Thursday, August 18, 2011

கருப்பை பிரச்சனைகளுக்கு மருந்தாகும் -அசோகக்ருதம்


கருப்பை பிரச்சனைகளுக்கு மருந்தாகும் -அசோகக்ருதம்
(ref-பைஷஜ்யரத்னாவளி - ஸ்திரீரோகாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            அசோகப்பட்டை – அசோக த்வக்        800 கிராம்
2.            தண்ணீர் – ஜல                       3.200 லிட்டர்

                இவற்றைக் கொதிக்க வைத்து 800 மில்லி லிட்டராகக் குறுக்கி வடிக்கட்டவும்.

1.            சீரகம் – ஜீரக                          800 கிராம்
2.            தண்ணீர் – ஜல                        3.200 கிராம்
                இவற்றைக் கொதிக்க வைத்து 800 மில்லி லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும். பின்னர்

1.            அசோகப்பட்டைக் கஷாயம்             800 கிராம்
2.            சீரகக்கியாழம் – ஜீரக கஷாயம்          800         
3.            அரிசி கழுவிய நீர் – தண்டுலோதக      800         
4.            ஆட்டின் பால் – அஜ க்ஷீர              800         
5.            கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜ  ரஸ     800         
6.            பசுவின் நெய் – க்ருத                  800         “ 

                இவைகளை ஒன்று கலந்து அதில்

1.            கீரைப்பாலை – ஜீவந்தி                25 கிராம்
2.            காகோலி – காகோலி                   25           
3.            க்ஷீரகாகோலி – க்ஷீரகாகோலி          25           
4.            மேதா – மேதா                        25           
5.            மஹாமேதா – மஹாமேதா             25           
6.            காட்டுளுந்து வேர் – மாஷபர்ணீ         25           
7.            காட்டுப்பயறு வேர் – முட்கபர்ணீ        25           
8.            ருஷபகம் – ருஷபக                    25           
9.            ஜீவகம் – ஜீவக                        25           
10.          அதிமதுரம் – யஷ்டீ                    25           
11.          சாரப்பருப்பு – ப்ரியால                 25           
12.          ஈச்சம்வேர் – பரூஸமூல               25           
13.          மரமஞ்சள் ஸத்வம் – ரஸாஞ்ஜன       25           
14.          அசோகவேர் – அசோகமூல             25           
15.          திராக்ஷை – த்ராக்ஷா                   25           
16.          தண்ணீர்விட்டான் கிழங்கு – ஸதாவரீ   25           
17.          முள்ளுக்கீரை – தண்டுலியாக மூல       25           

                இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டி ஆறியபின் சர்க்கரை (ஸர்க்கர) 400 கிராம் பொடித்துச் சலித்துச் சேர்த்து பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:     

ஜீரகத்தை 200 கிராம் எடுத்து பதினாறு பங்கு நீரில் கொதிக்கவைத்து நான்கில் ஒன்றாகக் குறுக்கி வடிகட்டிச் சேர்ப்பதும் உண்டு
                 
அளவும் அனுபானமும்:     
 5 முதல் 10 கிராம் வரை சூடான பசும் பாலுடன் அல்லது நோய்களுக்கேற்ற மற்ற அனுபானங்களுடன்.

               
தீரும் நோய்கள்:  



வெள்ளை படுதல் (அ) வெள்ளைப் போக்கு (ஸ்வேதப்ரதர)வயிற்றுவலி (குக்ஷிசூல)இடுப்பு வலி (கடீசூல)கருப்பைக் கோளாறுகள் (யோனி  தோஷ)கருப்பை / பெண் பிறப்புறுப்புவலி (யோனிசூல)இரத்தசோகை (பாண்டு)பெரும்பாடு (அஸ்ரிக்தர) போன்ற மாதவிலக்கின் போதேற்படும் கொடிய வலியும்ரத்தப் போக்கும் கூடிய நிலைகள் (தீவ்ர ருது சூல),மலடித்தன்மை (வந்த்யத்வ).
               
தெரிந்து கொள்ள வேண்டியவை 
  1. பெண்களின் அனைத்து விதமான நோய்களுக்கு சிறந்து மருந்து இது 
  2. காரணம் தெரியாமல் -கருமுட்டை வெடிக்காமல் இருக்கும் -பெண்களுக்கு வர பிரசாதம் 
  3. வெள்ளை படுதலில் -தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் கிடைக்கும் 
  4. பொதுவாக அசோக மரம் என்று நெட்டிலிங்க மரத்தை பயன் படுத்துவார்கள் -அப்படி பயன் படுத்தினால் பலன் இருக்கவே இருக்காது 
  5. அசோக பட்டை -அதிகம் கிடப்பதில்லை -கலப்படம் -உள்ளது -தரம் அறிந்து சேர்த்தால் மட்டுமே பலனை எதிர்பார்க்கலாம் ..
  6. அசோகப்பட்டை ஆர்த்தவ ஜனனம் என்னும் -ருது உண்டாக்கும் (மாதவிலக்கை வர வழைக்கும் பண்பு ) உள்ளதால் சரியான வகையில் பயன்படுத்த வேண்டும் 
  7. புளிப்பை ,கோழி கறியை அறவே நீக்கி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் 
                

Read more: http://ayurvedamaruthuvam.blogspot.com
Download As PDF

No comments:

Post a Comment