Saturday, August 20, 2011

பாலியல் (SEX)




பாலியல் உறவு என்றால் என்ன?

பாலியல் உறவு என்றால் ஆணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்வது. எப்படியெனில் ஆணின் பாலியல் உறுப்பை பெண்ணின் யோனிக்குள் புகுத்துவது.

உன்னத நிலை என்ன வென்றால் இருபாலாரும் பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது. ஆண் உறுப்பு புடைத்தெழவும் பெண்ணின் யோனிப் பகுதி ஈரமாயிருக்கவும் ஆன நிலை. பெண்ணின் யோனிப் பகுதி ஈரமாயிருப்பதற்குக் காரணம், பல்வேறு பகுதிகளிலிருந்து சுரக்கும் ஈரப் பதார்த்தங்களே. யோனிப்பாகம் ஈரமாயிருந்தால் ஆணின் பாலியல் உறுப்பு எளிதாக உட்புகும்.

ஆணின் பாலியல் உறுப்பு பெண்ணின் யோனிக்குள் புகுந்தவுடன் விந்து வெளிப்பட்டுவிடாது. பலமுறை ஆண் பாலியல் உறுப்பை யோனிக்குள் அசைய விடும் போது யோனித்துவாரத்தின் பக்கத் தசைகளோடு ஆண் பாலியல் உறுப்பு உராயப்படும் போது பாலியல் உணர்ச்சி தூண்டப்பட்டு விடுகிறது. வெளிவரத் துடிக்கும் விந்து எப்படியும் வந்தே தீரும். எக்காரணம் கொண்டும் திருப்பிச் சென்றுவிடாது. விந்து வெளிவரத் தயார் நிலையிலேயே உள்ளது. ஆணின் பால் உறுப்பு சுருக்கம் அடைந்து விந்தை வெளியே தள்ளுகிறது.

ஆண் உறுப்பின் யோனித் துவார உராய்வுகள் பெண்ணின் யோனியையும் யோனிவாயிலில் இருக்கும் உணர்ச்சி உறுப்பையும் தட்டி எழுப்புகிறது. உணர்ச்சியை எழுப்பும் நிகழ்வு ஆணுக்கும் பெண்ணிற்கும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை.

ஆணின் பாலியல் உறவின் எழுச்சியின்போது விந்து சிந்திச் சிதறி வெளியேறுகிறது. பெண்ணிற்கு ஏற்படும் பாலியல் எழுச்சி அல்லது உந்தல் சுருதி முறையில் யோனித் தசைகளில் சுருக்கம் ஏற்படச் செய்கிறது. இது யோனிக்கருகிலுள்ள இரத்தக் குழாய்களில் நெருடலை ஏற்படுத்துகின்றன. இவை அனைத்தும் பாலியல் உறவின் போதும் ஏற்படுகிறது. இருபாலாரின் பாலியல் உணர்வின் உச்சக்கட்டத்தை அடைய உடல் எங்குமுள்ள தசைகளின் சுருக்கம் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து விரைவாக தசைகள் ஓய்வடைகின்றன. ஆகவே இன்ப உணர்வுகள் யோனிப் பிரதேசத்தோடு மட்டுப்படாமல் அதற்கு அப்பாலும் வியாபிக்கிறது.

பாலியல் உறவு கர்ப்பம் தரிப்பதில் முடிவுறும். ஆணின் அல்லது பெண்ணின் மலட்டுத் தன்மை காரணமாகவோ அல்லது நம்பக் கூடிய கருத்தடை உபகரணத்தைப் பயன்படுத்துவதாலோ தவிர்க்கப்படுகிறது.

முதன் முறையாக பாலியல் உறவு கொள்ளும் போதே இது சாத்தியமாகிறது. இரு பங்காளரில் ஒருவருக்கு எய்ட்ஸ் (AIDS) இருக்குமாயின் பாலியல் உறவின் போது மற்றவருக்கு எயிட்ஸ் (AIDS) வியாதியை உண்டு பண்ணும். HIVS பரிசோதனை கூட இரண்டு கிழமைகளுக்கு முன்பிருந்த நிலையைத்தான் காட்டும். இருவருக்கும் ஆன தகுந்த பாதுகாப்பு கருத்தடை உறைகளைப் பயன்படுத்துவதே.

பாலியல் உறவுக்கு முன் செய்யும் நடவடிக்கை என்றால் என்ன?

யோனிக்குள் ஆணின் பாலியல் உறுப்பைப் புகுத்துமுன் இரு பங்காளிகளின் உணர்வுகளும் சரியாகத் தட்டி எழுப்பப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஆணுறுப்பை யோனிக்குள் நுழைக்குமுன் முன்நடவடிக்கையாக உணர்ச்சி தட்டி எழுப்பப்பட வேண்டும். பெண்களுக்கு முன்னரேயே ஆண்களுக்கு பாலியல் உணர்வு உச்சக் கட்டத்தை அடைந்து விடும். இந்த நிலை இரு பங்காளிகளும் இளைஞராக இருக்கும்போது ஏற்படுகிறது. பாலியல் உறவுக்கு முன் செய்யும் முன் நடவடிக்கை இதற்கு ஈடுசெய்கிறது. நன்மையும் புரிகிறது.

சமய தாபனங்கள் காட்டும் வழி என்ன?

பெண் முதுகுப் புறம் கீழே இருக்க உடலை நீட்டிய நிலையில் படுத்திருக்க அவள் மீது குப்புறப்படுத்து பாலியல் உறவில் ஈடுபடுவது சாதாரணமான பழைமையான உறவு முறை. இதற்கு இப்பெயரை வழங்கியவர்கள் பசுபிக் தீவினர். இத்தகைய முறைதான் இன்பத்தை அள்ளித் தரும் முறையென நம்பினார்கள். வெள்ளையரின் சமய தாபனங்கள் குந்தி இருந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து பாலியல் உறவில் ஈடுபடும் முறையை எடுத்துக்காட்டினர். வேறு விதமாகக் கூறுவதாயின் எந்த முறையிலாவது ஈடுபட்டு இன்பத்தின் உச்ச நிலையை அடைந்தால் போதும்.

பாலியல் உறவு கொள்வது முறையான வழியில் என்றீர்கள். பாலியல் உறவுக்கு வேறெதும் முறை இருக்கிறதா?

மற்ற முறைகளில் ஒன்று வாய்வழி அடுத்தது குதம் வழி.

வாய்வழிப் பாலியல் உறவு என்றால் என்ன?

வாய்வழியான உறவு என்றால் உங்கள் வாயை பங்காளியின் பாலியல் புற உறுப்பின் மீது பயன்படுத்தி பாலியல் உணர்வின் உச்சக் கட்டத்தை அடைய வைத்துவிடுவது. பெண்ணொருத்திக்காயின் பெண் குறியை நாக்காலும், உதடுகளாலும் தடவித் தூண்டிவிடுவது. ஆணுக்காயின் ஆண்குறியை எடுத்து வாய்க்குள் வைத்து விடுவது. இறுதியில் புடைத்தெழும். இறுதியில் விந்து வெளிவரும். தடுக்க வேண்டாம்!

வாய்வழியாக நடத்தப்படும் பாலுறவால் கர்ப்பம் தரிக்காது. விழுங்கிய விந்து கருப்பையை அடையாமல் வயிற்றுக்குள் நேரே சென்றுவிடும். ஆனால், விந்து வாய்க்குள் புகுந்தாலும் AIDS பரவும். உங்கள் பங்காளியைப் பற்றித் தெளிவாகத் தெரியாமல் இருந்தால் கருத்தடை உறைகளைப் பயன்படுத்த வேண்டும். இதோடு பாலியல் hPதியில் பரவும் நோய்கள் தொற்றக்கூடும்.

குதம் வழியான பாலியல் உறவு என்றால் என்ன?

குதம் என்றால் மலவாசல் என்றும் அழைக்கலாம். குதம் வழியான பாலியல் உறவு என்பது ஆண்குறியைக் குதத்திற்குள் புகுத்தி விடுவது ஆகும். குதம் வழியிலுள்ள இறுக்கான அமைப்பு ஆணின் பாலியல் புறவுறுப்புக்கு மேலதிக தூண்டுதல் வழங்குகிறது. பெண்களைப் பொறுத்தவரை பெரும் வேதனையும் வலியும் தருகிறது. குதத்தைச் சுற்றியுள்ள தசைகளை ஓய்வில் வைத்திருக்கும் உத்தியை அறிந்திருந்தால் மட்டுமே இந்த வேதனையிலிருந்து ஓரளவு விடுதலை பெறலாம். பெண் இந்த முறையால் இன்பம் அடைவதில்லை.

