Thursday, September 1, 2011

காமசூத்திரம் 06:எல்லாம் உன்னோட கைராசி



 இருவரும் ஒன்றாய் நடந்த செல்லும்போது உங்கள் உடம்பு அடிக்கடி அவளுடைய உடம்பைத் தொட்டுக் கொள்ள வேண்டும். எதைப் பற்றியேனும் வினா எழுப்புங்கள். சிரித்து கொள்ளுங்கள். முடிந்தால் தழுவிக் கொள்ளவும் முயற்சி செய்யுங்கள்.
பறவைகளும் விலங்ககளும் மனிதர்களும் இணைந்திருக்கும் படத் தொகுதிகளை அவளிடம் காண்பித்து அவளுடைய உணர்வுகளைத் தூண்டுங்கள். அவளுடன் நீர் நிலைகளில் நீந்துகிறபோது அவள் உங்களை விட்டு சிறிது தொலைவு செல்லும்வரை காத்திருங்கள்.
பிறகு நீருக்கடியில் நீந்தீச்சென்று அவளுடைய காலைப் பற்றுங்கள் நீர்ப் பரப்பிற்க்கு மேல் வரும்முன்பாக அவளது உடம்பை தொட்டு தடவி சீராடடுடங்கள்.
 நீங்கள் காணும் கனவுகளைப் பற்றி பேசுங்கள் ஆமா இப்போ நீ உடுத்தியிருக்கும் இதே உடையில்தான் என கனவிலும் வந்தாய். கனவா நனவான்னே தெரியலை என்கிற மாதிரி. அதன் நோக்கம் நீங்கள் எப்போதும் அவள் நினைவாகவே இருக்கிறீர்கள். அவள் நினைவு உங்களை வாட்டிக கொண்டிருக்கிறது என்பதை அவளுக்கு உணர்த்துவது தான்.
நடன அரங்கிலும் நாடக மன்றங்களிலும் அவளோடு நெறுக்கமாய் அமர்ந்து கண்டு களியுங்கள். யாரும் பார்க்காத படி இரகசியமாய் அவளது இடுப்பில் முழங்கையால் இடியுங்கள். காலை மென்மையாகத் தடவுங்கள். அவளுடைய கால் விரல்களை உங்கள் கால் விரல்களில் சிறை பிடியுங்கள். உங்கள் கால் விரல் நகங்களால் அவளுடைய உள்ளங்காலில் கீறுங்கள் அவள் உங்கள் செயல்களை தடுக்கிறவிதமாய் முணுமுணுக்காவிடில் மேலே தொடலாம். மேலும் தொடரலாம்.
ஒரு மலைரையோ பொருளையோ அவளிடம் கொடுக்கும் போதும் அவளிடமிருந்து பெறும்போதும் உங்கள் நகங்கள் அவளுடைய உள்ளங்கையில் ஓர் உணர்வை ஏற்ப்படுத்தட்டும். உங்களுடைய இணக்கத்தை அவளுக்கு புரிய வைப்பதாக அவளுடைய இணகத்தை நீங்கள் எதிர்பார்பதாக அது அமையும். அவளுடைய நேசத்தை நிங்கள் சோதிக்க விரும்னால் உடம்பு சுகமில்லாதது போல் பாவனை செய்யுங்கள்.
 கொஞ்சம் என்னுடைய தலையை பிடித்து விடுகிறாய என்று ஈனஸ்வரத்தில் கேளுங்கள். அவள் உங்களளுடய கன்னப் பொறிகளை தேய்த்துவிடும் போது
அவளது கரங்களைப் பற்றிக்கொண்டு பார் இப்போ வலியே இல்லை. எல்லாம் உன்னோட கைராசி. மருந்துக்கு இல்லாத சக்தி .இந்;தக் கைகளில் இருக்கு என்று சொல்லுங்கள்.
வார்தைகளைவிட அங்க அசைவுகளும் பார்வைகளும் சக்தி மிக்கவை . உன்கிட்டே ஒரு தகவல் சொல்லணும் என்கிற மாதிரி ஆரம்பியுங்கள் என்ன..?
என்று அவள் கேட்ப்பாள் உங்களுடைய காதலை பார்வையில், தழுவலில், பெருமூச்சீல், மௌனத்தில் வெளிப்படுத்துங்கள்.
சம்மதத்தை பெறுங்கள்…..
காதலைக் குறிப்பிடலாம். விருப்பத்தை வெளிப்படையாய் குறிப்பிடாதீர்கள். உங்களுடைய நேர்மையை அவள் அறிந்திருக்க வேண்டும். வேட்கையை அல்ல. சந்திப்புகளில் பொறுமையாய் நடந்து கொள்ள வேண்டும். திரும்ப திரும்ப அவள் காதலை சோதித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்டத்திற்க்குச் ( திருமனம்) செல்ல முடியும்.
 மாலை மயங்கி இருள் சூழும்போது காந்தர்வ மணதுக்கு அவளை தூண்டுங்கள். இருட்டு என்கிற கதவு உலகத்தை மூடி இருக்கின்றபோது. இன்ப உணர்வு பெண்ணுக்குள் கிளந்தெழும். அப்போது அவளால் உங்களை மறுக்க முடியாது. திருமணம், பண்டிகை, நீண்ட பயணம், பெருங்கஸ்டம் போன்ற சந்தர்ப்பங்களில் காந்தர்வ மணக்கோரிக்கையை நீங்கள் வைக்கலாம். குழப்பமுற்ற மனநிலையில் இருக்கும்போது மறுப்பு சொல்லத் தேன்றாது. அவள் அநேகமாய் சம்மதித்து விடுவாள்.
காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறத் தான் தயராக இருப்பதை தன்னுடைய வார்த்தையிலும். செயலிலும் உணர்த்திக் கொண்டிருப்பவள் அவன் காந்தர்வ மணத்துக்கு அழைக்கும்போது தட்ட முடியாமல் போகும்.
Download As PDF

