Friday, July 20, 2012

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை…!!



ஆண்மை குறைவு?
ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 – 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும்.
நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுற வில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடி க்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந் துகளை தயார் செய்து,
விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது.
இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுக ளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக் கம் இளைஞர்களுக்கு வேண் டுமல்லவா? இத்தகைய வினா க்களுக்கு விடையளித்து, தெ ளிவுபடுத்தி தைரியப்படுத்துவ தே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற் பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 – 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்திஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற் படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவை களில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர்.
இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக் கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும்உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமி த்து வைக்கப்படுகின்றது. அது நிறை ந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவி ட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.
சிலர் திருமணத்திற்கு முன்னர் விந் துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக்கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக் கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல்திறன் குறை ந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் கார ணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு.
பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என் றார் மகாத்மா காந்தி. பயம் பல த்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்ப தையும் இழக்கும்படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்தி க் கொள்ள வேண்டும். மனதிற் கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.
இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்துகொள்ளுதல், சக்தியான உணவை உண் ணுதல் போன்றவைகள் இந்த நோய்களி ல் இருந்து நம்மை காப்பாற்றும்.
புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகி த்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப் பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைக ளையும் அவ்வப்போது ஏற்படும் உடல் நலக் கோளாறுகளுக்காக உட் கொள் ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரை கள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல்உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய் கிறது.
தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர் தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுத ல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்ற வை செய்யலாம்.
இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும். 15 நாட்களுக் கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.
நன்றி – டாக்டர். எம்.சபாபதி, இளமை
Download As PDF

No comments:

Post a Comment