அநேக ஆண்களும் பெண்களும் குதம் வழியான பாலியல் உறவினை வாழ்நாள் முழுவதும் பெறாமலேயே இருக்கின்றனர்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் இரு ஆண்களாயின் குதம் வழியாக ஆண்குறி நுழையும் போது இருவருக்கும் இன்ப உணர்வு ஏற்படுகிறது. புறஸ்றோற் சுரப்பியின் இன்பம் வாங்கிகளின் மீது ஆண்குறி உராயும் போது இன்பம் சுரக்கின்றது. (புறஸ்றோற் சுரப்பி தான் விந்தை திரவம் கலந்ததாகத் தருகிறது)

குதவழி பாலியல் உறவாலும் கருத்தரிப்பு நடைபெறாது. ஆனால் AIDS பரவும் அபாயம் பெரிதும் உண்டு. குதப்பாதை மிகவும் இறுக்கமாக இருப்பதனால் அதிக அளவு உராய்வும் அதன் பயனாகச் சிறுகாயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதன் காரணமாக விந்து மற்றவரின் குருதி ஓட்டத்துடன் கலந்து விட இடமுண்டு. மற்றவரிடம் AIDS வியாதிக்கான HIV இல்லை என்று உறுதியாகத் தெரியாவிட்டால் குதவழி பாலியல் உறவுக்கென அமைந்த கருத்தடை உறையையோ அல்லது சாதாரண கருத்தடை உறைதான் இருப்பின் அதில் இரண்டு உறைகளையோ அணிந்து கொண்டு பாலியல் உறவில் ஈடுபட வேண்டும்.
Download As PDF

பெண்ணின் அந்தரங்க உறுப்பு.....



  


பெண்ணின் அந்தரங்க உறுப்பு.....
குழந்தை பிறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே அது பெண்ணாக இருக்கிற பட்சத்தில் பிறப்புறுப்பு முழு உருவம் பெறுகிறதாம். கருத்தரித்த பத்தாவது வாரத்தில், குழந்தை ஆணா, பெண்ணா என்பது தீர்மானமாகி, ஆணாக இருக்கிற பட்சத்தில் ஆணுறுப்பும், பெண் என்றால் பிறப்புறுப்பும் வளர ஆரம்பிக்குமாம்.

முதல் முறை செக்ஸ் உறவின் போது பிறப்புறுப்பில் உள்ள கன்னித்திரை கிழிய வேண்டுமா, இரத்தப் போக்கு கட்டாயமா என்பது பலருக்கும் மண்டையைக் குடைகிற கேள்வி. பெண்ணின் நடத்தையை சந்தேகிக்க வைக்கிற அளவுக்கு இது தீவிரமானதாகவும் இருக்கிறது. செக்ஸ் உறவின் மூலம் மட்டும்தான் இந்தக் கன்னித்திரை கிழிய வேண்டும் என்பதில்லை. விளையாட்டு, நடனம், நீச்சல், உடற்பயிற்சி எனப் பல விஷயங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். அபூர்வமாக சில பெண்கள் இந்த கன்னித்திரை இல்லாமல் பிறப்பதும் உண்டு. இன்னும் சிலருக்கு அந்த சவ்வு மிகவும் தடித்திருக்கும். திருமணத்துக்கு முன்பு அறுவை மூலம் அது அகற்றப்பட்டால் தான் அவர்களால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும்.

பிறப்புறுப்புக் கசிவு என்பது சகஜமான விஷயம். செக்ஸ் உறவின் போது இந்தக் கசிவு இருக்கும். சில பெண்களுக்கு இந்த அளவு அதிக மாகவும், சிலருக்குக் குறைவாகவும் இருக்கும். இரண்டுமே சாதாரணமானவைதான்.

பிறப்புறுப்பு என்பது அறுவறுப்பான, அசிங்கமான உறுப்பு என்கிற அபிப்ராயம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஒவ்வொரு பெண்ணின் பிறப்புறுப்பிலும் சுமார் பதினைந்து விதமான பாக்டீரியா கிருமிகள் குடியிருக்குமாம். அத்தனையும் நல்ல பாக்டீரியா. அதனால் கெட்ட கிருமிகள் அத்தனை லேசில் அங்கே நுழைய முடியாதாம்.

உடலின் மற்ற பகுதிகளைப் போலவே பிறப்புறுப்புக்கும் காற்றோட்டம் அவசியம். அப்போதுதான் அந்தப் பகுதி சுவாசிக்க முடியுமாம். அதற்கு இடம் கொடுக்காமல் எப்போதும் இறுக்கமான உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் அணிகிறவர்களுக்கு அடிக்கடி பிறப்புறுப்புத் தொற்று வர வாய்ப்புண்டாம்.

பல பெண்களையும் தர்ம சங் கடத்துக்கு உள்ளாக்கும் விஷயம் அந்தரங்க உறுப்பில் உண்டாகும் அரிப்பு. அந்த இடத்தின் வறட்சி, இறுக்கமான உடை போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். அரிப்பு ஒரு நாளைக் கடந்து தொடர்ந்தாலோ, பிறப்புறுப்பின் உள்ளே அரிப்பிருந்தாலோ, அது ஈஸ்ட் தொற்றாகவோ, பால்வினை நோயின் அறிகுறியாகவோ இருக்கக் கூடும்.

மாதம் ஒரு முறை மார்பக சுய பரிசோதனை வலியுறுத்தப்படுகிற மாதிரியே, பிறப்புறுப்பு சுய பரிசோதனையும் அவசியம். அந்த இடத்தில் காணப்படுகிற சிறிய கொப்புளங்கள், பருக்கள் போன்றவை அலட்சியப்படுத்தப்படலாம். ஆனால் வேறு ஏதேனும் வித்தி யாசங்களை உணர்கிற பட்சத்தில் அது உடனடியாக மருத்துவப் பரி சோதனைக்குட்படுத்தப் பட வேண்டும்.

ஒரு பென்சில் நுழையக் கூடிய அளவே உள்ள பிறப்புறுப்பானது, பிரசவத்தின் போது ஒரு குழந்தையையே வெளியேற்றும் அளவுக்குப் பன்மடங்கு பெரிதாக விரிந்து கொடுக்கும். அதற்காகக் கவலை வேண்டாம். குழந்தை பிறந்த ஆறு மாதங்களில் அது மீண்டும் அதன் பழைய அளவுக்கே சுருங்கி விடும்.

பிறப்புறுப்பிலிருந்து வாடை வீசுவது ரொம்பவே சாதாரணமான விஷயம். அந்த உறுப்பு ஆரோக்கியமாக இயங்குகிறது என்பதற்கான அடையாளங்களில் அதுவும் ஒன்று. இது தவிர நீங்கள் உட்கொள்கிற உணவின் தன்மை, அதாவது மசாலா, பூண்டு மாதிரியான உணவுகள், மாத விலக்கு சுழற்சியின் தன்மை, செக்ஸ் உறவுக்குப் பிறகான சுத்தம் போன்றவற்றைப் பொறுத்து அந்த வாடை அதிகரிக்கலாம்.

பிறப்புறுப்பிலிருந்து வீசும் துர்வாடையை மறைக்கப் பல பெண்கள் அங்கே சென்ட் உபயோகிப்பதுண்டு. சென்ட், வாசனை சோப், டிஷ்யூ மாதிரியானவை அந்தப் பகுதியை பாதிக்கும். வெறும் தண்ணீரும், மிதமான சோப்பும் மட்டுமே பிறப்புறுப்பு சுத்தத்துக்குப் போதும்.

குழந்தை பிறந்த பிறகு பிறப்புறுப்பின் இறுக்கம் தளர்ந்துவிட்டதாகவும்,அதன் விளைவாக தம்பதியருக்கிடையேயான நெருக்கம் குறைந்து விட்டதாகவும் பல பெண்கள் புலம்புவதுண்டு, கெகெல் எனப்படும்பிரத்யேகப் பயிற்சியின் மூலம் அந்த இடத்தை மீண்டும் டைட்டாக்கலாம். சிறுநீர் கழிக்கிற போது அதைப் பாதியிலேயே அடக்கிக் கொள்கிற மாதிரியான பயிற்சிதான் இது. மருத்துவரின் ஆலோச னையின் பேரில் சரியாகச் செய்கிற பட்சத்தில் கட்டாயம் பலனளிக்குமாம்.

சினைமுட்டை சினைக்கிற காலக் கட்டத்தில் பெண்களுக்கு அந்தரங்க உறுப்பின் கசிவு சற்றே அதிகமாக இருக்கும். அதாவது ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் வரை இருக்கும். இறந்த செல்களின் வெளியேற்றம்தான் இந்தக் கசிவு. மற்ற நாட்களில் இந்தக் கசிவு ஒரு நாளைக்கு அரை டீஸ்பூன் அளவாகக் குறைந்து விடும்.

அபூர்வமாக சில பெண்களுக்கு பிறப்புறுப்பின் வழியே ஏதேனும் பொருட்கள் உள்ளே சென்று விடக் கூடும். அது கர்ப்பப்பையில் சென்று மிதக்காது. வெறுமனே விரல்களை விட்டு அதை எடுக்க முடியுமா எனப்பார்க்க வேண்டும். அது முடியாத பட்சத்தில் மருத்துவரை அணுகுவதே பாதுகாப்பானது.