காமசூத்திரம் 05: உங்களை நேசிப்பவர்

உங்களை நேசிக்கிற பெண் நேருக்கு நேர் பார்க்க மாட்டாள். கடைக்கண்ணால் நோக்குவாள். நீங்கள் பாராத சமயமாய்ப் பார்த்து மகிழ்வாள். உங்கள் மீது அக்கறையற்றவள்போல் பாசாங்கு செய்வாள். அவசியமில்லாத நிலையிலும் அளவுக்கு மீறி இழுத்து போர்த்திக் கொள்வாள்.
நீங்கள் ஏதாவது கேட்டு வைத்தால் புன்முறுவலுடன் தலை குனிவாள். பொருளற்ற வார்த்தைகளை உதிர்ப்பாள். ஆனால். உங்கள் அருகாமையை விரும்புவாள் மணிக்கணக்கில் மௌனமாய் அமந்திருப்பாள்.
அவள் தொலைவில் உங்களை கண்டதும் தனது தோழிகளிடம் அவர் என்னைப் பார்தர்னா சொல்றீங்.. என்று கேட்டு உங்கள் கவனத்தை ஈர்ப்பாள். உங்களை போகவிட்டு சிரிப்பாள். உங்கள் முன்னிலையில் யாருடைய குழந்தையையும் எடுத்துக் கொஞ்சுவாள் முத்தமிடுவாள்.
அவளுடைய உடம்பினை ஒவ்வோர் அங்கமும் உங்கள் மீது அவள் கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்தும்.
ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வருவாள். தன்னை விசேசமாய் அலங்கரித்துக் கொண்டிருப்பாள். அவளுடைய கைக்குட்டை சூடிய மலர். மோதிரம் போன்ற சின்னச் சின்னப் பொருள்களில் ஒன்றை உங்களுக்கு தரும்படி விரும்பிக் கேளுங்கள். முதலில் சற்று தயங்கினாலும் பிறகு மறுக்க மாட்டாள்.
அவளுக்கு நீங்கள் வாங்கித் தந்த ஆடை. அணிகளை எப்போதும் பிரியமாய் அணிந்து கொள்வாள். ஒரு பெண்ணின் காதலை உறுதி செய்து கொள்ள இப்படி அநேக வழிகள்.
எப்படி வெல்கிறது…?
உங்களிடம் மிகுந்த நேசம் கொண்ட பெண் எதற்க்கும் தயராகிவீடுவாள். உங்களுடன் துயிலவும். உங்களை இரகசியமாய் மணந்து கொள்ளவும். அவளுடன் நீங்கள் சதுரங்கம் ஆடும்போது தவறுதலாய் ஒரு காயை அவள் நகர்த்திவிட்டால் இது தப்பு என்று அவள் கையை பற்றுங்கள். பார்ப்பதற்க்க தவறை தடுக்கின்ற மாதிரி தெரிய வேண்டும்.
அதையே சாக்காய் வைத்து நெடுநேரம் அவள் கையை விட மாட்டீர்கள். அவளும் அதை விடுவித்து கொள்ளவதற்க்கு முயல மாட்டாள். உங்களுக்களுக்குள் ஒரு புதிய நெருக்கம் ஏற்ப்பட்டிருப்பதை இருவருமே அப்போது உணர்வீர்கள்.
Download As PDF

காமசூத்திரம் 04:நம்பிக்கையை எப்படி பெறுவது….?


