Wednesday, August 17, 2011

ஒரு பெண், ஆணை வெறுக்கக் காமசூத்திரம் கூறும் காரணங்கள்



ஒரு பெண்ணை ஆண், மனதார விரும்பி வரும் போது அவனை அவள் புறக்கணிக்கிறாள் என்றால் அதற்கு ஒவ்வொருவரும் வேறு காரணத்தை நாமாகத் தீர்மானித்துக் கொள்வோம். ஆனால் காமசூத்திரம் இதற்கு சுமார் 20 காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறது. அவை என்ன தெரியுமா?

ஒழுக்கம்

சந்தேகம்

வயதான ஆணாக இருப்பது

குழந்தைப் பாசம்

உடல் நலக்குறைவு

கணவனை விட்டுப் பிரியாமல் இருத்தல்

கணவனிடம் உள்ள மிகுதியான அன்பு

அவனுக்குத் தன்னால் எந்தப் பிரச்சினையும் உண்டாகக் கூடாது என்ற எண்ணம்

சமூக நிலை

விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு ஆபத்து உண்டாகுமோ என்ற எண்ணம்

காதலனின் துணிவு

கணவனால் பழி வாங்கப்படலாம் என்ற எண்ணம்

அவன் வேறு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருக்கலாம்

நல்ல, விரும்பத்தகுந்த குணம் இல்லாதவன்

காதலனிடம் பாதுகாப்பு இருக்காது என்ற சந்தேக மனப்பான்மை

காதலன் மீது நம்பிக்கை இல்லாமல் போவது

உலக, பொது அறிவு இல்லாதவன்

அன்பானவர்களைப் பிரிய நேரிடுமோ என்ற அச்சம்

கணவனே இவனை அப்படி அனுப்பித் தன்னை சோதிக்கிறானோ என்ற எண்ணம்

கணவன் தன்னைப் பழி வாங்கி விடுவானோ என்ற எண்ணம்

இப்படிப்பட்ட காரணங்களாலேயே ஒரு பெண், ஆணை வெறுத்து ஒதுக்குகிறாள். எனவே ஒரு பெண்ணை விரும்புகிற ஆண், முதலில் மேற்கூறிய காரணங்களை உற்று நோக்கி, அந்தக் குறைபாடுகள் வராதவாறு நடந்து கொண்டால் அவள் சம்மதத்தை எளிதில் பெற முடியும்.
Download As PDF

No comments:

Post a Comment