ஐயாயிரத்தில் ஒரு பெண் குழந்தை வீதம் பிறப்புறுப்பும், கர்ப்பப்பையும் இல்லாமல் பிறப்பதுண்டு. ஆனாலும் செயற்கையாக பிறப்புறுப்பை வைக்கிற அளவுக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் வசதிகள் பெருகிவிட்டதால் கவலை வேண்டாம். குழந்தை பெற வாய்ப்பில்லாமல் போனாலும், அவர்களது செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்க இப்படிப்பட்ட சிகிச்சைகள் வரப்பிரசாதம்.

by Dr.ஷர்மிளா

Download As PDF

பெண் குறிகள்



பெண்ணின் பாலுறுப்பின் வெளிப்பகுதி பெண்குறி எனப்படும். அதில் மூன்று பகுதிகள். முறையே குறிமேடு, உதடு, மன்மதபீடம். குறிமேடு என்பது லத்தின் மொழி வார்த்தை. வீனஸ் மேடு எனப் பொருள். (வீனஸ் என்பவள் ரோமானியரின் காதல் தேவதை)


பெண் குறி என்பது எலும்பின் மேல் அமைந்த சதைப்பிடிப்பான பகுதி. மேல்புறம் மயிர் வளர்ச்சி கொண்டது. இந்தப் பகுதயில் நிறைய நரம்பு நுனிகள் உள்ளதால் தொடுதலோ,. அழுத்துதலோ ஒரு பெண்ணைக் கிளர்ச்சியுறச் செய்யும்.

Download As PDF

ஆண்குறி

ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது. குறியானது விரைப்புத்தன்மை அடைந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து மெத்தென்ற அமைப்பில் இரு புறமும் அமைந்துள்ளன.



இந்த மூன்று உருளைகளிலும் மெத்து மெத்தென்ற திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே ஏராளமான நுண்ணிய ரத்தக்குழாய்கள் செல்கின்றன. கிளர்ச்சியுற்ற நிலையில் ரத்தம் நிறையப் பாய்வதால் திசுக்கள் உப்பி குறி விரைக்கிறது. குறி முழுவதும் ஓடும் ஏராளமான நரம்புகள் தொடவும், அழுத்தவும் படும்போது எளிதில் கிளர்ச்சியுறும் விதத்தில் அமைந்துள்ளது.

ஆண் குறியின் நுனி அல்லது தலைப்பகுதி நுரை மெத்தை போன்றது. இதில் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன. இது மிக உணர்வுள்ள பகுதி.

ஆண் குறியின் நடுப்பகுதியை விட தலையில் தான் உணர்வலைகள் மிகுதியாக இருக்கும். தலைக்கும் இடைப்பகுதிக்கும் இடையே உள்ள திசுக்களின் வளையமும் தலையோடு முன் தோலைக் கீழ்ப்பகுதியில் இணைக்கும் தோலும் மிக நுண்ணிய நரம்பு நுனிகளைக் கொண்டவை. இவற்றிலும் உணர்வலைகள் அதிகமாக இருக்கும்.

ஆண் குறியின் தலைப்பகுதியை நேரடியாகத் தூண்டுவதை விட நடுப்பகுதியை உராய்வதிலோ மேலும் கீழுமாக இழுப்பதிலோ தான் ஆண்கள் அதிக இன்ப உணர்வை அனுபவிக்கிறார்கள்.
தலைப்பகுதி நேரடியாகத் தூண்டப்படும் போது சில சமயம் வலயும், எரிச்சலும் ஏற்படும்.

ஆண் குறியின் மேல் தோல் மேலும் கீழும் நகரக் கூடியது. முன்தோலில் தொற்றுநோயோ, காயமோ இருந்தால் புணர்ச்சியின் போது வலி எடுக்கும் சிலருக்கு முன்தோல் கழன்று பின்னே போகாமல் வலி எடுக்கும். இதற்கு அறுவை சிகிச்சை உண்டு. ஆண்கள் தினமும் முன்தோலை நீக்கிக் குறியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சுன்னத் முறை மூலம் முன்தோலை நீக்கி விட்டால் இந்த வேலை சுலபமாகி விடும்.

முன் தோல் நீக்கும் இந்த அறுவை சிகிச்சையை யூதர்களும், முஸ்லீம்களும் செய்து கொள்கின்றனர். இது அந்த மதத்தினரின் தலைவரான ஆபிரகாம் கடவுளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நடப்பதாகக் கருத்து. அமெரிக்காவில் மதம் சம்பந்தப்பட்ட சடங்காக இது நடை பெறுவது கிடையாது. கனடா, மற்றும் ஐரோப்பாவில் இந்த முறை பிரபலம் அடையவில்லை. இந்த முறை சுகாதாரமானது.

காரணம், இதனால் தொற்றுநோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைகிறது. ஆனால் இதன் காரணமாக ஆண் குறியின் உணர்வாற்றல் குறைவதாகவும் சிலர் எண்ணுகின்றனர் என்பது ஒரு கருத்து. இதனால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும் என்பது இன்னொரு சாரர் கருத்து. ஆனால் இவை அனைத்தும் அறிவியல் அடிப்படையிலான உண்மைகள் அல்ல என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆண் குறிகள் ஆணுக்கு ஆண் மாறு படும். நிறம்,. அளவு, வடிவம், முன் தோல் இருத்தல் அல்லது நீக்கப்பட்டிருத்தல், ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டு. சராசரி ஆண்குறி 9.5 செ.மீ. நீளம் இருக்கும். நீண்ட ஆண்குறிகளைக் காட்டிலும் சிறிய ஆண் குறிகளில் நிறைய ரத்தம் பாய்ந்து விரைத்த நிலையில் இரண்டு வகையும் ஏறக்குறைய ஒரே நீளம் அடைய வழி செய்கின்றன.

பெரிய அல்லது நீண்ட ஆண்குறியே பெண்ணைப் புணரும் போது திருப்தி அடையச் செய்யும் என்பது வெறும் நம்பிக்கை மட்டும் தான். ஆனால் எத்தனை சிறிய ஆண் குறியும் பெண்ணுக்குப் பொருந்தும் என்பது தான் உண்மை. காரணம் பெண் குறியின் நுழை வாயிலில் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன.

அபூர்வமாகச் சிலருக்கு 2 செ.மீ. நீளத்துக்கும் குறைவான ஆண் குறி அமைந்து விடுவதுண்டு. இது இயற்கை செய்யும் குரோமோசோம் கோளாறு. ஒரு வேளை ஆண் சுரப்பான டெஸ்டோஸ்டீரான் என்ற ஹர்மோன் மிகக் குறைவாகச் சுரப்பதால் இந்த நிலை உருவாகலாம். ஆனால் பிற எந்தக் காரணங்களாலும் குறி சிறுத்துப் போயிருந்தால் அதைப் பெரிதாக்க எந்த மருந்தும், களிம்பும், மாத்திரையும் பயன் தராது. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதாவது சிறிய ஆண்குறியால் எந்தப் பெண்ணையும் திருப்திப் படுத்த முடியும். ஆனால் நமக்கு மிகச்சிறிய குறி நம்மால் பெண்ணைத் திருப்திப் படுத்த முடியாது என்று நினைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் பின்நாளில் மன ரீதியான பாதிப்புக்குள்ளாகி ஆண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

ஆண் குறியின் அடிப்பகுதியில் இருக்கும் விதைப்பை மிகவும் மெல்லிய உறுப்பு. இதன் மேல் பகுதியில் மயிர் வளர்ச்சி காணப்படும். இதன் உள்ளே டெஸ்டிகிள் எனப்படும் விதைகள் சிப்பிக்குள் முத்துப் போல அமைந்துள்ளன. இந்த உறுப்பு வெப்பம், குளிர்ச்சி, கிளர்ச்சி மற்றும் பயிற்சி போன்றவற்றால் சுருங்கவோ, விரியவோ செய்யும். வெப்பக் காலத்தில் நெகிழ்ந்து தொங்கிய நிலையில் காணப்படும். குளிரில் இறுகிச் சுருங்கி மிகச் சிறியதாகக் காணப்படும். இது தான் விதைகளின் வெப்பம் பாதுகாக்கப்பட முக்கியக் காரணம்.

பொதுவாக ஒரு மனித உடலில் இருக்கக் கூடிய வெப்ப நிலை அதிகம். அந்த வெப்ப நிலையில் விதைப்பைகள் நன்றாகச் செயல் பட முடியாது. அதனால் தான் விதைப்பைகள் உடலுக்கு வெளியே தனியாகத் தொங்கிய நிலையில் இயற்கையாகவே அமைந்துள்ளது.