மணம் முடித்தபின் மூன்று நாட்க்களவரை தரையில் படுக்க வேண்டும்”கடுமையான பிரும்மச்சாரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். காரம். இனிப்பு.
கலவாத உணவையே உண்ண வேண்டும்.
ஏழு நாட்க்கள் இரவும் பகலும் வீட்டில் இசையொலி கேட்கட்டும்.
இன்னிசை கருவிகள் முழங்கட்டும். இசை கலைஞர்கள் திரைமறைவில் இருந்து தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தட்டும்.
மணமக்கள் அந்த இசையில் லயித்தபடி இணைந்து நீராட்டும் அவர்கள் விலைமிக்க உடைகளையும். வேலைப்பாடுமிக்க ஆபரணங்களையும் அணிந்து மகிழட்டும். மணமக்கள் ( எந்த இனத்தவரை சேர்ந்தவராயினும்) தங்கள் குடும்பத்தவர்க்கும். கேளிக்கை மன்றங்களுக்கும் சென்றுவரலாம்.
பெண்ணின் நம்பிக்கையையும். பிரியத்தையும் சம்பாதித்துக் கொள்ள இது ஒரு நல்ல உத்தி. பாப்ரவ்யர் சொல்கிறார். எதைச் செய்தாலும் அதில் உங்கள் ஆசையும். விருப்பமும் வெளிப்பட வேண்டும். இல்லையேல் பெண் உங்களை ஒரு ஜடம் என்றோ. அலி என்றோதான் கருதிக்கொள்வாள் என்று.
நீங்கள் அவளை முத்தமிடவும். சீராட்டவும் வேண்டும். தீண்டுவதன் மூலமாகவே அவளுடைய நம்பிக்கையை. விருப்பத்தை படிப்படியாகப் பெற முடியும் என்கிறார் அவர். அவளுடைய கருத்துக்கு மாறாக எதையும் செய்யாதீர்கள்.
பெண்கள் பூப்போல் மென்மையானவர்கள் அவர்கள் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். நீங்கள் பிரிவில்லாமல். முரட்டுதனமாய் நடந்து கொண்டால் அவள் உடலுறைவையே வெறுக்க ஆரம்பித்து விடுவாள். முதலில் பெண்ணின் நம்பிக்கையைப் பெறுங்கள் வெகு சீக்கீரமே
அவளுடைய காலைப் பெற்று விடலாம்.
அவள் உங்கள் முன்னிலையில் ஒய்வு கொள்ள முனைந்தால் அதை அனுமதியுங்கள். அவளை மென்மையாகத் தொட்டு தடவியபடி இருக்கலாம்.அன்போடு தட்டவும் செய்யலாம். சீராட்டல்களை நீண்ட நேரத்துக்கு வைத்துக் கொள்ளக் கூடாது.
முன்பின் அறிந்திராதவர்களுடையே மணவினை நிகழ்ந்திருப்பின் கொஞ்சல்களை மேல்பாதி உடம்பில் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். அவளுடைய தொப்புள் பிரதேசத்துக்கக்கீழ் துழவா முற்ப்படும் உணர்வைக் கட்டுபடுத்தி கொள்வது நல்லது.
தம்பதிகள் இருவரும் முன்பே ஒருவருக்கொருவர் பரிச்சயம் உள்ளவர்களாயின் அவள் அறையின் வெளிச்சத்தைக் குறைக்கும்படி கோரமாட்டாள். அன்னியமாயின் இருட்டில்தான் இணைந்து கொள்ளும்படி
இருக்கும்.
வெளிச்சம் கூத்தையும் கூச்சம் வெளிச்சத்தையும்- அனுமதிப்பதில்லை.
நீங்கள் விரும்புகிற காரியத்தைச் செய்யும்படி பெண்ணைக் கட்டாயப்படுத்தாதீர்கள். அவளிடம் கெஞ்சுங்கள். மண்டியிட்டு மன்றாடுங்கள். எவ்வளவு தான் கூச்சமும். கோபமும் கொண்ட பெண்ணாயிருந்தாலும் கணவன் தன்னிடம் மண்டியிடுவதை சகித்துக் கொள்ள மாட்டாள். அவளுடைய மனம் இளகியது.
தாம்புலத்தில் நறுமண. இன்சுவை சரக்குககள் சேர்த்து மடித்து உங்கள் உதடுகளில் கவ்விக் கொள்ளுங்கள். தனது உதடுகளால் அதைக் கவ்வி எடுத்து கொள்ளும்படி அவளிடம் கூறுங்கள். அவள் தாம்புலத்தை அவ்விதம் எடுக்க முனையும்போது முத்தமிடுங்கள். அவளுக்கு மகிழ்ச்சியளிக்குமாயின் மறுப்பு சொல்ல மாட்டாள். அவளிடம் அப்பாவித்தனமாய் கேள்வி போடுங்கள். அந்தரங்கமாய் உரையாடத் தொடங்குகங்கள்.
அவள் சட்டென்று பதில் பேசிவிட மாட்டாள். நீங்கள் மீண்டும் மீ;ண்டும்
