காதலன் காதலியாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இரு ந்தாலும் சரி, செக்ஸ் மட்டுமே அவர்களுடைய அந்தரங்கமாக இரு க்க முடியாது. அப்படி இருக்க வே ண்டிய அவசியமும் இல்லை. அதை யும் தாண்டி பல அருமையான விஷ யங்களும் உள்ளன. அவையும் கூட ஒருவர் மீதான இன்னொருவரின் அன்பை அதிகமாக்க, வலுவா க்க உதவும்.. அது என்னவென்று பார்ப் போமா…
உறவு வலுப்பட உடல் ரீதியான உற வு மட்டும் உதவாது. மாறாக, மனங்களின் பிணைப்பும் அவசியம். மன ரீதியான பிணைப்பு அதிகமாகும்போதுதான் உடல் ரீதியான பிணைப்புகளும் வலுப்பெறுகிறது.
காதலனாகட்டும் அல்லது காதலி யாகட்டும், கணவனாகட்டும் இல் லை மனைவியாகட்டும், இருவரி ல் ஒருவர் இன்னலில் இருக்கும் போது ஆதரவுக் கரம் நீட்டும்போது கிடைக்கும் சுகமே அலாதியான து.
காதலனாகட்டும் அல்லது காதலி யாகட்டும், கணவனாகட்டும் இல் லை மனைவியாகட்டும், இருவரி ல் ஒருவர் இன்னலில் இருக்கும் போது ஆதரவுக் கரம் நீட்டும்போது கிடைக்கும் சுகமே அலாதியான து.
சில நேரங்களில் மனைவிக்கு உட ல் நலமில்லாமல் போயிருக்கும். அந்நேரத்தில் ஒரு கணவர் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மனைவிக்கு ஏகமாக இருக்கும். உடல் நலக்குறைவின்போதுதான் கணவர்களிடம் மனை வியர் நிறைய எதிர்பார்ப்பார்க ள். அதை சரியாக புரிந்து, உண ர்ந்து, தெரிந்து நடந்து கொள் ளும் போது தான் கணவர் மீது மனைவிக்கு அன்பும், ஆசையு ம், பற்றும், காதலும் அதிகரிக் கும். இது கணவன் மனைவி என்றில்லை, காதலன் காதலி க்கும் கூட இது பொருந்தும்.
வெறுமனே காதல் பாஷையில் பேசிக் கொள்வது, உறவில் மூழ்கித் திளைப்பது, பணம், பொருளைப் பரிசாக கொடுத்து அசத்துவது மட் டும் தாம்பத்யம் அல்ல, மாறாக ஒருவர் மனதை ஒருவர் அறிந்தும், புரிந்தும் சரிவர நடந்து கொள்வதுதான் உண் மையான தாம்பத்யம்.
மனைவி அல்லது காதலிக்குக் காய்ச்சல் அடி க்கிறதா.. உடனே லீவு போட்டு கூடவே உட்கா ர்ந்து கவனிக்கும்போது அக்கணவர் அல்லது காதலர்மீது பொங்கும் பாசத்திற்கு அளவே இருக்காது. மருந்து, மாத்திரைகளை எடுத்து க்கொடுத்து சாப்பிட வைப்பது, இதமாக தலை கோதிவிடுவது, காய்ச்சலைக் குறைக்க அவ்வ ப்போது டெம்ப ரேச்சரைப் பார்த்து அதற்கேற் றார் போல ஈரத் துணியால் நெற்றியில் ஒற்றி விடுவது, ஆறுதலாக நாலு வார்த்தை பேசுவது, அழகாக கதை சொல்லி தூங்க வைப்பது, தட்டிக் கொடுத்து ஆறுதல் தருவது, நெற்றியிலும், கன்னத்திலும் இதமாக முத்தமிடுவது… இத்யாதி .. இத்யாதிகளைச் செய்யும்போது அந்த கணவன் அல்லது காதலனு க்கு ஏற்படும் நிம்மதியும், திருப்தி யும் சொல்லில் வடிக்க முடியாத தாக இருக்கும். அதை விட அந்தப் பாசம் நிறைந்த பொறுப்புணர்ச்சி யை பெறும் மனைவி அல்லது கா தலிக்குக் கிடைக்கும் சந்தோஷத் திற்கு அளவே இருக்காது.
மனைவி அல்லது காதலிக்கு உடல் நலம் குன்றி, வாந்தி எடுத்துஅவஸ்தைப்படும்போது அதைத் தாங்கிப் பிடித்து ஆதரவாக மடியி ல் சாய்த்துக் கொள்ளும் கணவன் அல்லது காதலன், தாய்- தந்தைக் குச்சமமான இடத்தைப்பெறுகிறா ன். அப்பெண்ணின் மனதில் ஆழ மான இடத்தையும் பெறுவான்.
கணவன் அல்லது காதலனை நம் பி வந்து விட்ட ஒவ்வொரு பெண் ணுக்கும் கணவன் அல்லது காதலனே தாயுமாகிறான், தந்தையுமா கிறான். அப்படிப்பட்ட சூழலில், தாயினும் சாலப் பரிந்து…அதாவது ஒருதாய் காட்டும் அன்பை வி ட பல மடங்கு அன்பு காட்ட வேண்டிய கடமை கணவர் அல்லது காதலனுக்குண்டு. அக்கடமையிலிருந்து அவர் கள் தவறும்போது அப்பெண் ணின் மனம் துடிக்கும் துடிப்பு வெளியில் யாருக்கும் தெரி யாது. ஆனால் வேதனையின் வெப்பத்தை உணரும்போது உயிர்கள் துடித்துப் போகும், உணர்வுகள் தவித்துப் போகும்.
உங்கள் மனைவி அல்லது கா தலியை காமத்துடன் மட்டும் பார்க்காதீ்ர்கள். உங்கள் அன் பான அரவணைப்பையும்
, பரி வையும், பாசத்தையும் காட்டி அவரை சந்தோஷத்தில் தி ளைக்க விடுங்கள். கூட இரு ந்து பார்க்கமுடியவில்லை யா .. அடிக்கடி போன் செய்து, நான் இருக்கிறேன் செல்லம் மா, உன்கூடவே இருக்கிறேன், உன் பக்கத்திலேயே இருக்கிறேன், உன்னுடனேயே இருக்கிறேன், என்நினைவெல்லாம் உன்னுடன்தா ன், கவலைப்படாதே, தைரியமாகஇரு, எல்லா ம் சரியாகும் என்ற நம்பிக்கையை ஊட்டுங் கள், அதிலேயே அவர் பாதி குணமடைந்து விடு வார்.
அன்பும், ஆதரவும், பாசமும், பரிவும், அரவ ணைப்பும்தான் உண்மையான காதல். காமத் திற்கு இங்கு கடைசி இடம்தான். உடல் ரீதியான உறவுகளை விட உள்ளங்களின்கூடல்தான் உண்மையான காதல், உண்மையான அன்பு, உண்மையான தாம்பத்தியமாக இருக்க முடியும். என்ன புரிஞ் சுதா…!
No comments:
Post a Comment