ஆண் விதைகள் இரண்டு. அவை விதைப்பையில் உள்ளே பக்கத்திற்கு ஒன்றாக உள்ளன. ஒரு விதை மற்றொன்றைக் காட்டிலும் கீழே தொங்கும். பெரும்பாலும் இடது விதை கீழே இருக்கும். இடது கைப்பழக்கம் உள்ளவர்க்கு வலது விதை கீழே இருக்கும். சிலர் புணர்ச்சியின் போது விதைகளை வருடினாலோ பிசைந்தாலோ அதிகக் கிளர்ச்சி அடைவார்கள். இன்னும் சிலர் அப்படி எதுவும் கிளர்ச்சி அடைய மாட்டார்கள். அது அவர் அவர் உடல் அமைப்பைப் பொறுத்தது
ஆண் குறியின் அடிப்பகுதியில் அமைந்துள்ள விதைகளுக்கு இரண்டு தொழில்கள். ஒன்று ஆண் ஹர்மோனைச் சுரக்கிறது.

இன்னொன்று உயிரணு உற்பத்தி. டெஸ்டோஸ்டீரான் என்னும் ஆண் ஹர்மோனைச் சுரப்பது விதைகளே. ஆணுக்குரிய கிளர்ச்சியை இந்த ஹர்மோனே நிர்ணயம் செய்கிறது. இந்த ஹர்மோன் இல்லையேல் ஆண்மை இல்லை.

விந்து விதையில் உள்ள குழாய்களில் உற்பத்தியாகிறது. இந்தக் குழாய்கள் 500 மீட்டர் நீளமுள்ளவை. உயிரணு உற்பத்தியாக 70 நாட்கள் ஆகும்.

ஒரு விந்தணு மூன்று பாகங்களைக் கொண்டது. தலை, இடை, வால் என்பது அந்த மூன்று பகுதிகள். இதன் தலைப்பகுதி அக்ரோசோம் எனப்படுகிறது. இங்கு தான் இதன் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இதனால் தான் விந்தணு நீந்திச் சென்று கரு முட்டையை அடைய முடிகிறது.
விந்தணுக்கள் உற்பத்தியானதும் பல வாரங்கள் விதைகளின் பிற்பகுதியில் உள்ள சுருண்ட குழாய்களில் தங்கி இருக்கும். அவை முதிர்ச்சி அடைந்த பிறகு விதையில் உள்ள குழாயிலிருந்து புறப்பட்டு ப்ரோஸ்டேட் எனப்படும் விந்துப்பையின் உள்ளே சென்று தங்கும். விதையிலிருந்து புறப்படும் 40 சென்டி மீட்டர் நீளமுள்ள வாஸ்டெபரன்ஸ் என்ற நீண்ட குழாயை வெட்டுவதன் மூலம் தான் ஆண் கருத்தடை செய்யப்படுகிறது.

இந்த விந்துப்பையானது சிறுநீர்ப்பைக்குக் கீழே அமைந்துள்ளது. இரண்டுக்கும் இடையில் உள்ள தசை அமைப்பு சிறுநீர் கழித்தலும் விந்து வெளியேற்றமும் ஒரே சமயத்தில் நேரா வண்ணம் தடுக்கிறது. ரெக்டம் எனப்படும் குதம் விந்துப்பையின் பின் புறத்தில் அமைந்துள்ளது. ஆகவே ரத்தப்பரிசோதனை செய்யும் போது விந்துப்பையையும் பரிசோதனை செய்யலாம்.

விந்துப்பை ஒரு விதத் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இந்தத் திரவத்தின் ஊடே தான் விந்தணுக்கள் உச்சக்கட்ட இன்ப நிலையின் போது பெண் குறியின் உள் பீய்ச்சி அடிக்கப்பட்டுக் கருப்பையைச் சென்று அடைகிறது. விந்துப்பையானது குறைந்தது 30 சதவிகிதம் தான் விந்தை உற்பத்தி செய்யும். மற்ற 70 சதவிகிதம் விந்து நீர்க்குழாயில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு முறை வெளியாகும் விந்து ஒரு தேக்கரண்டி அளவு (5.மில்லி) ஆகும். ஒரு மில்லி மீட்டர் விந்தில் 4 முதல் 12 கோடி விந்தணுக்கள் உண்டு. அதாவது ஒரு முறை வெளியிடும் விந்தில் 12 முதல் 60 கோடி விந்தணுக்கள் உள்ளன.

ஒருவன் ஒரு முறை பாய்ச்சும் விந்தணுக்களைக் கொண்டு 60 கோடி மக்கள் தொகையை உருவாக்க முடியும் எனக் கற்பனையில் நினைத்துப் பார்க்கவே இயற்கையின் அற்புதத்தை நம்மால் உணர முடிகிறதல்லவா?

விந்தின் நிறம் வெள்ளை அல்லது மஞ்சள். அல்லது சாம்பல் ஒட்டக்கூடிய வழவழப்பான திரவம் அது. வெளியாகும் போது கெட்டியாக இருக்கும். வெளி வந்த பிறகு நீர்த்துப் போய்விடும்.
அதில் தண்ணீர், சளி போன்ற திரவம், ரசாயானப் பொருட்கள், (விந்தணுக்களுக்கு ஆற்றல் தரும் ரசாயனப் பொருட்களும் இதில் அடக்கம்.) ஆண் குழாய்களிலும், பெண் குழாய்களிலும் உள்ள அமிலங்களை எதிர்த்து உயிர் வாழக்கூடிய ரசாயனமும் இதில் உள்ளது.

மன்மதச் சுரப்பிகள் எனப்படும் பட்டாணி அளவில் உள்ள அமைப்புக்கள் சிறுநீர்க்குழாயின் பின்புறத்தில் ப்ரோஸ்டேட் சுரப்பிகளுக்கு அடியில் காணப்படுகின்றன. அவை சுரக்கும் திரவமானது கிளர்ச்சியின் போது உச்சக்கட்டத்திற்கு சற்று முன்னர் ஆண் குறியின் நுனியில் வந்து பனி நீர்த்திவலைகள் போல இருக்கும்.

ஆனால் பெரும்பாலானோர் இதைக் கண்டதே கிடையாது என்பது தான் உண்மை. இன்னும் ஒரு சிலருக்கு ஒரு கரண்டி அளவு கூட வெளியில் கொட்டுவதும் உண்டு. இந்தத் திரவத்தை நாம் சாதாரணமாக நினைக்கக்கூடாது. காரணம் இந்தத்திரவத்தின் வழியாகவும் விந்தணுக்கள் வந்து அபூர்வமாகக் கருப்பிடிக்கச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே இதில் அலட்சியம் கூடாது.
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு சில ஆண்கள் உடலுறவின் போது விந்தைப் பெண் குறியின் உள்ளே செலுத்தக்கூடாது என்று மட்டும் கருதி விந்து வரும் வரை பெண்குறியின் உள்ளேயே ஆண் குறியை வைத்திருப்பார்கள். விந்து வரும் போது மட்டுமே குறியை வெளியே எடுத்து விடுவார்கள். ஆனால் இது தவறு. காரணம் ஏற்கனவே வந்த திரவத்தின் வழியாக ஒரு சில நேரங்களில் விந்தணுக்கள் சென்று கருப்பையை அடையக்கூடும் என்பதை மறந்து விடக்கூடாது.
உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சூடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.

சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விவரிக்கப்படும். உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை...* இது ஒருவரின் மதிப்பீடு.

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை...


Download As PDF

Friday, August 19, 2011

அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செக்ஸ் ?



“செக்ஸ்” என்பது நமது நாட்டில் அருவருக்க தக்க, வேண்டத்தகாத, 
வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக சமூகத்தில் இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக இன்று உள்ளது. “சிக்மண்ட்பிராய்டு” என்று உளவியல் நிபுணர் “மனிதன் உயிர்வாழ்வதற்கு” உணவு என்பது எவ்விதம் அவசியமோ? அது போல், ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, தெளிந்த, முறையான, இயற்கையோடு ஒத்த, மனநிறைவடையக் கூடிய செக்ஸ் இருபாலருக்கும் மிகவும் அவசியம் என்று கூறுகிறார். மேலும் “மனிதர்கள் செக்ஸ் உணர்வில் திருப்தியடைய வில்லையென்றால் பல மனநோய்களுக்கும் தன்நிலையிழந்து செயல்பட்டு ஏற்படும் சமூக விரோத செயல்களுக்கும் ஆளாகிறான்” என கூறுகிறார்.