கேட்க்கும்படியிருக்கும். அதன் பிறகும் அவள் வாய் திறவாதிருந்தால் உங்கள் மனோவேகத்தைக் கட்டு படுத்தி கொள்ளுங்கள். அவளை நிர்ப்பந்திக்க வேண்டாம்.
புது மணப் பெண் கூச்சத்தில் பேசாதிருக்கலாம் அல்லது குழப்பத்தில் வார்த்தைகள் குளறலாம் ஆனால் தனது கணவனிடம் வார்த்தைகளை ஒன்று விடமால் மனதில் பதித்து கொள்வாள். அவன் பழகும் விதத்தை அப்படிய கிரகித்து கொண்டுவிடுவாள்.
நான் பார்க்க நன்றாயிருக்கிறேனா? என்னை உனக்கு பிடிச்சிருக்கா?
போன்ற கேள்விகளுக்கு அவள் நீண்ட மௌனம் சாதிப்பாள். பிறகு- மெல்ல
தலையசைப்பாள். ஒரு பதிலுக்காக இரவு முழுக்கவும் நீங்கள் காத்திருக்கும்படி ஆகலாம்.
உங்களுக்காக அவள் இனிப்பு களையோ எடுத்து வரும்போது அவளுடைய கரத்தை பற்றிக்கொள்ளுங்கள். மார்பகக் கா……….த் திருகுங்கள். இலேசாகத் தான். அவள் தடுப்பாள். மறுப்பாள் ஆனாலும் சொல்லிவிடுங்கள். நான் உன்னை இறுக தளுவிகொள்ள வேண்டும். அதன்பிறகுதான் இங்கிருந்து உன்னைப் போக விடுவேன் என்று.
அவளை உங்கள் மடி மீது இருத்திக் கொண்டு. தொப்புள் பிரதேசத்தில் கையை அலைய விடுங்கள். அவள் உதற முற்ப்படலாம். இல்லை என்னோட இந்தக் கை அதற்க்க மேல் எதுவும் செய்யாது என சொல்லுங்கள். ஆனால் மறு கையை பயன்படுத்துங்கள். அவள் என்ன இது? என்று சிணுங்குவாள் .ஓ…நான் வலது கைக்குச் சொன்னது. இது இடது கையல்லவா என்று நீங்கள் அப்பாவித் தனமாய் பதிலளிக்க அவள் தன்னை அறியாமால் சிரித்தே விடுவாள்.
அவள் உங்களை விட்டு விலக முற்ப்பட்டாலும் அப்படியிப்படி நெளிந்தாலும் பயமுறுத்துங்கள். (விளையாட்டகாத்தான்) நான் உன்னோட உதட்டிலும் மா… கடிக்கப் போகிறேன். இல்லேன்னா என் உடம்பு முழுக்க கடித்’துக்கொண்டு என் பொண்டாட்டியோட வேலை இது என்று எல்லோரிடமும் காண்பிப்பேன் என்கிற மாதிரி.
மூன்றாவது இரவில் செய்கின்ற முன்விளயாட்டக்களுக்குக்களி அவளை சங்கமத்துக்குத் தயார் செய்துவிட வேண்டும். அவளது தேகமெங்கும்..முத்தம் பதித்து…தொ…………..அன்புடன் நீவி……கொடுத்து உடைகளை களைய வேண்டும்
அவள் தடுத்தால் கொஞ்சம் தாமதியுங்கள். கெடுதலாய் எதவும் ஆகிவிடாது. என்று சொல்லுங்கள். ஆனால் கைவிரல்கள் ஒவ்வொன்றாய் விடுவிக்கட்டும் கடைசியில்- உங்கள் கட்டுப்பாட்டை நீங்கள் இழப்பீர்கள்.
உங்களுடைய கடுமையான பிரும்மாச்சார்ய விரதம் அந்தக் கணமே தோற்றுப் போகும். நீங்கள் செய்கின்றவை எல்லாம் அவளுடைய மகிழ்ச்சிக்காகத்தான் என்பதை அவளுக்க புரிய வையங்கள்; முதல் மூன்று இரவுகளிலும் அவளை நீங்கள் எப்படி நேசிக்கிறீர்கள் என்பதை விவரியுங்கள். வாழ்வில் சின்னதாய் கூட ஒரு தீங்கும் உனக்கச் செய்யமாட்டேன் என்று வாக்களியங்கள்.
அவள் மிகவும் நம்பிக்கை வைப்பாள். உங்களக்கு உயிர்த துணையாய்த் திகழ்வாள். அவளிடம் கண்ணியமாய் நடந்து கொள்ளுங்கள். அவளக்கு மகிழ்ச்pயைக் கொடுங்கள். அவளுடைய நம்பிக்கையை பெறுங்கள். அவள் எப்போதும் உங்களிடம் நேமாய் இருப்பாள்.
தன் மீது உங்களுக்கு நேசம் இருப்பதாய் எந்த அறிகுறியும் தென்படாத பட்சத்தில் அவள் மனம் கசந்து போகும். அது உங்கள் மீது பகையாய் மாற அதிக காலம் ஆகாது. நீங்கள் அவளை வலுக்கட்டயமாய் அடைய முற்ப்பட்டால் வாழ்ககை நெடுகிலும் வன்மம் தொடரும்.
தன்னுடைய உணர்வுகளை மதிக்காத ஆணுடன் உறவு வைத்து கொள்ள எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். அவள் பாதை மாறிப்போனாலும் ஆச்சரியப் படுவதற்க்கில்லை…!
    Download As PDF

