0.16 %
அளவும், துணை மருந்தும் :
5 கிராம் முதல் 10 கிராம் வரை பாலுடன் தினம் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
க்ஷயகாசம், சோகை, பாண்டு, காமாலை முதலிய நோய்கள் பரிகரிக்கப்பட்டு தேக புஷ்டி உண்டாகும். க்ஷயரோகத்தில் தேகம் இளைத்தவர்களுக்கு நாளுக்கு நாள் புஷ்டியை கொடுக்கும். மேலும் அவர்களுக்கு சுறுசுறுப்பை உண்டாக்கும். நல்ல பலத்தைக் கொடுக்கும்.
தெரிந்து கொள்ளவேண்டியவை
- அஸ்வகந்தா லேஹியம் என்றால் ஆண்மை பெருக்கும் என்ற மாயை உள்ளது -அது தவறு .நன்னாரி ,பரங்கி பட்டை போன்ற மருந்துகள் சேர்வதாலும் -ஆண்மை அதிகரிக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை .
- அஸ்வகந்த லேஹியம் மூளை சார்ந்த நோய்களை போக்க ,வலிகளை குறைக்க ,தூக்கம் வர வைக்க பயன்படுத்தலாம் என்பது தான் எனது எண்ணம் ..நரம்பு தெம்புக்கும் தரலாம்
- பொதுவாக சீமை அமுக்கரா கிழங்கை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று ஆயுர்வேத நூல்கள் சொல்கிறது ஆனால் அதிக விலையின் காரணமாக விலை குறைந்த நாட்டு அமுக்கரா கிழங்கையே பெரும்பான்மையான மருந்து கம்பெனிகள் சேக்கிறது என்பது மறுக்க முடியாத வேதனையான விஷயம்
- ஆண்மை அதிகரிக்க ,இது போன்ற சாமாசாரங்களுக்கு வேறு ப்ரயத்யேகமான பல லேஹியங்கள் உள்ளது ..இது போன்ற விஷயங்களுக்கு எனது சாய்ஸ் இந்த அஸ்வகந்தா லேஹியம் அல்ல ..
- பல போலி வைத்தியர்கள் -இந்த அவகந்த லேஹியத்தின் லேபிளை கிழித்து மாற்றி அரை கிலோ லேஹியத்தை ஐயாயிரம் ரூபாய்க்கும் மேல் விற்கிறார்கள் எனபதும் வேதனையான விஷயம்
- எந்த ஆயுர்வேத மருந்தை தெரிகிறதோ இல்லையோ இந்த லேஹியத்தை தெரியாதவர்களே பொதுவாக கிடையாது
- சித்த மருத்துவத்தில் செய்யகூடிய அஸ்வகந்த லேஹியம் பார்முலாவே வேறு என்று மேலே படித்தால் புரியும்
- அஸ்வகந்தா லேஹியத்தில் ஆட்டு மாமிசம் சேர்கின்ற பார்முலாக்களும் உள்ளது என்பதை தெரிந்து வைத்தால் நல்லது .
- வலிகளை போக்க ,மன அமைதி பெற ,உடல் வலு பெற இந்த லேஹியத்தை பொதுவாக பயன்படுத்தலாம்
Read more: http://ayurvedamaruthuvam.blogspot.com
No comments:
Post a Comment