“செக்ஸ்“ அவசியத்தை வலியுறுத்தி தான், நமது முன்னோர்களும் அதனை நாம் வணங்கும் கோயில்களில் சிற்பங்களாக செதுக்கியுள்ளனர். மேலும் புனிதமான “காமசூத்திரம்” என இயற்கையான முறைப்படுத்தப்பட்ட செக்ஸ் வழிமுறை களையும் கூறக்கூடிய நூலையும் எழுதியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் எது நியாயமான செக்ஸ் உணர்வு? எது செக்ஸ் பிரச்சினை? என்பதில் படித்தவர்களுக்கும், பெரிய மேதைகளுக்கும் கூட தெளிவற்ற மனநிலை உள்ளது. செக்ûஸ பற்றிய தவறான புத்தகங்கள், இளைஞர்களை தவறானப் பாதையில் திசை திருப்புகின்றன. சில அறிஞர்கள் தரும் கேள்வி பதில்களும் மன குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஜான் புரூக்ஷன் என்ற அறிவியல் அறிஞர் செக்ஸ் என்பதற்கு ஒரு தெளிவான விளக்கத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது “ஒரு ஆண் தனது உள்ளத்தாலும் உடலாலும் பெண்ணை மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து, தனது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை குறையாமல் (சராசரி 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை) உடலுறவில் ஈடுபட்டு, ஆணும் பெண்ணும் உச்சகட்ட திருப்தி நிலையடைந்து (சராசரியாக 20 முதல் 30 நிமிடம்) அமைதி பெறுவது”. இவருடைய கூற்றே பல மனோதத்துவ அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும்.

இனிமேல் செக்ஸில் இருபாலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள் என்ன? எதனால் ஏற்படுகிறது என்பதை பற்றியும், அதற்கு உண்டான, தீர்வான ஹோமியோ மருந்துகளை பற்றியும் காண்போம். பொதுவாக செக்ஸ் சம்மந்தபட்ட பிரச்சனைகளை உண்டாவதற்கான காரணிகளை வைத்து இருபெரும் பிரிவாக மருத்துவ உலகம் பிரித்துள்ளது.


1.மனரீதியிலான பாதிப்புகள் :

அதாவது, பயம், கவலை, அறியாமை, வெறுப்புணர்ச்சி இவற்றால் ஏற்படக்கூடியது. செக்ஸில் ஏற்படும் திருப்பதியின்மையினாலும் கூட பின்னர் மனநோய்கள் உண்டாகின்றன. மனநோயும் செக்ஸ் குறைபாடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

2. உடலிலுள்ள உறுப்புக்களில் ஏற்படும் மாற்றங்கள் குறைபாடுகளை உண்டாக்குகின்றன.

இரத்தகுழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடுகளினால் உண்டாகும் குறைகள், தைராய்டு சுரப்பு குறைவதால் வரும் பாதிப்புகள், ஆண், பெண் ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடுகள்.

3. சர்க்கரை வியாதி

சிறுநீரக கோளாறுகள் மற்றும் இரத்தசோகை போன்ற வியாதிகளினால் செக்ஸ் குறைபாடுகள் ஏற்படுகிறது. இந்தக் காரணிகளால் இருபாலருக்கும் செக்ஸில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வோம்.



ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் :

செக்ஸ் பிரச்சினைகள் என்றாலே ஆண்களுக்கு மட்டும் தான்; அதுவும் ஆண்மைக் குறைவு ஒன்றுதான் ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆண்மைக்குறைவு என்பது ஆணுக்கு செக்ஸில் உண்டாகும் குறைபாடுதான். இதில் உண்டாகும் குறைகள் 3 வகையாக உள்ளன.

1. Erection disorder (ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைபாடு)

பொதுவாக செக்ஸில் ஈடுபடும் பொழுது ஆணின் பிறப்புறுப்பிற்கு சராசரியாக 5 முதல் 10 நிமிடமும், பெண்ணு றுப்பில் நுழைந்தவுடன் “3 முதல் 5 நிமிடமும்” விறைப்புத்தன்மை அவசியம். இதில், விறைப்புத்தன்மை மிக எளிதில் குறைந்து ஆணுறுப்பு துவண்டு விட்டால் அது குறைபாடு மேலும் சிலருக்கு விறைப்பு தன்மையே சில நோய்களில் இருக்காது. (உ.ம்.) சர்க்கரை, சிறுநீரக செயலிழப்பு.

2. Ejaculation Premature (விந்து விரைவாக வெளிப்படுதல்) :

பொதுவாக விந்து வெளியேற 3 முதல் 5 நிமிடம் ஆக வேண்டும். அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறப்பினுள் நுழையுமுன் விந்து வெளியேறினால் அது செக்ஸில் குறைபாடுதான்.நமது கிராம மக்கள் இதனை “நரம்புத்தளர்ச்சி” என்று அவர்களுக்கே உரிய பாணியில் கூறிவருகின்றனர். இது 70 % ஆண்களை பாதித்துள்ளது.

3. Inhibited Orgasam (செக்ஸ் உணர்வு குறைபாடு) :

உன்னத நிலை உணர்வற்றுயிருத்தல் செக்ஸ் நிலையில் இருக்கும் பொழுது இது ஆணுக்கு பெண்பிறப்புறுப்பினுள் நுழைந்தவுடன் விந்தணு வெளிப்படும்பொழுது ஏற்படும் செக்ஸ் உன்னத நிலை உணர்ச்சியற்றுயிருத்தல் அல்லது உணர்வுயிருந்தும் விந்து சரியாக வெளிப்படாதிருத்தல்.

4. Priapism (ஆணுறுப்பு விறைப்பில் தாங்கமுடியாத வலி) :

இந்த நிலையில் செக்ஸ் என்றாலே பயம் உண்டாகும்.

5. Dyspareunia

ஆணுறுப்பு, பெண்உறுப் பினுள் நுழைந்தவுடன் உண்டாகும் தாங்க முடியாத வலி. இது இருபாலருக்கும் உண்டாகிறது.

6. Sexual Addiction (செக்ஸ் அடிமைநிலை) :

குடிபோதை மயக்கம் மீளமுடியாமை போல் இது ஒரு செக்ஸ் அடிமைத்தனம், எந்நேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல். சொந்த வேலைகளைக் கூட அன்றாடம் செய்ய முடியாமல் சிரமப்படுதல். இது இருபாலருக்கும் பொதுவானது. இந்த குறைபாட்டினால் தான் கலாச்சார சீரழிவுகளை நாம் சந்திக்கிறோம்.

7. Sex arousan disorder (செக்ஸ் கிளர்ச்சி உணர்வு குறைபாடு) :

பொதுவாக செக்ஸ் உணர்வு சிலருக்கு மிகக் குறைவாகவும் இல்லாத நிலையும் இருக்கும். சிலருக்கு மிக அதிகமாக இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையில் Satyriasis (சேட்டிரியாஸிஸ்) என்று மருத்துவ உலகில் கூறுகிறார்கள். பெண்ணுக்கு அதிகமாகயிருத்தல் : “Nymphomania” (நிம்போ மேனியா) என்று கூறுகிறார்கள். இந்த குறைபாட்டினால் தான் இன்று HIV தலை விரித்தாடுகிறது நம் நாட்டில். இது தவிர, சிலருக்கு (Congenital) பிறப்பிலேயே ஆணுறுப்பு நீளம் மிகக் குறைவாகவும் testes இல்லாமலும் இருக்கும் உ.ம்.
Turner’s Syndrome இந்த குறைபாடுகளை சரி செய்வது மிக கடினம்.

பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் :

பொதுவாக ஆண்மைக்குறைவைப் போலவே பெண்மைக்குறைவு ஏற்படுகிறது. ஆனால் பெண்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை, பெரிதுபடுத்துவதில்லை. இதனால் பெண்மையில் ஏற்படும் பிரச்சனைகள் செக்ஸில் (மருத்துவ வியாபாரத்தில்) பெரிதுபடுத்தப்படவில்லை.

பொதுவாகஆணுக்கும் பெண்ணுக்கும் மேலே விளக்கம் கூறியதில் Inhibites Orgasm (செக்ஸ் உணர்வு உன்னத நிலை, இல்லாதிருத்தல்), Secual addiction, Sex arousam disorder, Dysparennia இருபாலருக்கும் பொதுவானதே, இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களில் Inhibite Sexual Orgasm 90% நகர்ப்புறங்களில் Sex arousal disorder மற்றும் Sexual addiction 90% உள்ளதாக 2007 ஆம் ஆண்டு மனரீதியான செக்ஸ் குறித்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. மேலும் 2007 ம் ஆண்டு முடிந்த “Divorce” கோர்ட்டு தீர்ப்புகளில் 95 % செக்ஸ் பிரச்சனையை காரணம் காட்டிதான் Divorce வழங்கப்பட்டுள்ளது.

ஹோமியோபதியில் செக்ஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு :

இன்று மருத்துவ அழகுசாதனப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தான் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. செக்ஸ் பிரச்சனை என்றாலே மாற்று மருத்துவம் தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஆங்கில மருந்துகளினால் உடனடி நிவாரணம் கிடைக்க பெற்று பின்னர் பக்க விளைவுகள் உயிரே போய்விடும் நிலை ஏற்படுகிறது.