    காமசூத்திரம் 03: காதல் எப்படி மலர்கிறது…?



    “காதல் எப்போது மலரும்? எப்படி மலரும்? யாருடன் மலரும்? ஏன்
    மலரும்?, எந்த வயதில் மலரும்? என்று யாருக்குமே தெரியாது. ஏனென்றால் இடம், பொருள் மற்றும் காலம் இவை மூன்றுக்குள் காதல் அடங்கிவிடாது. ஆனால் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் காதல் மலரும்.”
    நீங்கள் விரும்புகிற பெண்ணை உங்களுக்கு மணம் செய்து கொடுக்க அந்தப்
    பெண்ணின் பெற்றோர் மறுக்கலாம். அந்நிலையில் அவளிடம் மன்றாடி காந்தர்வமணதுக்கு அவளுடைய ஒப்புதலை பெறலாம்.
    அவள் வயதில் மிகவும் இளையவளாய் இருந்தால் மலர்களையும்.
    விளையாட்டுக் கருவிகளையும் பரிசாய் வழங்கலாம். நாட்டுப்புறத்தில் பிரசித்தமான விளையாட்டுக்களை அவளுடன் விளையாடலாம்.
    (சில்லு விளையாட்டு. கண்ணமூச்சி. ஓட்டம் இப்படி)
    அவள் எதையெல்லாம் கண்டு வியக்கிறாளோ. வியந்து பாராட்டுகிறாளோ அதையெல்லாம் அவளுக்கு வாங்கி கொடுங்கள். மரம்.கொம்பு. தந்தம் இவற்றில் செய்த பொம்மைகளை அவளுக்கு தந்து மகிழ்ச்சியுட்டலாம்.
    கிளிகள் . மைனாக்கள் அடைத்த கூண்டுகளையும். சங்கு. சோழி வகைகளையும் கொடுக்கலாம். நறுமணப் பொருள்கள் அடங்கிய குப்பிகள். வெள்ளி கிண்ணங்கள் கொண்ட வண்ணப் பேழையைக் கொடுக்கலாம்.
    அவள் கேட்டதை எல்லாம் வாங்கி தருவீர்கள் என்ற எண்ணத்தை
    அவளுக்குள் ஏற்ப்படுத்துங்கள். ஆமாம். ஏன் அவள் கேட்டால் உன் பெற்றோரிடம் உள்ள பயத்தால்தான் என்றோ உன் தோழிகள் பொறாமைப் படுவார்கள் என்றே சொல்லுங்கள்.

