லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 44 வயதாகும் கிம் ராம்சே பெரும் மருத்துவப் பிரச்சினையில் சிக்கி தினந்தோறும் அவஸ்தைப்பட்டு வருகிறார். சாதாரண வேலையைக் கூட செய்ய முடியாமல் தவிக்கிறார். ரயிலிலோ, பஸ்ஸிலோ கூட போக முடியாமல் திணறி வருகிறார்.
இத்தனை துயரங்களுக்குக் காரணம் - அவருக்கு வந்திருக்கும் ஆர்கஸப் பிரச்சினைதான். ஒரு நாளைக்கு 100 முறையாவது அவருக்கு ஆர்கஸம் எனப்படும் செக்ஸ் உச்சநிலை ஏற்பட்டு விடுகிறதாம். லேசான அதிர்வும், அசைவும் கூட அவரை கிளைமேக்ஸுக்குக் கொண்டு போய் விடுகிறதாம். சிலருக்கு உச்சநிலை வராமலேயே அவஸ்தைப்படுவார்கள். சிலருக்கோ அது வலியுடன் கூடியதாக இருக்கும். ஆனால் கிம்முக்கோ அது பெரும் நிம்மதியின்மையைக் கொண்டு வந்து தந்திருக்கிறது. லேசாக இடுப்பை அசைத்தால் கூட அவருக்கு ஆர்கஸம் வந்து விடுகிறதாம். ரயிலில் போக முடியவில்லை, காரில் போக முடியவில்லை. குணிந்து நிமிர்ந்து வீட்டு வேலை செய்ய முடியவில்லை. இப்படி எதைச் செய்தாலும் அவருக்கு கிளைமேக்ஸ் வந்து விடுமாம். இதனால் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் பெரும் சோர்வை சந்தித்து வருகிறார் கிம். மேலும் சாதாரண முறையிலும் கூட உடலுறவு கொள்ள முடியாமல் தவிக்கிறாராம் கிம். இவர் அடிப்படையில் ஒரு நர்ஸ் ஆவார். இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட்ஷயர் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு வந்திருப்பது Persistent Genital Arousal Disorder (PGAD) என்ற பிரச்சினையாகும். இதை சரிப்படுத்த முடியாது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இவர் 2001ம் ஆண்டு மாடிப்படியிலிருந்து கீழே விழுந்து விபத்தை சந்தித்துள்ளார். அப்போதுதான் இந்த குறைபாடு அவரைத் தொற்றிக் கொண்டு விட்டதாம். அவரது முதுகெலும்பில் டார்லோவ் சிஸ்ட் என்ற கட்டி வந்துள்ளது. அந்த இடத்திலிருந்துதான் பெண்களுக்கு ஆர்கஸம் உருவாவதாக டாகட்ர்கள் கூறுகிறார்கள். எனவேதான் கிம்முக்கு நூற்றுக்கணக்கில் தினசரி ஆர்கஸம் ஏற்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். தனது நிலை குறித்து கிம் கூறுகையில், மற்ற பெண்களெல்லாம் ஆர்கஸம் வருவதற்கு என்ன செய்யலாம் என்று துடிக்கிறார்கள். ஆனால் நானோ என்ன செய்து இந்த ஆர்கஸத்தை தடுத்து நிறுத்துவது என்று துடிக்கிறேன். தொடர்ந்து நான்கு நாட்கள் வரை கூட எனக்கு தொடர்ச்சியாக ஆர்கஸம் வந்துள்ளது. அப்போதெல்லாம் எனக்குப் பைத்தியம் பிடித்தது போல இருக்கும். பல்வேறு பயிற்சிகளை செய்து பார்த்தேன். முடியவில்லை. ஒரு முறை எனக்கு தொடர்ந்து 36 மணி நேரத்திற்கு ஆர்கஸம் நீடித்தது. எனது நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அந்த நாளில் எனக்கு 200க்கும் மேற்பட்ட ஆர்கஸங்கள் ஏற்பட்டன. அதனால் ஏற்பட்ட வேதனையும், வலியும் சொல்லில் மாள முடியாதது. என்னால் தினசரி வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியவில்லை. என்னுடைய உடம்பு என்னுடைய கட்டுப்பாட்டிலேயே இல்லை. பொது இடங்களுக்குப் போக எனக்குப் பயமாக உள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியவில்லை. காரில் கூட போக முடியவில்லை. நடந்து போனால் கூட லேசான அதிர்வு ஏற்பட்டால் உடனே ஆர்கஸம் வந்து விடுகிறது. உடனே உதடுகளை அழுந்தக் கடித்துக் கொண்டு கைகளை குறுக்காக கட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் சமாளிப்பது பெரும் அவஸ்தையானதாகும்.
Topics: england, orgasam, இங்கிலாந்து, உச்சநிலை, ஆர்கஸம் Story first published: Tuesday, August 28, 2012, 12:39 [IST] English summary Some people fake them, others ache for them but for one woman, the big 'O' is the bane of her life... as she has to endure up to 100 orgasms a day. Kim Ramsey, 44, has a medical condition which makes her feel constantly aroused. Even the slightest pelvic movement - on a train, in a car, doing domestic chores - can trigger a climax, but the sheer volume has left her tired, in pain and unable to have a normal relationship.
No comments:
Post a Comment