ஹோமியோபதி மருத்துவ துறையில் எந்த செக்ஸ் பிரச்சனைகள் இருந்தாலும் நிரந்தரமாக, பக்கவிளைவற்ற வகையில் குணபடுத்தப்படும் ஹோமியோபதியில் முதலில் நம்மிடம் வரும் நோயாளியின் பிரச்சினையை நன்றாக புரிந்து கொண்டு, மனஆறுதல் மற்றும் செக்ஸ் நெறிமுறைகளை (இயற்கையின்) தெளிவாக அறிவுறுத்த வேண்டும். பின்னர் கண்டறிந்த செக்ஸ் பிரச்சனைக்கு தகுந்த ஹோமியோபதி மருந்தை நோயாளியின் மனநிலைக்கு தகுந்தவாறு தேர்ந்தெடுத்து கொடுத்தால் நிரந்தர குணம் உண்டாக்கலாம். ஹோமியோபதியை பொறுத்தவரை சில மருந்துகள் ஆண்களிடத்தும் சில மருந்துகள் பெண் களிடத்தும் நன்றாக வேலை செய்யும்.

(Impotence) :

Erection disorder :-

Graphites 200, Cantharis 30, Lycopodium 1m, Agnus castus-30, Aswagandha Q, Yohimbhinum Q, Damiana Q, Zincummet 30, Thyoidinum 1m, Nux.Vomica 10m. போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை நோயாளியின் அறிகுறிகளுக்கு தகுந்தவாறு கொடுக்க வேண்டும். சர்க்கரை வியாதிக்கு Lactic acid - 30 Moschus 200 Specific ஆக உள்ளது.

Premature ejaculation :

Caladium 30, Bufo 30, Conium 30, Acidphos 200, Selenium 200, Phosphorus - 1m, Medorrhirnum 1m, Sulphur 200

Inhibited Sex Orgasam:-

ஆணுக்கு :-

1. உன்னத உணர்வற்ற நிலைக்கு :- Graphites 1m, Phosphorus 1m, Cantharis 200, Conium 200,
2. உன்னத உணர்வற்ற நிலை :- (Vascular disease - ல் ஏற்பட்டால்) - Arnica 200, Barydamur 200, Strontium Carb 30, Plumbum met 200.
3. விந்து வெளிவராத நிலை :-
Aurum met 30, Argmet 30, Cuprummet 200, Platina 200, Nat. Phos 200, Nat. Mur. 1m, Ars alb 10m

பெண்ணுக்கு :-

1. உன்னத உணர்வற்ற நிலைக்கு :-
Cantharis 30, Graphitas 30, China 30, Hyosyomus 1m, Iridunm 30, Juglans regia 30, Kaliphos. 1m, Nuphar luctum 30, Oophorinum 30.

Sex arousal disorder :-

ஆணுக்கு குறைவாகயிருத்தல் :-
Aswaganda Q, Avena Q, Lycopodium 10m, Phosphorus 1m, Damiana Q, Yohimbinum Q, Origeron 30, Cantharis 30, Kaliphos 1m,

பெண்ணுக்கு குறைவாகயிருத்தல்:-
Graphites 1m, Thyroidinum 1m, Sepia 200, Muriatic acid 200, Ignatia 1m, Alumina 200, Kreosote 200, Nat.mur. 200, Kaliphos 200, Damiana Q.

ஆணுக்கு அதிகமாயிருத்தல் :- (Satyriasis)
Picric acid 30, Acidphos 200, Selenium
200, Syphillinum 10m.

பெண்ணுக்கு அதிகமாயிருத்தல் :- (Nymphomania)
Platinum - 1m, Nat.Mur.200, Kalicarb - 1m LiLium Tig 30, Med. 200.

Priapism :-

ஆணுக்கு தாங்க முடியாத வலி, விறைப்புத் தன்மையின் பொழுது Cantharis 200, Arnica 200, Crategus 6, Lachesis 200, Nat. Phos. 200, Kalicarb 1m, Ferrum phos. 200.

Dyspareunia :-

பிறப்புறுப்பினுள் நுழையும் பொழுது ஏற்படும் வலி இருபாலருக்கும்.

ஆணுக்கு :-
Picric acid 200, Plumbum met. 200, Ferrumphos 30, Cantharis 200, Nux v. 1m, Lycopodium - 10m.

பெண்ணுக்கு :-
Platina 200, Lilium Tig 200, Oophorinum - 6x, Thyroidinum 6x, Alumina 30, Borax 30, Kreosote 30.

மேற்கூறிய மருந்துகள் அனைத்து நோயாளியின் நோய் அறிகுறியின் தன்மைக்கேற்பவும், மனநிலையை கருத்தில் கொண்டும் முழுவதும் ஆய்ந்து அறிந்து மருந்துகளை தேர்வு செய்து கொடுத்தால் நிரந்தர குணம் ஏற்படும். மேலும் மேற்கூறிய மருந்துகள், வீரியம் அனைத்தும் என்னுடைய அன்றாட மருத்துவப்பணியில் அதிகமாக பயன்படுத்த கூடிய மருந்துகளை மட்டுமே கூறியுள்ளேன். ஹோமியோபதியில் எண்ணற்ற மருந்துகள் உள்ளன. எனவே எந்த மருந்துகளையும் ஹோமியோபதி மருத்துவரின் ஆலோ சனைக்கும் பின் சாப்பிடுவதே நல்லது.
Download As PDF

செக்ஸ்: உச்சகட்டத்தை விரும்பும் பெண்கள்; இதுவரை கைகொடுக்காத ஆய்வுகள்?!