    சந்திப்போமா…?
    உன்னிடம் முக்கியமான விசயம் பேச வேண்டி இருக்கிறது என்று கூறி அவளை இரகசிய சந்திப்புக்குத் தயார் செய்யுங்கள். தங்கள் கணவரை தாங்களாகவே வரித்துக் கொண்ட சகுந்தலை. தமயந்தி போன்றவர்களின் கதையை பேசுங்கள்.
    அவளுடைய பணிப்பெண் அல்லது செவிலித்தாயின் மகளைப் புகழ்ந்தும்.
    பரிசளித்தும் வசப்படுத்துங்கள். அந்தப் பெண் உங்களுக்கு உதவிகரமாயிருப்பாள். பெண்ணுக்கு ஏதாவது ஒரு கலையில் ஈடுபாடு இருக்கும். உதரணமாக. இசையை விரும்பும் பெண்ணின் மனதில் இடம்பிடிக்க இனிமையாய் பாடுங்கள்.

    உங்கள் இருவருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்ப்பட்டு விடாதபடி கவனமாய் நடந்து கொள்ளுங்கள். மற்ற இளைஞர்களைவிட இவர் கலைகளில் தேர்ச்சி பெற்றவர். நல்லவிதமாய் பழகக் கூடியவர். நற்பண்புகள் நிரம்பியவர் என்று அவளுடைய தோழி மூலம் அவளாகச் சொல்கிற மாதிரி காதல் பெண்ணின் காதுக்கு எட்டச் செய்யுங்கள்.
    ஒரு நல்ல காதலனாக மட்டுமன்றி நல்ல கணவனாகவும் நடந்து கொள்வீர்கள் என்பதை அவளுக்கு பரிய வையுங்கள். இருவரும் கண்டு மகிழ்கிற மாதிரி சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். அவளைச் சந்திக்கச் செல்லுமுன் தூய உடைகளை அணியுங்கள்.உங்கள் முன்னிலையில் அவள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்தே உங்களுடைய ஆடை அணிகள் அவளைக் கவர்ந்திருக்கின்றனவா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்…!
    Download As PDF

    காமசூத்திரம் 02 : திருமணம் செய்து கொள்வதன் நோக்கம்


    திருமணம் செய்து கொள்வதன் நோக்கமே தர்மங்களை நிறைவேற்றுவதுதான்.
    அதற்க்கு தேவையான செல்வங்களைத் தேடிக் குவிப்பதும்தான்.
    காமம் – குழந்தை பெற உதவுகிறது.
    அர்த்தம் – குழந்தைக்கான சொத்துகளைச் சம்பாதிக்க உதவுகிறது…
    கன்னித்தன்மை இழக்காத பெண்ணை மணந்து காதலை. பாலுறவு மகிழ்ச்சியை அனுபவித்திரு என்கிறது வேதம். மணவினை எப்படி நிகழ
    வேண்டும் என்பதற்க்குப் பல நியமங்களையும் வேத நூல்கள் செய்து வைத்திருக்கின்றன.
    • ஓர் ஆண் தன்னைவிட மூன்று வயதேனும் குறைந்த பெண்ணை மணக்க வேண்டும்.
    • அவளுடைய பெற்றோர் தங்கள் மகளைக் கட்டுப்பாடாக வளந்திருக்க வேண்டும்.
    • அவளுக்கு அத்தைமார், மாமாமார் என்று சொந்த பந்தங்கள் இருக்க வேண்டும்.
    • பெண்ணின் குடும்பம் வசதியாகவும். கௌரவமான தாயும் இருக்க வேண்டும்.
    • அவளுடைய குடும்பத்தவரும் உறவினர்களும் நாட்டில் பிரபலமானவர்களோடு பழக்கம் உள்ளவர்களாயிருக்க வேண்டும். ( கிழிஞ்சுது போ…..)
    • பெண் அழகும், நன்னடத்தையும் கொண்டவளாயிருப்பது அவசியம்.
    • ஆரோக்கியமும், கவர்ச்சியும், தேவை. நல்ல பற்கள், நகங்கள், காதுகள், கண்கள், மார்பகங்கள், ஆகியவை விளக்கமாய் அமைந்திருக்க வேண்டும். உடம்பில் மாசு. மாறு இருக்க கூடாது.
    ஓர் ஆண் மகனுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்விக்கிற புனித கடமை அவனுடைய பெற்றோர்களும். உறவினர்களுக்கும்
    உண்டு. தங்கள் மகனுக்குப் பெண்ணைத் தரும்படி பையனின் பெற்றோர்கள்
    எவ்வகையிலும் முயற்ச்சிக்கலாம். பெண் வீட்டாரிடம் பையனுடய வம்சாவழி. குணநலன் பற்றிப் புகழ்ந்து பேசலாம்.
    இரண்டு குடும்பத்தார்கள் மட்டும் தங்களுக்கள் பேசி திருமணத்தை உறுதி செய்து விடக் கூடாது. அவர்களுடைய உற்றார் உறவினர்கள் முன்னிலையில்
    அந்த திருமணம் நிச்சயிக்கப்பட வேண்டும். மற்றவர்களின் கருத்தும் அறியப்பட வேண்டும்.
    • ”மணப்பெண் சோம்போறித்தனமுடையவளா. முன்பே வேறொருவனை விரும்பியவளா. ஏறுமாறனவளா நரம்பு கோளாறு உடையவளா என்பதையெல்லாம் சோதித்தறிய வேண்டும்.
    • பொய்யான கூந்தல் உடையவளை. கோடையில் கை கால் வியர்ப்பவளை ஆணைப்போல் தோற்றம் கொண்டவளை விலக்க வேண்டும்.
    • ஊமையை, கூன் விழுந்தவளை, மிகப்பெரிய ”பிருஸ்டபாகம் ”கொண்டவளைத் தவிர்க்க வேண்டும்.”
    • ”அமங்கலமான பெயர்கள் உடைய பெண்ணை. ஒரு நதி, மரம் அல்லது நட்சத்திரத்தின் பெயர் கொண்ட வளை மணக்கக் கூடாது.
    • ”லா” அல்லது”ரா” என்று முடிகிற பெயருடைய பெண்ணையும் மணக்க கூடாது.
    • தன்னைவிட வயதில் மிகவும் இளைய பெண்ணை மணப்பதும் தவறு.
    • குழந்தைப் பருவத்தில் தன்னோடு விளையாடியவளையும் மணப்பது தவறு.
    பெற்றோர்கள் தங்களுடைய பெண்ணை சமூக நிகழ்ச்சிகளுக்கும். விழாக்களும் அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுடைய வீட்டில் ஒரு பெண் திருமணத்துக்குத் தயாராயிருக்கிறாள் என்பதை அதன் மூலம் மற்றவர்களுக்குத் தெரியவைக்க முடியும். அந்தப் பெண்ணைத் தங்களுடைய மகனுக்க வரிக்க எண்ணம் குடும்பத்தார் அவர்களுடன் கலந்து பேசி. விருந்துண்ண அது வகை செய்யும்.
    தங்களுடைய பெண்ணுக்கு ஏற்ற வரனாக இவன் இருப்பான் என்று உறுதிப்படாதவரை அந்தப் பையனுடைய குடும்பத்தாரிடம் எது பற்றியும் வாக்களிக்கக் கூடாது. எங்கள் உறவினரிடம் கலந்து பேசி இன்னும் சில நாட்களில் பதிலளிக்கிறோம் என்று சொல்லி விடலாம்.
    தங்களுடைய நாடு மற்றும் குடும்ப சம்பிரதாயங்களக்க ஏற்ப மணவினை நிகழ்த்தபட வேண்டும். ஒருவர் தம்முடைய இனத்தாருடன் மட்டுமே நட்ப்பு கொள்ளவும். மணம் பேசி முடிக்கவும் வேண்டும். தனது அந்தஸ்தைவிட உயர்ந்த இடத்தில் பெண்ணெடுத்தால் சுய கௌரவத்தை இழக்கும்படி ஆகும்.
    ஒரு வேலைக்காரனைப்போல் நடத்தப்படும் நிலைதான் இருக்கும். தன்னைவிட அந்தஸ்து குறைந்த இடத்தில் பெண்ணெடுத்தால் அவளுடைய குடும்பத்தை கொடுமைப்படுத்த நேரிடலாம். சம அந்தஸ்து இல்லாத திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.
    Download As PDF