நாம எல்லாரும் தெரிஞ்சிக்க, புரிஞ்சிக்க, விவாதிக்க விரும்புற ஆனா இப்படியெல்லாம் செய்ய ஏனோ தயங்குற ஒரு விஷயமாத்தான் இருக்கு “செக்ஸ்” சம்பந்தப்பட்ட எல்லாவிதமான கருத்துகளுமே நம்ம சமுதாயத்துல இதுவரைக்கும்!  அளவான எல்லா விஷயங்களுமே நல்லதுதான்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்! அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் செக்ஸ்கூட!
ஆனா செக்ஸை சுத்தி நாம மூட நம்பிக்கைகள்,   தயக்கங்கள், பயங்கள், தவறான புரிதல்கள் இப்படி எத்தனையோ சுவர்கள எழுப்பி, செக்ஸை பத்தின அடிப்படை உண்மைகள், யதார்த்தங்கள் இப்படி எதுவுமே வெளியில் தெரியாமலும், விளங்காமலும் போவதற்க்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கிட்டோம்! விளைவு, செக்ஸை எப்படி அணுகுவதென்று தெரியாமல், செக்ஸ் குற்றங்கள், கற்பழிப்புகள், கள்ள உறவுகள் இப்படி பலவகையான சிக்கல்களையும், குழப்பங்களையும் தொடர்ந்து சேர்த்துக்கிட்டே வர்றோம். இதெல்லாம் என்னைக்கு பூதாகரமா வெடிக்கப்போவுதோ தெரியல?!
செக்ஸ் சம்பந்தப்பட்ட எத்தனையோ குழப்பங்கள்ல ஒன்னுதான் இந்த உச்சக்கட்டம்! உச்சக்கட்டம் அப்படீன்னா என்னன்னு கேட்டா, ஒரு பதில் இல்ல, கிட்டத்தட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான பதிலைத்தான் சொல்வாங்க! ஏன்னா, உச்சக்கட்டம் என்பது விவரிக்கமுடியாத, அனுபவித்துமட்டுமே உணரக்கூடிய ஒரு சிக்கலான உணர்வு! ஆனா, விஞ்ஞானமும், உளவியலும் உச்சக்கட்டத்துக்கு வெவ்வேறு விளக்கங்களைக் கொடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது! அந்த விளக்கங்கள நாம இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். இப்போ இன்றைய பதிவுச் செய்தியை பார்ப்போம் வாங்க….
உச்சக்கட்டம் அப்படீங்கிறது அடிப்படையில, பால் உறுப்புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவிலான பலவகையான மாற்றங்களையும், மனதளவிலான சில மாற்றங்களையும் உள்ளடக்கிய ஒரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல்வேறு பாலுறுப்புகளிலிருந்து மூளைக்கு செல்லும் ரசாயன சமிக்ஞைகளும், அதற்க்கான மூளையின் எதிர்வினையாய் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் உடலியக்க மாற்றங்களுமே காரணம்!
ஆர்கஸம்/அனார்கஸ்மியா பிரச்சினைகளும் சில பாலியல் ஆய்வுகளும்!
Image credit:www.orgasm2012.com
இந்த உச்சக்கட்டத்தை ஆங்கிலத்தில் ஆர்கஸம் என்கிறார்கள். உலகில் செக்ஸில் ஈடுபடும் எல்லாருக்குமே, உடலுறவின்போது உச்சக்கட்டத்தை அடைவதுதான் குறிக்கோள். ஆனாலும், உச்சக்கட்டத்தை அடைவது என்பது பலருக்கு கைவராத ஒரு கலையாகத்தான் இருக்கிறது என்கிறது விஞ்ஞானம்! உச்சக்கட்டத்தை அடைந்தால் சந்தோஷம் இல்லைன்னா என்ன உசுரா போய்விடும் அப்படீன்னு நீங்க யோசிக்கலாம். செக்ஸில் ஈடுபடுவோரால் தொடர்ந்து உச்சக்கட்டத்தை அடையமுடியவில்லையென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும் செக்ஸ் குறைபாட்டில்தான் முடியும் என்கிறார்கள் பாலியல்துறை ஆய்வாளர்கள்!
இந்தப் பிரச்சினை அதுபாட்டுக்கு இருந்துட்டுப்போய்டா ஒன்னும் பிரச்சினையில்ல. ஆனா, ஒருத்தரோட வாழ்க்கைத்தரத்தையும், உறவுகளையும் பாதிக்கக்கூடியது இந்தக் குறைபாடு என்கிறார் அமெரிக்காவின், லாஸ் ஏஞ்ஜலீஸிலுள்ள செடார் சினாய் மருத்துவ மையத்தின் உளவியல் ஆய்வாளர் வாகி வில்லியம் இஷக்!
உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை என்பது பெண்களிடையே ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது என்கிறார் இஷக். கடந்த 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 20 முதல் 40 வயதான பெண்களில், சுமார் 24% பெண்களுக்கு மாதக்கணக்கில் உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை இருப்பது கண்டறியப்பட்டது என்றும், அனார்கஸ்மியா குறைபாட்டினால் அவதிப்படும் இவர்களில் ஒரு சிலரே மருத்துவரை நாடுகிறார்கள் என்றும் கூறுகிறார் விஞ்ஞானி இஷக்! காரணம், சமுதாயத்தில் செக்ஸ் செயல்பாடில் திறமையின்மை என்பது ஒரு அவமானமாக கருதப்படுகிறது என்பதே என்கிறார்!
உளவியல் விஞ்ஞானி திரு.இஷக் அவர்களின் தலைமையிலான சமீபத்திய ஒரு ஆய்வில், நான்கில் ஒரு பெண்ணுக்கு  ஒரு பகல்கனவாகவே இருக்கும் உடலுறவின்போது உச்சக்கட்டம் என்னும் குறைபாட்டை தீர்க்க மருத்துவமும், இதுவரையிலான ஆய்வுகளும் போதவில்லை என்று தெரியவந்துள்ளது! பெண்களின் உச்சக்கட்டக் குறைபாடு குறித்து இதுவரை நடத்தப்பட்ட சுமார் 101 ஆய்வுகளை அலசிய இந்த ஆய்வில், பெண்களின் செக்ஸ் பிரச்சினைகளிலேயே இரண்டாவது தலையாய பிரச்சினையான உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை என்பதற்க்கான சிகிச்சைகள் மிக மிகக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது என்கிறார்கள் இஷக் தலைமையிலான ஆய்வுக்குழுவினர்!
பலவகையான செக்ஸ் தெரபிகளை மேற்கொள்ளக்கூடிய திறமைசாலியான் பல பாலியல் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றபோதும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் மருந்துகள் என்று பார்க்கையில், ஒரு மருந்து சரியா, தவறா என்றறியும் சோதனை முயற்ச்சிகளே என்கிறார் இஷக்!
ஆர்கஸம் குறித்த குழப்பங்களும், அனார்கஸ்மியாவுக்கான தீர்வுகளும்!
உச்சக்கட்டம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒருவர் மருத்துவரை அணுகினாலும், தீர்வுக்கான சிகிச்சை சிக்கலானது. காரணம், உச்சக்கட்டத்தைப் பொருத்தவரை இத்தனை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவதுதான் இயல்பானது என்று சொல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது! ஆக, மருத்துவர்கள் நோயாளிகளின் வயது, செக்ஸ் அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கிறார் இஷக்!
ஆர்கஸம் தொடர்பான குழப்பம் ஒரு பக்கமென்றால், அனார்கஸம் ஏன் ஏற்படுகிறது என்பதற்க்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிவது என்பது இன்னொரு பெரிய பிரச்சினை! அனார்கஸம் குறைபாடுள்ளவர்களில் பலருக்கு  குறைபாட்டுக்கு காரணம் உளவியல்பூர்வமானது. உதாரணமாக, கடந்தகால பாலியல் துன்புறுத்தல்கள், செக்ஸ் தொடர்பான குற்ற உணர்வு மற்றும் தோற்றம் குறித்த குற்ற உணர்வு!  முறிந்துபோன திருமண உறவுகள் மற்றும் செக்ஸ் குறித்த விவாதமின்மை ஆகியவை வேறு சில காரணங்கள்! உறவுகள் குறித்த கௌன்சிலிங் மற்றும் சைக்கோதெரபி ஆகியவை இவர்களுக்கான சிறந்த சிகிச்சைகள்!
வேறு சில பெண்களுக்கு, அனார்கஸ்மியாவுக்கான காரணங்கள் மருத்துவ ரீதியானது! உதாரணமாக, சிறுநீரகக் கோளாறுகள், ஃபைப்ரோமயால்ஜியா மற்றும் அத்தீரோஸ்க்ளீரோசிஸ் என்னும் கொலஸ்டிரால்  மூலம் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு ஆகியவை என்கிறது ஒரு ஆய்வு! குழந்தைப்பிறப்புக்குப் பின்னான விலா எலும்புகளின் உறுதியின்மையும் மற்றுமோர் காரணமாம். இம்மாதிரியானவர்களுக்கு, ஹார்மோன் மாத்திரைகளான டெஸ்டோஸ்டீரோன் மற்றும் ஈஸ்ட்ரஜன் பலன் தரக்கூடுமென்றாலும், டெஸ்டோஸ்டீரோனால் ஆண்தன்மை அதிகரிக்கும் ஆபத்தும், ஈஸ்ட்ரஜனால் கேன்சர் வரும் ஆபத்தும் இருக்கிறது என்பது கவனத்தில் கொள்ளவேண்டியவை!!
அனார்கஸ்மியாவுக்கு தீர்வுகாண வேண்டும் பல ஆய்வுகள்!
பெண்களின் உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடுகளைக் குணப்படுத்துவதற்க்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பான எஃப்.டி.ஏ வின் தரச்சான்றிதழ் மற்றும் ஒப்புதல்பெற்ற மருந்துகள் இதுவரை இல்லை!! இப்பிரச்சினைக்கான தீர்வு என்று கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஃப்லிபான்செரின் (flibanserin) என்னும்  மருந்து தரமானதில்லை என்று எஃப்.டி.ஏ வால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!
இஷக் அவர்களின் சமீபத்திய ஆய்வில், ஹார்மோன் தெரபிகள், வயாக்ரா போன்ற மருந்துகள் உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடுகளுக்கு பலனளிக்கக்கூடியவை என்று முந்தைய சில ஆய்வுகள் சொல்லியிருந்தாலும், அந்த ஆய்வுகள் முழுமையானதாக இல்லை என்று கண்டறியப்பட்டது! கடந்த 2003 ஆம் ஆண்டு, தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட செஸ்ட்ரா (Zestra) என்னும் எண்ணை பெண்களுக்கு உச்சக்கட்டத்தை ஏற்படுத்தியது என்று ஒரு ஆய்வு சொன்னாலும், ஆய்வில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 20 பெண்கள் என்றும், அதில் 10 பேருக்கு இந்த எண்ணையும், மற்றவர்களுக்கு ப்ளாசிபோ என்னும் மருந்தில்லா பொருளுமே கொடுத்து சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!மிகச்சிறிய இந்த ஆய்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இல்லை என்கிறார் இஷக்!
ஆக, உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடுகளான அனார்கஸ்மியா போன்றவற்றிற்க்கு தீர்வு காண, புதிய மருந்துகளை சோதிக்கும்போது, பெரிய எண்ணிக்கையில் பெண்களை சோதனைக்கு உட்படுத்தும், பெரிய அளவிலான ஆய்வுகள் மிகவும் அவசியம் என்றும், தரமான வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு மனிதச் சமுதாயத்தை உருவாக்க, செக்ஸ் குறைபாடுகளை தீர்க்க வேண்டியது மிக மிக அவசியம் என்கிறார் ஆய்வாளர் இஷக்!!

Download As PDF

செக்ஸ்: ஒரு “புள்ளி” விவரம்!