    காமசூத்திரம் 01


    • தர்மமே அனைத்துக்கும் மூலம். தர்மத்திலிருந்து அர்த்தம் வளர்ச்சியுற்றது காமம் மலர்ச்சி கண்டது. ஓர் இந்துவின்வாழ்கை முறை இம்மூன்றையும் குறிக்கோள்களாய் கொண்டு இயங்கும்.தர்மம் என்பது ஆன்மிக மற்றும் நெறி சார்ந்த கடமைகள். அர்த்தம் என்பது இகழ்வாழ்விற்க்கான பொருள்களும். அறிவும் பெறுதல். காமம் என்பது புலன்களின் இன்பம்.
    • இந்த உலகத்தை படைத்தவர் முதலில் பிரஜாபதி என்றும் பிற்பாடு அவரே பிரும்மா என்றும் அறியப்பட்டார். மக்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி தர்மம், அர்த்தம், காமத்தைக்கொண்டு புனிதப்படுத்தி கொள்வது என்பதை அவர் இலட்சம் பாடல்களில் விவரித்திருக்கிறார்.
    • நம்முடைய மூதாதையான மனுவாகப்பட்டவர் தர்ம உபதேசங்களைச் செய்தார். அதுவே மனுநீதி என்பது. அர்த்தம் பற்றி பிருகஸ்பதி எழுதினார். நந்தி பகவான் காமசாஸ்திரத்தை ஆயிரம் அத்தியாயங்களில் வடிவமைத்தார்.
    • உத்தலாகரின் மகனான ஸ்வேதகேது காமசூத்திரத்தை ஜநூறு அத்தியாயங்களில் உரைத்தார் பாப்ரவ்யர் அந்த ஞானத்தை நூற்று ஜம்பது அந்தியாயங்களில் சுருக்கித் தந்தார். அவை ஏழு தனி தனி தலைப்புக்களில் வகைப்படுத்தப்பட்டன.
    • தியானம், உடலுறவு, காதல், திருமணம், கள்ள உறவு, விலைமகளிர் மற்றும் மோக ஊக்கிகள் ஆகியவை அந்த ஏழுமாகும்.
    • ஒரு கட்டத்திலும். காமத்தை ஒரு கட்டத்திலும் அவன் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நேரத்திற்கு ஒன்று என வைத்து கொண்டால தானே எதையும் உருப்படியாக செய்ய முடியும். அவன் தன்னுடைய சிறுவயதில் அந்த பாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
    • இளமையில் காமத்தையும். முதுமையில் தர்மத்தையும் அனுசரிக்க வேண்டும். இந்த அமைப்பை அல்லது ஒழுங்கை வாத்ஸ்யாயனர் மாற்றினார். தர்மம், அர்த்தம், காமம் இவற்றை நீங்கள் உங்களால் முடிந்த போதெல்லாம். முடிந்த விதத்தில் எல்லாம் செய்யலாம் என்கின்றார்.
    • தர்மம் என்பது வேதத்தில் விதித்தபடி நடப்பது. உதரணமாக புலால் மறுப்பு, யக்ஞம், யோக சாஸ்திரம் பயிலல் மிகச் சிறந்த குருமார்களை அண்டியிருத்தல், அர்த்தம் என்பது கல்வி, வீடு, நிலம், தானியம், கால்நடை, ஆபரணங்கள், ஆடைகள், நண்பர்கள், கலைகள், செல்வம்சேர்த்தல் பற்றியதாகும்.
    • காமம் என்பது உடல், மனம், ஆன்மா ஆனுபவிக்கிற மகிழ்ச்சி. இது ஒரு நுட்ப்பமான உணர்வு கண்கள், நாசி, நாக்கு, செவிகள், சருமம், இவற்றை விழிப்படையச் செய்யும் உணர்வதற்க்கும் உணரப்படுவதற்க்கும் இடையில் காமம் முகழ்கிறது.
    • தர்மமே அனைத்துக்கும் மூலம் என்று முன்பே குறிப்பிட்டோம். அதனால் தர்மத்தை முதலிலும் தர்மத்துக்கு பின் அர்த்தத்தையும், அர்த்தத்துக்குபின் காமத்தையும் அமைத்து கொள்ள வேண்டும்.
    • அர்த்தம் – புற வாழ்க்கை காமம் – அக வாழ்க்கை சம்பந்தப்பட்டது.
    வாத்ஸாயனரின் காமசாஸ்திரம்…பக்குவம் பெற படியுங்கள்…இந்த ஆவணப்பதிப்பில்...

    .



    Download As PDF