செக்ஸ் என்றாலே, “அது ஒரு மர்மம்” என்பதுபோலத்தான் பாவிக்கப்படுகிறது உலகத்தின் வளர்ந்த, இடைப்பட்ட மற்றும் பின்தங்கிய என எல்லா நாடுகளிலும். விளைவு, செக்ஸ் பற்றிய விவரங்களை அறிய ஒரு அதீத ஆர்வம், ஒரு இனம்புரியாத தயக்கம், ஒரு புத்துணர்ச்சி என பல வகையான உணர்வுகள் நம்மை ஆட்கொண்டு விடுகின்றன! சரி, செக்ஸ் பத்தின ஒரு செய்திக்கே இவ்வளவு பில்டப்புன்னா, உலகத்துல இருக்கிற எல்லா மக்களோட செக்ஸ் பத்தின ஒரு புள்ளி விவரம்னா கண்டிப்பா ஒரு “கிக்” இருக்கத்தானே செய்யும்?!
புள்ளி விவரம்ன உடனே இந்தியாவுல மொத்தம் 40 கோடியே 68 லட்சம் விடலை பசங்க/பொண்ணுங்க இருக்காங்க, அவங்கள்ல 20 கோடி பேர் கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு முறையாவது செக்ஸ் வச்சிக்கிறாங்க….அப்படின்னு நம்ம “புள்ளி விவரம் கேப்டன்” விஜயகாந்த் மாதிரி பட்டியல் (ப்ளேடு!) போடப் போறேன்னு  நெனச்சிடாதீங்க மக்களே! இது ரொம்ப சின்ன பட்டியல்தான். ஆனா, கொஞ்சம் சுவாரசியமான, அதே சமயத்துல ஆச்சரியமான புள்ளி விவரங்கள பத்திதான் நாம இப்போ பார்க்க போறோம்!

ஆமாம், நாம ஏன் உடலுறவு வச்சிக்கிறோம்?

எத்தன பேரு இப்படி கெளம்பி இருக்கீங்க?! அப்படின்னு கேட்காதீங்க! உண்மையாலுமே நாம் எதுக்கு செக்ஸ் வச்சிக்கிறோம்னு பார்த்தா, பாலுணர்வு தூண்டப்படுவதால் (அதாங்க….”மூடு” வர்ரதுனால!) அப்படின்னு ஒரு நேரடியான காரணமிருந்தாலும்,  நம் சந்ததியை உருவாக்க அப்படின்னு ஒரு  அறிவியல்பூர்வமான காரணம் ஒன்னு இருக்குங்கோவ்! சரி நாம் இப்போ ஒரு முக்கியமான புள்ளி விவரத்துக்கு வருவோம்.
உலகத்துலேயே மிக அதிகமான குழந்தைங்கள பெற்ற பெண்மணி யாரு தெரியுமா உஙகளுக்கு? அவங்க 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ரஷ்யப் பெண். உலகத்துலேயே அதிகமான குழந்தைங்கள பெற்ற பெண் அப்படிங்கிற உலக சாதனை படைச்சவங்க! அவங்களுக்கு மொத்தம் எத்தனை குழந்தைங்க தெரியுமா? 69 குழந்தைங்க! இந்த குழந்தைங்கள மொத்தம் 27  பிரசவத்துல, 16 இரட்டைக்குழந்தைகள், 7 மூன்று குழந்தைகள் மற்றும் 4 முறை நான்கு குழந்தைகள் வீதம் பெற்றெடுத்துருக்காங்க. அடேங்கப்பா!
இருங்க இருங்க, அதுக்குள்ள இப்படி ஆச்சரியப்பட்டா எப்படி? ஆம்பிளைங்க மட்டும் சளைச்சவங்களா என்ன? அப்படின்னு  நம்மாளு ஒருத்தரு உலகத்துலயே அதிகமான குழந்தங்களுக்கு அப்பா அப்படிங்கிற கின்னஸ் சாதனையை படைச்சு கலக்கிட்டார்ல?! அவரு 17- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மொராக்கோ நாட்டு மன்னர். நம்மாளு மொத்தம் 342 மகள்கள், 525 மகன்கள், ஆக  867 குழந்தைங்களுக்கு அப்பா. அடேங்கப்பா! நாங்க சிங்கம்ல!?  சரி அடுத்த மேட்டருக்கு வருவோம்…

ஆமா “அதோட” அளவுக்கும், திருப்தியான  செக்ஸுக்கும் உண்மையிலேயே ஏதாவது சம்பந்தம் இருக்குதா?

சேச்சே….அதெல்லாம் சும்மா டுபாக்கூரு! ஊரை ஏமாத்தறதுக்காக எவனோ போட்ட பிட்டு! சினிமாவுல காட்டறதெல்லாம் சும்மா. அறிவியல் ஆய்வுப்படி, உணர்ச்சிவசப்பட்ட  “அதோட” சராசரி அளவு 5-7 இன்ச்சுதானாமுங்க! அவ்வ்வ்…!

நாம உடலுறவு வச்சுக்க, உதவி எதாவது தேவையா?

40 வயதான சுமார் 5 விழுக்காடு ஆண்களும், 15-25 விழுக்காடு 65 வயதான ஆண்களும் “எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன்” அப்படிங்கிற ஒரு பிரச்சினையை அனுபவிக்கிறாங்களாம்! அப்படின்னா கண்டிப்பா “….க்ரா” தேவையோ?!

சராசரியா மக்கள் தங்கள் கற்பை எந்த வயசில இழக்கிறாங்க?

அமெரிக்க ஆண்கள் 16.9 வயசிலயும், பெண்கள் 17.4 வயசிலயும் தங்கள் கற்ப்பை இழக்கிறாங்களாம். இதுக்கு மரபனுவியல் சம்பந்தமான காரணங்கள் கூட அடிப்படையா இருக்க்லாமுன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க!

கல்யாண ஆன எத்தன பேரு நிம்மதியா தூங்கறாங்க?

அமெரிக்காவுல, கல்யாணமான ஆண்/பெண்கள்ல பத்துல ஒருத்தர் (12 விழுக்காடு) தாங்கள் இரவில் தனியாக தூங்கறதா சொல்லியிருக்காங்க! என்ன கொடுமை சரவணன் இது?!

ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும் உச்சகட்டதை (ஆர்கஸம்) அடைவீங்களா?

இந்த கேள்விக்கு, 75 விழுக்காடு ஆண்கள் ஆம் என்றும், வெறும் 29 விழுக்காடு பெண்கள் ஆம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்!

“அந்த” மாதிரி சுகம் மட்டும் கொடுக்கிற நண்பர்கள் இருக்காங்களா?

மூன்றில் இரண்டு பங்குஅமெரிக்க கல்லூரி மாணவர்கள் ” அந்த மாதிரி” நண்பர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டதாகவும், அந்த மாதிரி நட்புக்கு கமிட்மென்ட் இல்லாத ஒருவர் அவசியம் அப்படின்னும்  சொல்லியிருக்காங்க!  அதுமட்டுமில்லாம, நண்பர்களுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட 50 விழுக்காட்டினர் எல்லா விதமான காம விளையாட்டுகளிலும் ஈடுபட்டதாகவும், 22.7 விழுக்காட்டினர் புணர்ச்சி மட்டும் வைத்துக்கொண்டதாகவும்,  8 விழுக்காட்டினர் புணராமல், இன்ன பிற கேளிக்கைகளில் மட்டும் ஈடுபட்டதாகவும் சொல்லியிருக்காங்க!

இதுவரைக்கும் எத்தனை செக்ஸ் பார்ட்னர் இருக்காங்க உங்களுக்கு?

இந்தக் கேள்விக்கு, 20-50 வயதுக்குட்பட்ட பெண்கள் செக்ஸ் பார்ட்னர் என்றும், ஆண்கள்7 என்றும் சொல்லிருக்காங்க! இதத்தான் கலிகாலம்னு சொல்றாங்க போலிருக்கு?!
இப்போ நாம ஒரு அதிமுக்கியமான மேட்டருக்கு வருவோம், அதாங்க “புள்ளி ராஜா மேட்டரு”!

செக்ஸ் விளையாட்டில் ஈடுபடுவோருக்கு செக்ஸ்  சம்பந்தமான தொற்று நோய்கள் வருமா?

தொடர்ந்து செக்ஸில் ஈடுபடுவோரில், குறைந்தது 50 விழுக்காட்டினருக்கு “HPV Infection” (Human Pappilloma Virus) அப்படிங்கிற ஒருவித வைரஸ் கிருமியால வர்ர நோய் வாழ்க்கையில ஒரு முறையாவது வருமாம்!  இந்நோயை இரு வகையாக பிரிக்கலாம்.  இரண்டு வருடங்களில் குணமாகக்கூடிய  ஆபத்தில்லாத நோயாகவும், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நோயாகவும் வரும் வாய்ப்பு இருக்கிறதாம்!  கவலைப்படாதீங்க, 90 விழுக்காடு வரை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின்மூலம் இந்நோயை விரட்டி அடித்துவிடலாமாம்! வயித்துல பால வாத்துட்டாங்கப்பா?!
Download As PDF